Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, December 2, 2021

டிசம்பர் 3 : நற்செய்தி வாசகம்இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31

டிசம்பர் 3  : நற்செய்தி வாசகம்

இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31
அக்காலத்தில்

இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 3 : பதிலுரைப் பாடல்திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

டிசம்பர் 3  :  பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
1
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

இதோ, நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார். அல்லேலூயா.

டிசம்பர் 3 : திருவருகைக்காலம் முதல் வாரம் - வெள்ளிமுதல் வாசகம்ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

டிசம்பர் 3  :  திருவருகைக்காலம் முதல் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்

ஆண்டவருக்குரிய நாளில், பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24
இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.

ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 3rd : Gospel 'Take care that no-one learns about this'A Reading from the Holy Gospel according to St. Matthew 9: 27-31

December 3rd : Gospel 

'Take care that no-one learns about this'

A Reading from the Holy Gospel according to St. Matthew 9: 27-31 
As Jesus went on his way two blind men followed him shouting, ‘Take pity on us, Son of David.’ And when Jesus reached the house the blind men came up with him and he said to them, ‘Do you believe I can do this?’ They said, ‘Sir, we do.’ Then he touched their eyes saying, ‘Your faith deserves it, so let this be done for you.’ And their sight returned. Then Jesus sternly warned them, ‘Take care that no one learns about this.’ But when they had gone, they talked about him all over the countryside.

The Word of the Lord.

December 3rd : Responsorial PsalmPsalm 26(27):1,4,13-14 The Lord is my light and my help.

December 3rd :  Responsorial Psalm

Psalm 26(27):1,4,13-14 

The Lord is my light and my help.

The Lord is my light and my help;
  whom shall I fear?
The Lord is the stronghold of my life;
  before whom shall I shrink?
The Lord is my light and my help.

There is one thing I ask of the Lord,
  for this I long,
to live in the house of the Lord,
  all the days of my life,
to savour the sweetness of the Lord,
  to behold his temple.

The Lord is my light and my help.

I am sure I shall see the Lord’s goodness
  in the land of the living.
Hope in him, hold firm and take heart.
  Hope in the Lord!

The Lord is my light and my help.

Gospel Acclamation cf.Is45:8

Alleluia, alleluia!

Send victory like a dew, you heavens,
  and let the clouds rain it down.
Let the earth open and bring forth the saviour.
Alleluia!

December 3rd : First Reading In a very short time, the deaf will hear and the eyes of the blind will see.A Reading from the Book of Isaiah 29: 17-24

December 3rd :  First Reading 

In a very short time, the deaf will hear and the eyes of the blind will see.

A Reading from the Book of  Isaiah 29: 17-24 
The Lord says this:
In a short time, a very short time,
shall not Lebanon become fertile land
and fertile land turn into forest?
The deaf, that day,
will hear the words of a book
and, after shadow and darkness,
the eyes of the blind will see.
But the lowly will rejoice in the Lord even more
and the poorest exult in the Holy One of Israel;
for tyrants shall be no more, and scoffers vanish,
and all be destroyed who are disposed to do evil:
those who gossip to incriminate others,
those who try at the gate to trip the arbitrator
and get the upright man’s case dismissed for groundless reasons.
Therefore the Lord speaks,
the God of the House of Jacob,
Abraham’s redeemer:
No longer shall Jacob be ashamed,
no more shall his face grow pale,
for he shall see what my hands have done in his midst,
he shall hold my name holy.
They will hallow the Holy One of Jacob,
stand in awe of the God of Israel.
Erring spirits will learn wisdom
and murmurers accept instruction.

The Word of the Lord.