Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, July 5, 2021

ஜூலை 6 : நற்செய்தி வாசகம்அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38

ஜூலை 6 :  நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38
அக்காலத்தில்

பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 6 : பதிலுரைப் பாடல்திபா 17: 1. 2-3. 6-7. 8,15 (பல்லவி: 15a)பல்லவி: நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்.

ஜூலை 6 :  பதிலுரைப் பாடல்

திபா 17: 1. 2-3. 6-7. 8,15 (பல்லவி: 15a)

பல்லவி: நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்.
1
ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி

2
உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும்.
3
என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காண மாட்டீர்; என் வாய் பிழை செய்யக் கூடாதென உறுதி கொண்டேன். - பல்லவி

6
இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.
7
உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! - பல்லவி

8
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.
15
நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.

ஜூலை 6 : முதல் வாசகம்உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது. `இஸ்ரயேல்' எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 32: 22-32

ஜூலை 6 :  முதல் வாசகம்

உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது. `இஸ்ரயேல்' எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 32: 22-32
யாக்கோபு எழுந்து, தம் இரு மனைவியரையும் இரு வேலைக்காரிகளையும் புதல்வர் பதினொருவரையும் அழைத்துக் கொண்டு யாபோக்கு ஆற்றின் துறையைக் கடந்தார். அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது, தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார்.

யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார். யாக்கோபை வெற்றி கொள்ள முடியாது என்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச்சந்து இடம் விலகியது. அப்பொழுது ஆடவர் ‘என்னைப் போக விடு; பொழுது புலரப்போகிறது’ என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போக விடேன்” என்று மறுமொழி சொன்னார். ஆடவர், “உன் பெயர் என்ன?” என, அவர்: “நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது, ‘இஸ்ரயேல்’ எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார். யாக்கோபு அவரை நோக்கி, “உம் பெயரைச் சொல்லும்” என்றார். அவர், “என் பெயரை நீ கேட்பதேன்?” என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார்.

அப்பொழுது யாக்கோபு, “நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் ‘பெனியேல்’ என்று பெயரிட்டார். அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார். அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச்சந்துச் சதை நாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச்சந்துச் சதை நாரைத் தொட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

General Week 14th TUESDAY JULY 6, 2021 📖GOSPEL "The harvest is plentiful, but the workers are few" A Reading From The Holy Gospel According To Matthew (9, 32-38

General Week 14th TUESDAY JULY 6, 2021 

📖GOSPEL 

"The harvest is plentiful, but the workers are few" 

A Reading From The Holy Gospel According To Matthew (9, 32-38) 
At that time, behold, a possessed man was presented to Jesus who was deaf and mute. When the demon had been cast out, the deaf mute began to speak. The crowds were in awe, and they said, "Nothing like this has ever been seen in Israel!" But the Pharisees said, "It is by the leader of the demons that he expels the demons." "
Jesus roamed every town and town, teaching in their synagogues, proclaiming the gospel of the Kingdom, and healing all sickness and infirmity. Seeing the crowds, Jesus was seized with compassion towards them because they were helpless and downcast like sheep without a shepherd. He then said to his disciples: “The harvest is plentiful, but the workers are few. Therefore pray to the Lord of the harvest to send out workers for his harvest. " 

- Let us acclaim the Word of God.

General Week 14th TUESDAY JULY 6, 2021 🌿 RESPONSORIAL Respons : Lord, by your righteousness I will see your face. Psalm (Ps 16 (17), 1, 2-3ab, 6-7, 8.15) (Ps 16, 15a)

General Week 14th TUESDAY JULY 6, 2021 

🌿 RESPONSORIAL 

Respons : Lord, by your righteousness I will see your face. 

Psalm (Ps 16 (17), 1, 2-3ab, 6-7, 8.15) (Ps 16, 15a) 
Lord, listen to justice!
Hear my complaint,
welcome my prayer:
my lips do not lie. R 

From your face the sentence will come to me;
your eyes will see where the law is.
You search my heart, you visit me at night,
you test me, finding nothing. R 

I call you, the God who answers:
listen to me, hear what I say.
Show the wonders of your grace,
you who free from the aggressor those who take refuge under your right. R 

Keep me as the apple of the eye;
in the shade of your wings, hide me.
And I, by your righteousness, will see your face:
when I wake up, I will be satisfied with your face. R 

________________________________ 

🌿Greetings before the gospel 

Alleluia. Alleluia. 
I am the Good Shepherd, says the Lord;   
I know my sheep
and my sheep know me.
Alleluia. (Jn 10:14) 

________________

General Week 14th TUESDAY JULY 6, 2021 FIRST READING "Your name will be Israel because you fought with God and won him" A Reading from the book of Genesis (32, 23-32)

General Week 14th TUESDAY JULY 6, 2021 

FIRST READING 

"Your name will be Israel because you fought with God and won him" 

A Reading from the book of Genesis (32, 23-32) 
That night Jacob got up, took his two wives, his two maids, his eleven children, and crossed the ford of the Yabboq. He made them pass the torrent and also made pass that which belonged to him. Jacob was left alone. Someone wrestled with him until dawn broke. The man, seeing that there was nothing he could do with him, hit him in the hip, and Jacob's hip twitched during this fight. The man said, "Let go of me, for the dawn has risen." Jacob replied, "I will not let go of you unless you bless me." The man asked, "What is your name? He replied, "Jacob. "He continued:" Your name will no longer be Jacob, but Israel (that is to say: God struggles), because you have struggled with God and with men, and you have won. Jacob asked, "Let me know your name, please." But he replied: "Why are you asking my name? And there he blessed him. Jacob called this place Penouël (that is to say: Face of God), because, he said, “I saw God face to face, and my life was saved”. At sunrise, he passed the torrent at Penouël. He was left lame in the hip.

- Word of the Lord.
_________________________________.