Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, November 26, 2020

GOSPEL*_Sky and earth will pass away, but my words will never pass away._*A reading from the Holy Gospel according to St Luke 21:29-33*

*📖GOSPEL*

_Sky and earth will pass away, but my words will never pass away._

*A reading from the Holy Gospel according to St Luke 21:29-33*
```And he told them a parable, 'Look at the fig tree and indeed every tree. As soon as you see them bud, you can see for yourselves that summer is now near. So with you when you see these things happening: know that the kingdom of God is near. In truth I tell you, before this generation has passed away all will have taken place. Sky and earth will pass away, but my words will never pass away.```

*The Gospel of the Lord*

I believe in God, /...

```Response: The abode of God is in the midst of man.```*Psalms 84:3, 4, 5-6, 8*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

```Response: The abode of God is in the midst of man.```

*Psalms 84:3, 4, 5-6, 8*
3 Even the sparrow has found a home, the swallow a nest to place its young: your altars, Yahweh Sabaoth, my King and my God. 

4 How blessed are those who live in your house; they shall praise you continually. 

5 Blessed those who find their strength in you, whose hearts are set on pilgrimage. 

6 As they pass through the Valley of the Balsam, they make there a water-hole, and -- a further blessing -- early rain fills it. 

8 Yahweh, God Sabaoth, hear my prayer, listen, God of Jacob. 

____ 

*🌿Before the gospel*
  
```𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔, 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔! lift up your heads and look around you, because your redemption draws near.”  𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔.```
*Luke 21:28*

FIRST READING*_And chained him up for a thousand years._*A reading from the Book of Revelation 20: 1-4,11-15 21: 1-2*

Daily Reading for Friday November 27, 2020 

*🍁FIRST READING*

_And chained him up for a thousand years._

*A reading from the Book of Revelation 20: 1-4,11-15 21: 1-2*
Then I saw an angel come down from heaven with the key of the Abyss in his hand and an enormous chain.
He overpowered the dragon, that primeval serpent which is the devil and Satan, and chained him up for a thousand years. He hurled him into the Abyss and shut the entrance and sealed it over him, to make sure he would not lead the nations astray again until the thousand years had passed. At the end of that time he must be released, but only for a short while. Then I saw thrones, where they took their seats, and on them was conferred the power to give judgement. I saw the souls of all who had been beheaded for having witnessed for Jesus and for having preached God's word, and those who refused to worship the beast or his statue and would not accept the brandmark on their foreheads or hands; they came to life, and reigned with Christ for a thousand years. Then I saw a great white throne and the One who was sitting on it. In his presence, earth and sky vanished, leaving no trace. I saw the dead, great and small alike, standing in front of his throne while the books lay open. And another book was opened, which is the book of life, and the dead were judged from what was written in the books, as their deeds deserved. The sea gave up all the dead who were in it; Death and Hades were emptied of the dead that were in them; and every one was judged as his deeds deserved. Then Death and Hades were hurled into the burning lake. This burning lake is the second death; and anybody whose name could not be found written in the book of life was hurled into the burning lake. Then I saw a new heaven and a new earth; the first heaven and the first earth had disappeared now, and there was no longer any sea. I saw the holy city, the new Jerusalem, coming down out of heaven from God, prepared as a bride dressed for her husband. 

*The Word of the Lord*

நவம்பர் 27 : நற்செய்தி வாசகம்இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33

நவம்பர் 27 :  நற்செய்தி வாசகம்

இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33

அக்காலத்தில்
இயேசு ஓர் உவமை சொன்னார்: “அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.”

ஆண்டவரின் அருள்வாக்கு

நவம்பர் 27 : பதிலுரைப் பாடல்திபா 84: 2. 3. 4-5a,7a . (பல்லவி: திவெ 21: 3)பல்லவி: இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது

நவம்பர் 27 :  பதிலுரைப் பாடல்

திபா 84: 2. 3. 4-5a,7a . (பல்லவி: திவெ 21: 3)

பல்லவி: இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது.
2.என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. - பல்லவி

3.படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. - பல்லவி

4.உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.
5a.உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்.
7a.அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து 
நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நவம்பர் 27 : முதல் வாசகம்புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்.திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 20: 1-4, 11- 21: 2

நவம்பர் 27 : முதல் வாசகம்

புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 20: 1-4, 11- 21: 2
வானதூதர் ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். படுகுழியின் திறவுகோலும் முரட்டுச் சங்கிலியும் அவர் கையில் இருந்தன. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்தார். அதுவே தொடக்கத்தில் இருந்த பாம்பு. வானதூதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதைக் கட்டிவைத்தார்; பின்னர் அதைப் படுகுழியில் தள்ளி, குழியை அடைத்து, முத்திரையிட்டார்; இவ்வாறு அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை நாடுகளை அது ஏமாற்றாதவாறு செய்தார். இதன்பின் சிறிது காலத்துக்கு அது கட்டவிழ்த்து விடப்பட வேண்டும்.

பின்பு நான் அரியணைகளைக் கண்டேன். தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்றிருந்த சிலர் அவற்றின்மீது வீற்றிருந்தனர். கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகத் தலை கொடுத்தவர்களின் ஆன்மாக்களையும் கண்டேன். அவர்கள் அந்த விலங்கையோ அதன் சிலையையோ வணங்கியதில்லை; அதற்குரிய குறியைத் தங்கள் நெற்றியிலோ கையிலோ இட்டுக்கொண்டதும் இல்லை. அவர்கள் மீண்டும் உயிர் பெற்று, ஆயிரம் ஆண்டுகள் கிறிஸ்துவோடு ஆட்சி புரிந்தார்கள்.

பின்பு பெரிய, வெண்மையான ஓர் அரியணையைக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவர் முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணைமுன் நிற்கக் கண்டேன். அப்பொழுது நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. வேறொரு நூலும் திறந்துவைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல். இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் கடல் தன்னகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றியது. அதுபோலச் சாவும், பாதாளமும் தம்மகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றின. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாவும் பாதாளமும் நெருப்பு ஏரியில் எறியப்பட்டன. இந்த நெருப்பு ஏரியே இரண்டாம் சாவு.

வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள். பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று.

அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.