Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, November 24, 2021

நவம்பர் 25 : நற்செய்தி வாசகம்பிற இனத்தாரின் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28

நவம்பர் 25 :  நற்செய்தி வாசகம்

பிற இனத்தாரின் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும்.

அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.

அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 25 : பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 45. 46-47. 48-49. 50-51 (பல்லவி: 45)பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்

நவம்பர் 25 :  பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 45. 46-47. 48-49. 50-51 (பல்லவி: 45)

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
45
பனித் திவலைகளே, பனி மழையே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

46
பனிக் கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
47
உறை பனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

48
இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
49
ஒளியே, இருளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். - பல்லவி

50
மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்;
51
மண்ணுலகு ஆண்டவரை வாழ்த்துவதாக. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! 

நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நவம்பர் 25 : முதல் வாசகம்கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார்.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 6: 11-27

நவம்பர் 25 :  முதல் வாசகம்

கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 6: 11-27
அந்நாள்களில்

முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள்.

உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு, “அரசரே! முப்பது நாள்வரையில் அரசராகிய உம்மிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா?” என்றார்கள்.

அதற்கு அரசன், “ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல், இதுவும் மாறாததே” என்றான்.

உடனே அவர்கள் அரசனை நோக்கி, “யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான்” என்றார்கள். ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்; தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய், அன்று கதிரவன் மறையும் வரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான்.

ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, “அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்” என்றனர்.

ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டு வரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார். அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, “நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!” என்றான். அவர்கள் ஒரு பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டுவந்து குகையின் வாயிலை அடைத்தார்கள்; தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி அரசன் தன் மோதிரத்தாலும் தம் உயர்குடி மக்களின் மோதிரங்களாலும் அதற்கு முத்திரையிட்டான்.

பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை; வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை. உறக்கமும் அவனை விட்டு அகன்றது. பொழுது புலர்ந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான். தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன் துயரக் குரலில் அவன் தானியேலை நோக்கி, “தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா?” என்று உரக்கக் கேட்டான்.

அதற்குத் தானியேல் அரசனிடம், “அரசரே! நீர் நீடூழி வாழ்க! என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே” என்று மறுமொழி கொடுத்தார். எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே தூக்கினார்கள். அவருக்கு யாதொரு தீங்கும் நேரிடவில்லை; ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினார். பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன.

அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவருக்கும் நாட்டினருக்கும் மொழியினருக்கும் ஓர் அறிக்கை விடுத்தான். “உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள்; அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்; அவரது ஆட்சி என்றும் அழிவற்றது; அவரது அரசுரிமைக்கு முடிவே இராது. தானியேலைச் சிங்கங்களின் பிடியினின்று காப்பாற்றியவர் அவரே; அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 25th : Gospel A Reading from the Holy Gospel according to St. Luke 21: 20-28 There will be signs in the sun and moon and stars.

November 25th : Gospel 

A Reading from the Holy Gospel according to  St. Luke 21: 20-28 

There will be signs in the sun and moon and stars.
Jesus said to his disciples, ‘When you see Jerusalem surrounded by armies, you must realise that she will soon be laid desolate. Then those in Judaea must escape to the mountains, those inside the city must leave it, and those in country districts must not take refuge in it. For this is the time of vengeance when all that scripture says must be fulfilled. Alas for those with child, or with babies at the breast, when those days come!
  ‘For great misery will descend on the land and wrath on this people. They will fall by the edge of the sword and be led captive to every pagan country; and Jerusalem will be trampled down by the pagans until the age of the pagans is completely over.
  ‘There will be signs in the sun and moon and stars; on earth nations in agony, bewildered by the clamour of the ocean and its waves; men dying of fear as they await what menaces the world, for the powers of heaven will be shaken. And then they will see the Son of Man coming in a cloud with power and great glory. When these things begin to take place, stand erect, hold your heads high, because your liberation is near at hand.’

The Word of the Lord.

November 25th : Responsorial Psalm Daniel 3:68-74 ©Dews and sleet! bless the Lord. Give glory and eternal praise to him!

November 25th : Responsorial Psalm 

Daniel 3:68-74 ©

Dews and sleet! bless the Lord.

  Give glory and eternal praise to him!
Frost and cold! bless the Lord.

  Give glory and eternal praise to him!

Ice and snow! bless the Lord.

  Give glory and eternal praise to him!

Nights and days! bless the Lord.

  Give glory and eternal praise to him!

Light and darkness! bless the Lord.

  Give glory and eternal praise to him!

Lightning and clouds! bless the Lord.

  Give glory and eternal praise to him!

Let the earth bless the Lord.

  Give glory and eternal praise to him!

Gospel Acclamation Mt24:42,44

Alleluia, alleluia!
Stay awake and stand ready,
because you do not know the hour
when the Son of Man is coming.
Alleluia!

November 25th : First Reading Daniel in the lions' den.A Reading from the Book of Daniel 6: 12-28.

November 25th : First Reading 

Daniel in the lions' den.

A Reading from the Book of Daniel 6: 12-28. 
The presidents and satraps came along in a body and found Daniel praying and pleading with God. They then came to the king and said, ‘Have you not just signed an edict forbidding any man for the next thirty days to pray to anyone, god or man, other than to yourself O king, on pain of being thrown into the lions’ den?’ ‘The decision stands,’ the king replied ‘as befits the law of the Medes and the Persians, which cannot be revoked.’ Then they said to the king, ‘O king, this man Daniel, one of the exiles from Judah, disregards both you and the edict which you have signed: he is at his prayers three times each day.’ When the king heard these words he was deeply distressed, and determined to save Daniel; he racked his brains until sunset to find some way out. But the men came back in a body to the king and said, ‘O king, remember that in conformity with the law of the Medes and the Persians, no edict or decree can be altered when once issued by the king.’
  The king then ordered Daniel to be fetched and thrown into the lion pit. The king said to Daniel, ‘Your God himself, whom you have served so faithfully, will have to save you.’ A stone was then brought and laid over the mouth of the pit; and the king sealed it with his own signet and with that of his noblemen, so that there could be no going back on the original decision about Daniel. The king returned to his palace, spent the night in fasting and refused to receive any of his concubines. Sleep eluded him, and at the first sign of dawn he was up, and hurried off to the lion pit. As he approached the pit he shouted in anguished tones, ‘Daniel, servant of the living God! Has your God, whom you serve so faithfully, been able to save you from the lions?’ Daniel replied, ‘O king, live for ever! My God sent his angel who sealed the lions’ jaws, they did me no harm, since in his sight I am blameless, and I have never done you any wrong either, O king.’ The king was overjoyed, and ordered Daniel to be released from the pit. Daniel was released from the pit, and found to be quite unhurt, because he had trusted in his God. The king sent for the men who had accused Daniel and had them thrown into the lion pit, they, their wives and their children: and they had not reached the floor of the pit before the lions had seized them and crushed their bones to pieces.
  King Darius then wrote to men of all nations, peoples and languages throughout the world, ‘May peace be always with you! I decree: in every kingdom of my empire let all tremble with fear before the God of Daniel:
‘He is the living God, he endures for ever,
his sovereignty will never be destroyed
and his kingship never end.
He saves, sets free, and works signs and wonders
in the heavens and on earth;
he has saved Daniel from the power of the lions.’

The Word of the Lord.