Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, February 13, 2022

பிப்ரவரி 14 : நற்செய்தி வாசகம்இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்?✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 11-13

பிப்ரவரி 14 :  நற்செய்தி வாசகம்

இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்?

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 11-13
அக்காலத்தில்

பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். அவர் பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 14 : பதிலுரைப் பாடல்திபா 119: 67-68. 71-72. 75-76 (பல்லவி: 77a)பல்லவி: நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் ஆண்டவரே, கிடைப்பதாக.

பிப்ரவரி 14 :  பதிலுரைப் பாடல்

திபா 119: 67-68. 71-72. 75-76 (பல்லவி: 77a)

பல்லவி: நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் ஆண்டவரே, கிடைப்பதாக.
67
நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.
68
நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். - பல்லவி

71
எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்.
72
நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது. - பல்லவி

75
ஆண்டவரே! உம் நீதித் தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.
76
எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

பிப்ரவரி 14 : முதல் வாசகம்உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11

பிப்ரவரி 14 :  முதல் வாசகம்

உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது, மனவுறுதி உண்டாகும். அப்போது நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-11
சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி எழுதுவது:

என் சகோதரர் சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள். உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.

உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். ஆனால் நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். எனவே இத்தகைய இரு மனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும்.

தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள் தாங்கள் உயர்வு பெறும்போது மகிழ்ச்சி அடைவார்களாக! செல்வச் செழிப்பில் இருப்பவர்கள் தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக! ஏனெனில் செல்வர்கள் புல்வெளிப் பூவைப் போல மறைந்தொழிவார்கள். கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும். அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 14th : Gospel No sign shall be given to this generationA Reading from the Holy Gospel according to St, Mark 8: 11-13

February 14th :  Gospel 

No sign shall be given to this generation

A Reading from the Holy Gospel according to St, Mark 8: 11-13 
The Pharisees came up and started a discussion with Jesus; they demanded of him a sign from heaven, to test him. And with a sigh that came straight from the heart he said, ‘Why does this generation demand a sign? I tell you solemnly, no sign shall be given to this generation.’ And leaving them again and re-embarking, he went away to the opposite shore.

The Word of the Lord.

February 14th : Responsorial PsalmPsalm 118(119):67-68,71-72,75-76 ©Let your love come to me and I shall live

February 14th :  Responsorial Psalm

Psalm 118(119):67-68,71-72,75-76 ©

Let your love come to me and I shall live.
Before I was afflicted I strayed
  but now I keep your word.
You are good and your deeds are good;
  teach me your statutes.

Let your love come to me and I shall live.

It was good for me to be afflicted,
  to learn your statutes.
The law from your mouth means more to me
  than silver and gold.

Let your love come to me and I shall live.

Lord, I know that your decrees are right,
  that you afflicted me justly.
Let your love be ready to console me
  by your promise to your servant.

Let your love come to me and I shall live.

Gospel Acclamation Ps94:8

Alleluia, alleluia!
Harden not your hearts today,
but listen to the voice of the Lord.
Alleluia!

February 14th : First Reading Your faith is put to the test so that your patience may make you completeJames 1: 1-11

February 14th : First Reading 

Your faith is put to the test so that your patience may make you complete

James 1: 1-11 
From James, servant of God and of the Lord Jesus Christ. Greetings to the twelve tribes of the Dispersion.
  My brothers, you will always have your trials but, when they come, try to treat them as a happy privilege; you understand that your faith is only put to the test to make you patient, but patience too is to have its practical results so that you will become fully-developed, complete, with nothing missing.
  If there is any one of you who needs wisdom, he must ask God, who gives to all freely and ungrudgingly; it will be given to him. But he must ask with faith, and no trace of doubt, because a person who has doubts is like the waves thrown up in the sea when the wind drives. That sort of person, in two minds, wavering between going different ways, must not expect that the Lord will give him anything.
  It is right for the poor brother to be proud of his high rank, and the rich one to be thankful that he has been humbled, because riches last no longer than the flowers in the grass; the scorching sun comes up, and the grass withers, the flower falls; what looked so beautiful now disappears. It is the same with the rich man: his business goes on; he himself perishes.

The Word of the Lord.