Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, February 18, 2023

பிப்ரவரி 19 : நற்செய்தி வாசகம்உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-48

பிப்ரவரி 19 : நற்செய்தி வாசகம்

உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-48
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ ‘கண்ணுக்குக் கண்', ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.

‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்.

நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

பிப்ரவரி 19 : இரண்டாம் வாசகம்நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16-23

பிப்ரவரி 19 :  இரண்டாம் வாசகம்

நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16-23
சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, “ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்.” மேலும் “ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.”

எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும் உங்களுக்கு உரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்கு உரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 யோவா 2: 5
அல்லேலூயா, அல்லேலூயா!

 கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா.

பிப்ரவரி 19 : பதிலுரைப் பாடல்திபா 103: 1-2. 3-4. 8,10. 12-13 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

பிப்ரவரி 19 :  பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 8,10. 12-13 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். ‘ - பல்லவி

8
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
10
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி

12
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.
13
தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். - பல்லவி

பிப்ரவரி 19 : முதல் வாசகம்உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக!லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 17-18

பிப்ரவரி 19 :  முதல் வாசகம்

உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக!

லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 17-18
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 19th : Gospel Love your enemiesA Reading from the Holy Gospel according to St.Matthew 5: 38-48

February 19th :  Gospel 

Love your enemies

A Reading from the Holy Gospel according to St.Matthew 5: 38-48 
Jesus said to his disciples: ‘You have learnt how it was said: Eye for eye and tooth for tooth. But I say this to you: offer the wicked man no resistance. On the contrary, if anyone hits you on the right cheek, offer him the other as well; if a man takes you to law and would have your tunic, let him have your cloak as well. And if anyone orders you to go one mile, go two miles with him. Give to anyone who asks, and if anyone wants to borrow, do not turn away.
  ‘You have learnt how it was said: You must love your neighbour and hate your enemy. But I say this to you: love your enemies and pray for those who persecute you; in this way you will be sons of your Father in heaven, for he causes his sun to rise on bad men as well as good, and his rain to fall on honest and dishonest men alike. For if you love those who love you, what right have you to claim any credit? Even the tax collectors do as much, do they not? And if you save your greetings for your brothers, are you doing anything exceptional? Even the pagans do as much, do they not? You must therefore be perfect just as your heavenly Father is perfect.’

The Word of the Lord.

February 19th : First ReadingYou must love your neighbour as yourselfLeviticus 19:1-2,17-18

February 19th :  First Reading

You must love your neighbour as yourself

Leviticus 19:1-2,17-18 
The Lord spoke to Moses; he said: ‘Speak to the whole community of the sons of Israel and say to them:
  ‘“Be holy, for I, the Lord your God, am holy.
  ‘“You must not bear hatred for your brother in your heart. You must openly tell him, your neighbour, of his offence; this way you will not take a sin upon yourself. You must not exact vengeance, nor must you bear a grudge against the children of your people. You must love your neighbour as yourself. I am the Lord.”’

The Word of the Lord.

February 19th : Second ReadingYou belong to Christ and Christ belongs to GodA Reading from the First letter of St.Paul to the Corinthians 3:16-23

February 19th :  Second Reading

You belong to Christ and Christ belongs to God

A Reading from the First letter of St.Paul to the Corinthians 3:16-23 
Didn’t you realise that you were God’s temple and that the Spirit of God was living among you? If anybody should destroy the temple of God, God will destroy him, because the temple of God is sacred; and you are that temple.
  Make no mistake about it: if any one of you thinks of himself as wise, in the ordinary sense of the word, then he must learn to be a fool before he really can be wise. Why? Because the wisdom of this world is foolishness to God. As scripture says: The Lord knows wise men’s thoughts: he knows how useless they are; or again: God is not convinced by the arguments of the wise. So there is nothing to boast about in anything human: Paul, Apollos, Cephas, the world, life and death, the present and the future, are all your servants; but you belong to Christ and Christ belongs to God.

The Word of the Lord.

Gospel Acclamation 

Alleluia, alleluia!

If anyone loves me he will keep my word,
and my Father will love him,
and we shall come to him.
Alleluia!

February 19th : Responsorial PsalmPsalm 102(103):1-4,8,10,12-13 The Lord is compassion and love.

February 19th :  Responsorial Psalm

Psalm 102(103):1-4,8,10,12-13 

The Lord is compassion and love.
My soul, give thanks to the Lord
  all my being, bless his holy name.
My soul, give thanks to the Lord
  and never forget all his blessings.

The Lord is compassion and love.

It is he who forgives all your guilt,
  who heals every one of your ills,
who redeems your life from the grave,
  who crowns you with love and compassion.

The Lord is compassion and love.

The Lord is compassion and love,
  slow to anger and rich in mercy.
He does not treat us according to our sins
  nor repay us according to our faults.

The Lord is compassion and love.

As far as the east is from the west
  so far does he remove our sins.
As a father has compassion on his sons,
  the Lord has pity on those who fear him.

The Lord is compassion and love.