Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, September 6, 2020

September 7th : Gospel Is it against the law on the sabbath to save life?A Reading from the Holy Gospel according to St.Luke 6:6-11

September 7th :  Gospel 

Is it against the law on the sabbath to save life?

A Reading from the Holy Gospel according to St.Luke 6:6-11 
On the sabbath Jesus went into the synagogue and began to teach, and a man was there whose right hand was withered. The scribes and the Pharisees were watching him to see if he would cure a man on the sabbath, hoping to find something to use against him. But he knew their thoughts; and he said to the man with the withered hand, ‘Stand up! Come out into the middle.’ And he came out and stood there. Then Jesus said to them, ‘I put it to you: is it against the law on the sabbath to do good, or to do evil; to save life, or to destroy it?’ Then he looked round at them all and said to the man, ‘Stretch out your hand.’ He did so, and his hand was better. But they were furious, and began to discuss the best way of dealing with Jesus.

The Gospel of the Lord.

September 7th : Responsorial Psalm Psalm 5:5-7,12 ©Lead me, Lord, in your justice

September 7th : Responsorial Psalm 

Psalm 5:5-7,12 ©

Lead me, Lord, in your justice.
You are no God who loves evil;
  no sinner is your guest.
The boastful shall not stand their ground
  before your face.

Lead me, Lord, in your justice.

You hate all who do evil;
  you destroy all who lie.
The deceitful and bloodthirsty man
  the Lord detests.

Lead me, Lord, in your justice.

All those you protect shall be glad
  and ring out their joy.
You shelter them; in you they rejoice,
  those who love your name.

Lead me, Lord, in your justice.

Gospel Acclamation Ps118:105

Alleluia, alleluia!
Your word is a lamp for my steps
and a light for my path.
Alleluia!

September 7th : First readingGet rid of the old yeast of evil and wickednessA Reading from the First Letter of St.Paul to the Corinthians 5:1-8

September 7th : First reading

Get rid of the old yeast of evil and wickedness

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 5:1-8
I have been told as an undoubted fact that one of you is living with his father’s wife. This is a case of sexual immorality among you that must be unparalleled even among pagans. How can you be so proud of yourselves? You should be in mourning. A man who does a thing like that ought to have been expelled from the community. Though I am far away in body, I am with you in spirit, and have already condemned the man who did this thing as if I were actually present. When you are assembled together in the name of the Lord Jesus, and I am spiritually present with you, then with the power of our Lord Jesus he is to be handed over to Satan so that his sensual body may be destroyed and his spirit saved on the day of the Lord.
  The pride that you take in yourselves is hardly to your credit. You must know how even a small amount of yeast is enough to leaven all the dough, so get rid of all the old yeast, and make yourselves into a completely new batch of bread, unleavened as you are meant to be. Christ, our passover, has been sacrificed; let us celebrate the feast, then, by getting rid of all the old yeast of evil and wickedness, having only the unleavened bread of sincerity and truth.

The Word of the Lord.

செப்டம்பர் 7 : நற்செய்தி வாசகம்ஓய்வு நாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டேயிருந்தனர்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11

செப்டம்பர் 7 :  நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டேயிருந்தனர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11
ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர்.

இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!” என்றார். அவர் எழுந்து நின்றார்.

இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!” என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பொதுக்காலம் இருபத்து மூன்றாம் வாரம் திங்கட்கிழமை

செப்டம்பர் 7 திங்கள் : பதிலுரைப் பாடல்திபா 5: 4-5a. 5b-6. 11 . (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.

செப்டம்பர் 7 : பதிலுரைப் பாடல்

திபா 5: 4-5a. 5b-6. 11 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.
4.நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5a.ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார். - பல்லவி

5b.தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.
6.பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். - பல்லவி

11.ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

செப்டம்பர் 7 திங்கள் : முதல் வாசகம்நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-8

செப்டம்பர் 7 : முதல் வாசகம்

நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-8
சகோதரர் சகோதரிகளே,

உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறு மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை. இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளிவைத்திருக்க வேண்டாமா? நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன். நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு, அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம்.

நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள். உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.