Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, November 22, 2022

நவம்பர் 23 : நற்செய்தி வாசகம்என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

நவம்பர் 23 :  நற்செய்தி வாசகம்

என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

நவம்பர் 23 : பதிலுரைப் பாடல்திபா 98: 1. 2-3ab. 7-8. 9 (பல்லவி: திவெ 15: 3b)பல்லவி: எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன.

நவம்பர் 23 :  பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 7-8. 9 (பல்லவி: திவெ 15: 3b)

பல்லவி: எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் வியப்புக்குரியன.
1
ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். - பல்லவி

7
கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8
ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். - பல்லவி

9
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 2: 10
அல்லேலூயா, அல்லேலூயா!

 இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நவம்பர் 23 : முதல் வாசகம்கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்.திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4

நவம்பர் 23 :  முதல் வாசகம்

கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக்கொண்டிருந்தார்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 15: 1-4
சகோதரர் சகோதரிகளே,

யோவான் என்னும் நான் பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்: ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும்.

நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் அதன் சிலை மீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள் மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன். அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்:

“கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை. ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 23rd : Gospel Your endurance will win you your livesA Reading from the Holy Gospel according to St. Luke 21:12-19

November 23rd :  Gospel 

Your endurance will win you your lives

A Reading from the Holy Gospel according to St. Luke 21:12-19 
Jesus said to his disciples: ‘Men will seize you and persecute you; they will hand you over to the synagogues and to imprisonment, and bring you before kings and governors because of my name – and that will be your opportunity to bear witness. Keep this carefully in mind: you are not to prepare your defence, because I myself shall give you an eloquence and a wisdom that none of your opponents will be able to resist or contradict. You will be betrayed even by parents and brothers, relations and friends; and some of you will be put to death. You will be hated by all men on account of my name, but not a hair of your head will be lost. Your endurance will win you your lives.’

The Word of the Lord.

November 23rd : Responsorial PsalmPsalm 97(98):1-3,7-9 How great and wonderful are all your works, Lord God almighty.

November 23rd :  Responsorial Psalm

Psalm 97(98):1-3,7-9 

How great and wonderful are all your works,
 Lord God almighty.
Sing a new song to the Lord
  for he has worked wonders.
His right hand and his holy arm
  have brought salvation.

How great and wonderful are all your works, Lord God almighty.

The Lord has made known his salvation;
  has shown his justice to the nations.
He has remembered his truth and love
  for the house of Israel.

How great and wonderful are all your works, Lord God almighty.

Let the sea and all within it, thunder;
  the world, and all its peoples.
Let the rivers clap their hands
  and the hills ring out their joy
  at the presence of the Lord.

How great and wonderful are all your works, Lord God almighty.

For the Lord comes,
  he comes to rule the earth.
He will rule the world with justice
  and the peoples with fairness.

How great and wonderful are all your works, Lord God almighty.

Gospel Acclamation Lk21:36

Alleluia, alleluia!

Stay awake, praying at all times
for the strength to stand with confidence
before the Son of Man.
Alleluia!

November 23rd : First ReadingThe victors sang the hymn of Moses and of the LambApocalypse 15: 1-4

November 23rd :  First Reading

The victors sang the hymn of Moses and of the Lamb

Apocalypse 15: 1-4 
What I, John, saw in heaven was a great and wonderful sign: seven angels were bringing the seven plagues that are the last of all, because they exhaust the anger of God. I seemed to see a glass lake suffused with fire, and standing by the lake of glass, those who had fought against the beast and won, and against his statue and the number which is his name. They all had harps from God, and they were singing the hymn of Moses, the servant of God, and of the Lamb:
‘How great and wonderful are all your works,
Lord God Almighty;
just and true are all your ways,
King of nations.
Who would not revere and praise your name, O Lord?
You alone are holy,
and all the pagans will come and adore you
for the many acts of justice you have shown.’

The Word of the Lord.