Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, October 1, 2020

October 2nd : GospelAnyone who welcomes a little child in my name welcomes meA Reading from the Holy Gospel according to St.Matthew 18:1-5,10

October 2nd : Gospel

Anyone who welcomes a little child in my name welcomes me

A Reading from the Holy Gospel according to St.Matthew 18:1-5,10 
The disciples came to Jesus and said, ‘Who is the greatest in the kingdom of heaven?’ So he called a little child to him and set the child in front of them. Then he said, ‘I tell you solemnly, unless you change and become like little children you will never enter the kingdom of heaven. And so, the one who makes himself as little as this little child is the greatest in the kingdom of heaven.
  ‘Anyone who welcomes a little child like this in my name welcomes me. See that you never despise any of these little ones, for I tell you that their angels in heaven are continually in the presence of my Father in heaven.’

The Gospel of the Lord.

October 2nd : Responsorial PsalmPsalm 138(139):1-3,7-10,13-14 Lead me, O Lord, in the path of life eternal

October 2nd : Responsorial Psalm

Psalm 138(139):1-3,7-10,13-14 

Lead me, O Lord, in the path of life eternal.
O Lord, you search me and you know me,
  you know my resting and my rising,
  you discern my purpose from afar.
You mark when I walk or lie down,
  all my ways lie open to you.

Lead me, O Lord, in the path of life eternal.

O where can I go from your spirit,
  or where can I flee from your face?
If I climb the heavens, you are there.
  If I lie in the grave, you are there.

Lead me, O Lord, in the path of life eternal.

If I take the wings of the dawn
  and dwell at the sea’s furthest end,
even there your hand would lead me,
  your right hand would hold me fast.

Lead me, O Lord, in the path of life eternal.

For it was you who created my being,
  knit me together in my mother’s womb.
I thank you for the wonder of my being,
  for the wonders of all your creation.

Lead me, O Lord, in the path of life eternal.

Gospel Acclamation Ps102:21

Alleluia, alleluia!
Give thanks to the Lord, all his hosts,
his servants who do his will.
Alleluia!

October 2nd : First readingThe immeasurable greatness of GodA Reading fom the Book of Job 38:1,12-21,40:3-5

October 2nd : First reading

The immeasurable greatness of God

A Reading fom the Book of Job 38:1,12-21,40:3-5 
From the heart of the tempest the Lord gave Job his answer. He said:
Have you ever in your life given orders to the morning
  or sent the dawn to its post,
telling it to grasp the earth by its edges
  and shake the wicked out of it,
when it changes the earth to sealing clay
  and dyes it as a man dyes clothes;
stealing the light from wicked men
  and breaking the arm raised to strike?
Have you journeyed all the way to the sources of the sea,
  or walked where the Abyss is deepest?
Have you been shown the gates of Death
  or met the janitors of Shadowland?
Have you an inkling of the extent of the earth?
  Tell me all about it if you have!
Which is the way to the home of the light,
  and where does darkness live?
You could then show them the way to their proper places,
  or put them on the path to where they live!
If you know all this, you must have been born with them,
  you must be very old by now!
Job replied to the Lord:
My words have been frivolous: what can I reply?
  I had better lay my finger on my lips.
I have spoken once... I will not speak again;
  more than once... I will add nothing.

The Word of the Lord.

அக்டோபர் 2 : நற்செய்தி வாசகம்சிறு பிள்ளைகளுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10

அக்டோபர் 2 :  நற்செய்தி வாசகம்

சிறு பிள்ளைகளுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10
அக்காலத்தில்

சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 2 : பதிலுரைப் பாடல்திபா 139: 1-3. 7-8. 9-10. 13-14ab . (பல்லவி: 24b)பல்லவி: இறைவா! என்றும் உள்ள வழியில் என்னை நடத்துவீர்.

அக்டோபர் 2 : பதிலுரைப் பாடல்

திபா 139: 1-3. 7-8. 9-10. 13-14ab . (பல்லவி: 24b)

பல்லவி: இறைவா! என்றும் உள்ள வழியில் என்னை நடத்துவீர்.
1.ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
2.நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
3.நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. - பல்லவி

7.உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?
8.நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! - பல்லவி

9.நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,
10.அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். - பல்லவி

13.ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!
14ab.அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b, 7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

அக்டோபர் 2 : முதல் வாசகம்காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 12-21; 40: 3-4

அக்டோபர் 2  :  முதல் வாசகம்

காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?

யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 12-21; 40: 3-4
ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:

உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா? இவ்வாறு, அது வையக விளிம்பைத் தொட்டிழுத்து, பொல்லாதவரை அதனுள்ளிருந்து உதறித் தள்ளுமே! முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல் மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று. அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்; அடிக்க ஓங்கிய கை முறிக்கப்படும்.

கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ? சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ? அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா? அறிவிப்பாய் அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்!

ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ? அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ? அதன் உறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ! ஆம், அறிவாய்; அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்; ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!

யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி: இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவே மாட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 02 பொதுக்காலம் இருபத்து ஆறாம் வாரம் வெள்ளிக்கிழமைலூக்கா 10: 13-16