Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, July 13, 2021

ஜூலை 14 : நற்செய்தி வாசகம்ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27

ஜூலை 14 :  நற்செய்தி வாசகம்

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27
அக்காலத்தில்

இயேசு கூறியது: “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 14 : பதிலுரைப் பாடல்திபா 103: 1-2. 3-4. 6-7 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

ஜூலை 14 :  பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 6-7 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

6
ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்.
7
அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா!

 தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

ஜூலை 14 : முதல் வாசகம்ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-6, 9-12

ஜூலை 14 :  முதல் வாசகம்

ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-6, 9-12
அந்நாள்களில்

மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக்கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.

“ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்” என்று மோசே கூறிக்கொண்டார். அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். ‘மோசே, மோசே’ என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார். அவர், “இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்றார்.

மேலும் அவர், “உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே” என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். அப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன். எனவே இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்."

மோசே கடவுளிடம், “பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?” என்றார். அப்போது கடவுள், “நான் உன்னோடு இருப்பேன். மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே” என்றுரைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

14 July 2021, General Week 15 - Wednesday 📖GOSPEL "What you have hidden from the wise and learned, you have revealed to the little ones" A Reading From The Holy Gospel According To Matthew (11, 25-27)

14 July 2021, General Week 15 - Wednesday 

📖GOSPEL 

"What you have hidden from the wise and learned, you have revealed to the little ones" 

A Reading From The Holy Gospel According To Matthew (11, 25-27) 
At that time,
Jesus spoke and said:
“Father, Lord of heaven and earth,
I proclaim your praise:
what you have hidden from the wise and learned,
you have revealed to the little ones.
    Yes, Father, you wanted it that way in your benevolence.
    Everything was given to me by my Father;
no one knows the Son, except the Father,
and no one knows the Father, except the Son,
and him to whom the Son wishes to reveal him. " 

- Let us acclaim the Word of God.

14 July 2021, General Week 15 - Wednesday 🌿 RESPONSORIAL Respons : The Lord is tenderness and pity. Psalm (Ps 102 (103), 1-2, 3-4, 6-7)(Ps 102, 8a)

14 July 2021, General Week 15 - Wednesday 

🌿 RESPONSORIAL 

Respons : 
The Lord is tenderness and pity.  

Psalm (Ps 102 (103), 1-2, 3-4, 6-7)(Ps 102, 8a) 
Bless the Lord, O my soul,
bless his most holy name, my whole being!
Bless the Lord, O my soul,
do not forget any of his blessings! R 

For he forgives all your trespasses
and heals you from all sickness;
he claims your life at the grave
and crowns you with love and tenderness; R 

The Lord does a work of justice,
he defends the rights of the oppressed.
He reveals his designs to Moses,
to the children of Israel his deeds. R 

________________________________ 

🌿Greetings before the gospel 

Alleluia. Alleluia.
Blessed are you, Father,
Lord of heaven and earth,
you have revealed to the little ones
the mysteries of the Kingdom!
Alleluia.   (cf. Mt 11:25) 

________________

14 July 2021, General Week 15 - Wednesday FIRST READING "The angel of the Lord appeared to him in the flame of a burning bush" A Reading from the book of Exodus (3, 1-6. 9-12)

14 July 2021, General Week 15 - Wednesday 

FIRST READING 

"The angel of the Lord appeared to him in the flame of a burning bush"  

A Reading from the book of Exodus (3, 1-6. 9-12) 
In those days,
    Moses was the shepherd of the flock of his father-in-law Jethro,
priest of Midian.
He led the flock beyond the wilderness
and came to the mountain of God, at Horeb.
    The angel of the Lord appeared to him in the flame
of a burning bush.
Moses looked: the bush was burning
without being consumed.
    Moses then said to himself:
"I am going to make a detour
to see this extraordinary thing:
why is the bush not being consumed? "
    The Lord saw that he had made a detour to see,
God called to him from the bush,
" Moses! Moses! "
He said,
" Here I am! "
    God said,
"Stay away from here!"
Take the sandals off your feet,
for the place where you stand is holy ground! "
    And he said:
" I am the God of thy father,
the God of Abraham, the God of Isaac, God of Jacob. »
Moses hid his face
because he was afraid to focus his gaze on God.
The Lord said,
    “Now the cry of the children of Israel has reached me,
and I have seen the oppression that the Egyptians put on them.
    Now go!
I am sending you to Pharaoh:
you will bring my people, the children of Israel, out of Egypt. »
    Moses said to God:
« Who am I to go and find Pharaoh,
and to bring the children of Israel out of Egypt? "
    God answered him:
" I am with you.
And this is the sign that it is I who sent you:
when you bring my people out of Egypt,
you will worship God on this mountain. " 

- Word of the Lord.