Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, November 12, 2021

நவம்பர் 13 : நற்செய்தி வாசகம்தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

நவம்பர் 13 : நற்செய்தி வாசகம்

தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8
அக்காலத்தில்

மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.

பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்."

பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 13 : பதிலுரைப் பாடல்திபா 105: 2-3. 36-37. 42-43 (பல்லவி: 5a)பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

நவம்பர் 13 : பதிலுரைப் பாடல்

திபா 105: 2-3. 36-37. 42-43 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!
2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
3
அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! - பல்லவி

36
அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்; அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார்.
37
அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்; அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை. - பல்லவி

42
ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.
43
அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! 

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.

நவம்பர் 13 : முதல் வாசகம்ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 14-16; 19: 6-9

நவம்பர் 13 :  முதல் வாசகம்

ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 14-16; 19: 6-9
எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில், எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர் வீரனைப் போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது. உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது; மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்த போதிலும், விண்ணகத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது.

உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில் புத்துயிர் பெற்றது.

அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது. முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று. செங்கடலினூடே தங்குதடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினூடே புல்திடலும் உண்டாயின. உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வழியே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை உற்றுநோக்கிய வண்ணம் சென்றனர். குதிரைகளைப் போலக் குதித்துக் கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக்கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்துகொண்டே சென்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 13th : Gospel The parable of the unjust judge.A Reading from the Holy Gospel according to St. Luke 18: 1-8.

November 13th :  Gospel 

The parable of the unjust judge.

A Reading from the Holy Gospel according to St. Luke 18: 1-8. 
Jesus told his disciples a parable about the need to pray continually and never lose heart. ‘There was a judge in a certain town’ he said ‘who had neither fear of God nor respect for man. In the same town there was a widow who kept on coming to him and saying, “I want justice from you against my enemy!” For a long time he refused, but at last he said to himself, “Maybe I have neither fear of God nor respect for man, but since she keeps pestering me I must give this widow her just rights, or she will persist in coming and worry me to death.”’
  And the Lord said ‘You notice what the unjust judge has to say? Now will not God see justice done to his chosen who cry to him day and night even when he delays to help them? I promise you, he will see justice done to them, and done speedily. But when the Son of Man comes, will he find any faith on earth?’

The Word of the Lord.

November 13th : Responsorial PsalmPsalm 104(105):2-3,36-37,42-43 ©Remember the wonders the Lord has done.or Alleluia!

November 13th :  Responsorial Psalm

Psalm 104(105):2-3,36-37,42-43 ©

Remember the wonders the Lord has done.
or Alleluia!
O sing to him, sing his praise;
  tell all his wonderful works!
Be proud of his holy name,
  let the hearts that seek the Lord rejoice.

Remember the wonders the Lord has done.
or Alleluia!

He struck all the first-born in their land,
  the finest flower of their sons.
He led out Israel with silver and gold.
  In his tribes were none who fell behind.

Remember the wonders the Lord has done.
or Alleluia!

For he remembered his holy word,
  which he gave to Abraham his servant.
So he brought out his people with joy,
  his chosen ones with shouts of rejoicing.

Remember the wonders the Lord has done.
or Alleluia!

Gospel Acclamation Jm1:21

Alleluia, alleluia!
Accept and submit to the word
which has been planted in you
and can save your souls.
Alleluia!

November 13th : First ReadingThe Red Sea became an unimpeded way.A reading from the Book of Wisdom 18: 14-16,19: 6-9

November 13th :  First Reading

The Red Sea became an unimpeded way.

A reading from the Book of  Wisdom 18: 14-16,19: 6-9 
When peaceful silence lay over all,
and night had run the half of her swift course,
down from the heavens, from the royal throne, leapt your all-powerful Word;
into the heart of a doomed land the stern warrior leapt.
Carrying your unambiguous command like a sharp sword,
he stood, and filled the universe with death;
he touched the sky, yet trod the earth.
For, to keep your children from all harm,
the whole creation, obedient to your commands,
was once more, and newly, fashioned in its nature.
Overshadowing the camp there was the cloud,
where water had been, dry land was seen to rise,
the Red Sea became an unimpeded way,
the tempestuous flood a green plain;
sheltered by your hand, the whole nation passed across,
gazing at these amazing miracles.
They were like horses at pasture,
they skipped like lambs,
singing your praises, Lord, their deliverer.

The Word of the Lord.