Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, December 1, 2021

டிசம்பர் 2 : நற்செய்தி வாசகம்என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27.

டிசம்பர் 2 :  நற்செய்தி வாசகம்

என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27.
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 2 : பதிலுரைப் பாடல்திபா 118: 1,8-9. 19-21. 25-27a (பல்லவி: 26a)பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.அல்லது: அல்லேலூயா.

டிசம்பர் 2 : பதிலுரைப் பாடல்

திபா 118: 1,8-9. 19-21. 25-27a (பல்லவி: 26a)

பல்லவி: ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்.

அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
8
மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
9
உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! - பல்லவி

19
நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20
ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். - பல்லவி

25
ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!
26
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27a
ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எசா 55: 6

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். அல்லேலூயா

டிசம்பர் 2 : முதல் வாசகம்மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6

டிசம்பர் 2 :   முதல் வாசகம்

மெசியாமீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 1b-6
நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்; வாயில்களைத் திறந்துவிடுங்கள்; அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்; உம்மீது நம்பிக்கை உடையவர்கள்; அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.

ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்; ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர், என்றும் உள்ள கற்பாறை! உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 2nd : GospelThe wise man built his house on a rock.A Reading from the Holy Gospel according to St. Matthew 7:21, 24-27

December 2nd  : Gospel

The wise man built his house on a rock.

A Reading from the Holy Gospel according to St. Matthew 7:21, 24-27 
Jesus said to his disciples: ‘It is not those who say to me, “Lord, Lord,” who will enter the kingdom of heaven, but the person who does the will of my Father in heaven. Therefore, everyone who listens to these words of mine and acts on them will be like a sensible man who built his house on rock. Rain came down, floods rose, gales blew and hurled themselves against that house, and it did not fall: it was founded on rock. But everyone who listens to these words of mine and does not act on them will be like a stupid man who built his house on sand. Rain came down, floods rose, gales blew and struck that house, and it fell; and what a fall it had!’

The Word of the Lord.

December 2nd : Responsorial PsalmPsalm 117(118):1,8-9,19-21,25-27 ©Blessed in the name of the Lord is he who comes.or Alleluia.

December 2nd  :  Responsorial Psalm

Psalm 117(118):1,8-9,19-21,25-27 ©

Blessed in the name of the Lord is he who comes.
or Alleluia.
Give thanks to the Lord for he is good,
  for his love has no end.
It is better to take refuge in the Lord
  than to trust in men;
it is better to take refuge in the Lord
  than to trust in princes.

Blessed in the name of the Lord is he who comes.
or Alleluia.

Open to me the gates of holiness:
  I will enter and give thanks.
This is the Lord’s own gate
  where the just may enter.
I will thank you for you have answered
  and you are my saviour.

Blessed in the name of the Lord is he who comes.
or Alleluia.

O Lord, grant us salvation;
  O Lord, grant success.
Blessed in the name of the Lord
  is he who comes.
We bless you from the house of the Lord;
  the Lord God is our light.

Blessed in the name of the Lord is he who comes.
or Alleluia.

Gospel Acclamation Is40:9-10

Alleluia, alleluia!
Shout with a loud voice, joyful messenger to Jerusalem.
Here is the Lord God coming with power.
Alleluia!

December 2nd: First Reading Open the gates; let the upright nation come in.A Reading from the Book of Isaiah 26: 1-6.

December 2nd:  First Reading 

Open the gates; let the upright nation come in.

A Reading from the Book of Isaiah 26: 1-6. 
That day, this song will be sung in the land of Judah:
We have a strong city;
to guard us he has set
wall and rampart about us.
Open the gates! Let the upright nation come in,
she, the faithful one
whose mind is steadfast, who keeps the peace,
because she trusts in you.
Trust in the Lord for ever,
for the Lord is the everlasting Rock;
he has brought low those who lived high up
in the steep citadel;
he brings it down, brings it down to the ground,
flings it down in the dust:
the feet of the lowly, the footsteps of the poor
trample on it.

The Word of the Lord.