Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, January 12, 2022

சனவரி 13 : நற்செய்தி வாசகம்தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

சனவரி  13 : நற்செய்தி வாசகம்

தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பிவிட்டார்.

ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்துகொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 13 : பதிலுரைப் பாடல்திபா 44: 9-10. 13-14. 23-24 (பல்லவி: 26b)பல்லவி: உமது பேரன்பை முன்னிட்டு ஆண்டவரே, எங்களை மீட்டருளும்.

சனவரி  13 : பதிலுரைப் பாடல்

திபா 44: 9-10. 13-14. 23-24 (பல்லவி: 26b)

பல்லவி: உமது பேரன்பை முன்னிட்டு ஆண்டவரே, எங்களை மீட்டருளும்.
9
இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்; இழிவுபடுத்திவிட்டீர். எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர்.
10
எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படி செய்தீர். எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர். - பல்லவி

13
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்; எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர்.
14
வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்; ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைத்து நகைக்கின்றனர். - பல்லவி

23
என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்; எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.
24
நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக்கொள்கின்றீர்? எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்துவிடுகின்றீர்? - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா!

 இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

சனவரி 13 : முதல் வாசகம்கடவுளின் பேழை பிடிபட்டது. இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டனர்.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11

சனவரி  13 :  முதல் வாசகம்

கடவுளின் பேழை பிடிபட்டது. இஸ்ரயேலர் தோற்கடிக்கப்பட்டனர்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 4: 1-11

அந்நாள்களில்
இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினர், பெலிஸ்தியரும் அபேக்கில் பாளையம் இறங்கினர். பெலிஸ்தியர் இஸ்ரயேலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல, போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுள் நாலாயிரம் பேரைப் போர்க்களத்தில் வெட்டி வீழ்த்தினர்.

வீரர்கள் பாளையத்திற்குத் திரும்பியபோது, இஸ்ரயேலின் பெரியோர் கூறியது: “இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள் கையினின்று நம்மைக் காக்கும்”.

ஆகவே வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி, கெருபுகளின்மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டுவரச் செய்தனர். ஏலியின் இரு புதல்வர்களான ஒப்னியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேலர் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.

இந்த ஆரவாரத்தைக் கேட்டதும் பெலிஸ்தியர், “எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்?” என்று வினவினர். ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்தினுள் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டனர். அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு, “கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஐயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை! நமக்கு ஐயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மைக் காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலைநிலத்தில் பல்வேறு வாதைகளால் துன்புறுத்தியவர்! பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தது போல, நீங்களும் எபிரேயருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்!” என்றனர்.

பெலிஸ்தியர் மீண்டும் போர்தொடுத்தனர். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்குத் தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் மாண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 13th : Gospel The leprosy left the man at once, and he was cured.A Reading from the Holy Gospel according to St.Mark 1: 40-45

January 13th :  Gospel 

The leprosy left the man at once, and he was cured.

A Reading from the Holy Gospel according to St.Mark 1: 40-45 
A leper came to Jesus and pleaded on his knees: ‘If you want to’ he said ‘you can cure me.’ Feeling sorry for him, Jesus stretched out his hand and touched him. ‘Of course I want to!’ he said. ‘Be cured!’ And the leprosy left him at once and he was cured. Jesus immediately sent him away and sternly ordered him, ‘Mind you say nothing to anyone, but go and show yourself to the priest, and make the offering for your healing prescribed by Moses as evidence of your recovery.’ The man went away, but then started talking about it freely and telling the story everywhere, so that Jesus could no longer go openly into any town, but had to stay outside in places where nobody lived. Even so, people from all around would come to him.

The Word of the Lord.

January 13th : Responsorial PsalmPsalm 43(44):10-11,14-15,24-25 Redeem us, O Lord, because of your love.

January 13th :  Responsorial Psalm

Psalm 43(44):10-11,14-15,24-25 

Redeem us, O Lord, because of your love.
Yet now you have rejected us, disgraced us;
  you no longer go forth with our armies.
You make us retreat from the foe
  and our enemies plunder us at will.

Redeem us, O Lord, because of your love.

You make us the taunt of our neighbours,
  the laughing-stock of all who are near.
Among the nations, you make us a byword,
  among the peoples a thing of derision.

Redeem us, O Lord, because of your love.

Awake, O Lord, why do you sleep?
  Arise, do not reject us for ever!
Why do you hide your face
  and forget our oppression and misery?

Redeem us, O Lord, because of your love.

Gospel Acclamation Ps118:88

Alleluia, alleluia!
Because of your love give me life,
and I will do your will.
Alleluia!

January 13th : First Reading Israel is defeated and the ark of God is captured.1 Samuel 4: 1-11

January 13th : First Reading 

Israel is defeated and the ark of God is captured.

1 Samuel 4: 1-11 
It happened at that time that the Philistines mustered to fight Israel and Israel went out to meet them in battle, encamping near Ebenezer while the Philistines were encamped at Aphek. The Philistines drew up their battle line against Israel, the battle was hotly engaged, and Israel was defeated by the Philistines and about four thousand of their army were killed on the field. The troops returned to the camp and the elders of Israel said, ‘Why has the Lord allowed us to be defeated today by the Philistines? Let us fetch the ark of our God from Shiloh so that it may come among us and rescue us from the power of our enemies.’’ So the troops sent to Shiloh and brought away the ark of the Lord of Hosts, he who is seated on the cherubs; the two sons of Eli, Hophni and Phinehas, came with the ark. When the ark of the Lord arrived in the camp, all Israel gave a great shout so that the earth resounded. When the Philistines heard the noise of the shouting, they said, ‘What can this great shouting in the Hebrew camp mean?’ And they realised that the ark of the Lord had come into the camp. At this the Philistines were afraid; and they said, ‘God has come to the camp.’ ‘Alas!’ they cried ‘This has never happened before. Alas! Who will save us from the power of this mighty God? It was he who struck down Egypt with every kind of plague! But take courage and be men, Philistines, or you will become slaves to the Hebrews as they have been slaves to you. Be men and fight.’ So the Philistines joined battle and Israel was defeated, each man fleeing to his tent. The slaughter was great indeed, and there fell of the Israelites thirty thousand foot soldiers. The ark of God was captured too, and the two sons of Eli died, Hophni and Phinehas.

The Word of the Lord.