Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, July 2, 2022

ஜூலை 3 : நற்செய்தி வாசகம்நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி இல்லத்தாரிடம் தங்கும்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12, 17-20

ஜூலை 3  : நற்செய்தி வாசகம்

நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி இல்லத்தாரிடம் தங்கும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12, 17-20
அக்காலத்தில் இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ``அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், `இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள்.

ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.

அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் அதன் வீதிகளில் சென்று, `எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள்.

அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, ``ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன'' என்றனர்.

அதற்கு அவர், ``வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம்.

மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்'' என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 3 : இரண்டாம் வாசகம்என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 14-18

ஜூலை 3  : இரண்டாம் வாசகம்

என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 14-18
சகோதரர் சகோதரிகளே, நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.

விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது. இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!

இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

கொலோ 3: 15ய,16ய

அல்லேலூயா, அல்லேலூயா! 

கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அல்லேலூயா.

ஜூலை 3 : பதிலுரைப் பாடல்திபா 66: 1-3ய. 4-5. 6-7ய. 16,20 (பல்லவி: 1)பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!

ஜூலை 3  : பதிலுரைப் பாடல்

திபா 66: 1-3ய. 4-5. 6-7ய. 16,20 (பல்லவி: 1)

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3ய கடவுளை நோக்கி `உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை' என்று சொல்லுங்கள்.

பல்லவி

4 `அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். 5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. 

பல்லவி

6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். 7ய அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! 

பல்லவி

16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! 

பல்லவி

ஜூலை 3 : முதல் வாசகம்ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14உ

ஜூலை 3  : முதல் வாசகம்

ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14உ
எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்.

அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன். நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.

இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

A Reading from the Holy Gospel according to St.Luke 10:1-12,17-20

July 3rd :  Gospel

Your peace will rest on that man

A Reading from the Holy Gospel according to St.Luke 10:1-12,17-20 ©
The Lord appointed seventy-two others and sent them out ahead of him, in pairs, to all the towns and places he himself was to visit. He said to them, ‘The harvest is rich but the labourers are few, so ask the Lord of the harvest to send labourers to his harvest. Start off now, but remember, I am sending you out like lambs among wolves. Carry no purse, no haversack, no sandals. Salute no one on the road.
  ‘Whatever house you go into, let your first words be, “Peace to this house!” And if a man of peace lives there, your peace will go and rest on him; if not, it will come back to you. Stay in the same house, taking what food and drink they have to offer, for the labourer deserves his wages; do not move from house to house.
  ‘Whenever you go into a town where they make you welcome, eat what is set before you. Cure those in it who are sick, and say, “The kingdom of God is very near to you.” But whenever you enter a town and they do not make you welcome, go out into its streets and say, “We wipe off the very dust of your town that clings to our feet, and leave it with you. Yet be sure of this: the kingdom of God is very near.” I tell you, on that day it will not go as hard with Sodom as with that town.’
  The seventy-two came back rejoicing. ‘Lord,’ they said ‘even the devils submit to us when we use your name.’ He said to them, ‘I watched Satan fall like lightning from heaven. Yes, I have given you power to tread underfoot serpents and scorpions and the whole strength of the enemy; nothing shall ever hurt you. Yet do not rejoice that the spirits submit to you; rejoice rather that your names are written in heaven.’

The Word of the Lord.

July 3rd : Second Reading The marks on my body are those of JesusA Reading from the Letter of St.Paul to the Galatians 6: 14-18

July 3rd :  Second Reading
 
The marks on my body are those of Jesus

A Reading from the Letter of St.Paul to the Galatians 6: 14-18 
The only thing I can boast about is the cross of our Lord Jesus Christ, through whom the world is crucified to me, and I to the world. It does not matter if a person is circumcised or not; what matters is for him to become an altogether new creature. Peace and mercy to all who follow this rule, who form the Israel of God.
  I want no more trouble from anybody after this; the marks on my body are those of Jesus. The grace of our Lord Jesus Christ be with your spirit, my brothers. Amen.

The Word of the Lord.

Gospel Acclamation Jn15:15

Alleluia, alleluia!

I call you friends, says the Lord,
because I have made known to you
everything I have learnt from my Father.
Alleluia!

July 3rd : Responsorial PsalmPsalm 65(66):1-7,16,20 ©Cry out with joy to God, all the earth.

July 3rd :  Responsorial Psalm

Psalm 65(66):1-7,16,20 ©

Cry out with joy to God, all the earth.
Cry out with joy to God all the earth,
  O sing to the glory of his name.
O render him glorious praise.
  Say to God: ‘How tremendous your deeds!

Cry out with joy to God, all the earth.

‘Before you all the earth shall bow;
  shall sing to you, sing to your name!’
Come and see the works of God,
  tremendous his deeds among men.

Cry out with joy to God, all the earth.

He turned the sea into dry land,
  they passed through the river dry-shod.
Let our joy then be in him;
  he rules for ever by his might.

Cry out with joy to God, all the earth.

Come and hear, all who fear God.
  I will tell what he did for my soul:
Blessed be God who did not reject my prayer
  nor withhold his love from me.

Cry out with joy to God, all the earth.

July 3rd : First Reading Towards Jerusalem I send flowing peace, like a riverA Reading from the Book of Isaiah 66: 10-14

July 3rd : First Reading 

Towards Jerusalem I send flowing peace, like a river

A Reading from the Book of Isaiah 66: 10-14 ©
Rejoice, Jerusalem,
be glad for her, all you who love her!
Rejoice, rejoice for her,
all you who mourned her!
That you may be suckled, filled,
from her consoling breast,
that you may savour with delight
her glorious breasts.
For thus says the Lord:
Now towards her I send flowing
peace, like a river,
and like a stream in spate
the glory of the nations.
At her breast will her nurslings be carried
and fondled in her lap.
Like a son comforted by his mother
will I comfort you.
And by Jerusalem you will be comforted.
At the sight your heart will rejoice,
and your bones flourish like the grass.
To his servants the Lord will reveal his hand.

The Word of the Lord.