Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, December 23, 2023

டிசம்பர் 24 : நற்செய்தி வாசகம்இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

டிசம்பர் 24 :  நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

டிசம்பர் 24 : இரண்டாம் வாசகம்ஊழி காலமாக மறைபொருளாக இருந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 25-27

டிசம்பர் 24 :  இரண்டாம் வாசகம்

ஊழி காலமாக மறைபொருளாக இருந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 25-27
சகோதரர் சகோதரிகளே,

இயேசு கிறிஸ்துவைப்பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 38
அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா.

டிசம்பர் 24 : பதிலுரைப் பாடல்திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.

டிசம்பர் 24 :  பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.
1
ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. - பல்லவி

3
நீர் உரைத்தது: ‛நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி

26
‛நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
28
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். - பல்லவி

டிசம்பர் 24 : முதல் வாசகம்தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16

டிசம்பர் 24 :  முதல் வாசகம்

தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16
தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது” என்று கூறினார்.

அதற்கு நாத்தான், நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று அரசரிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: “நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்:

நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்துவாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.

உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 24th : Gospel 'I am the handmaid of the Lord'A reading from the Holy Gospel according to St.Luke 1: 26-38

December 24th :  Gospel 

'I am the handmaid of the Lord'

A reading from the Holy Gospel according to St.Luke 1: 26-38 
The angel Gabriel was sent by God to a town in Galilee called Nazareth, to a virgin betrothed to a man named Joseph, of the House of David; and the virgin’s name was Mary. He went in and said to her, ‘Rejoice, so highly favoured! The Lord is with you.’ She was deeply disturbed by these words and asked herself what this greeting could mean, but the angel said to her, ‘Mary, do not be afraid; you have won God’s favour. Listen! You are to conceive and bear a son, and you must name him Jesus. He will be great and will be called Son of the Most High. The Lord God will give him the throne of his ancestor David; he will rule over the House of Jacob for ever and his reign will have no end.’ Mary said to the angel, ‘But how can this come about, since I am a virgin?’ ‘The Holy Spirit will come upon you’ the angel answered ‘and the power of the Most High will cover you with its shadow. And so the child will be holy and will be called Son of God. Know this too: your kinswoman Elizabeth has, in her old age, herself conceived a son, and she whom people called barren is now in her sixth month, for nothing is impossible to God.’ ‘I am the handmaid of the Lord,’ said Mary ‘let what you have said be done to me.’ And the angel left her.

The Word of the Lord.

December 24th : Second reading The mystery is revealed that was kept secret for endless agesA reading from the letter of St.Paul to the Romans 16:25-27

December 24th :  Second reading  

The mystery is revealed that was kept secret for endless ages

A reading from the letter of St.Paul to the Romans 16:25-27
Glory to him who is able to give you the strength to live according to the Good News I preach, and in which I proclaim Jesus Christ, the revelation of a mystery kept secret for endless ages, but now so clear that it must be broadcast to pagans everywhere to bring them to the obedience of faith. This is only what scripture has predicted, and it is all part of the way the eternal God wants things to be. He alone is wisdom; give glory therefore to him through Jesus Christ for ever and ever. Amen.

The Word of the Lord.

Gospel Acclamation Lk1:38

Alleluia, alleluia!

I am the handmaid of the Lord:
let what you have said be done to me.
Alleluia!

December 24th : Responsorial PsalmPsalm 88(89):2-5,27,29 I will sing for ever of your love, O Lord.

December 24th :  Responsorial Psalm

Psalm 88(89):2-5,27,29 

I will sing for ever of your love, O Lord.
I will sing for ever of your love, O Lord;
  through all ages my mouth will proclaim your truth.
Of this I am sure, that your love lasts for ever,
  that your truth is firmly established as the heavens.

I will sing for ever of your love, O Lord.

‘I have made a covenant with my chosen one;
  I have sworn to David my servant:
I will establish your dynasty for ever
  and set up your throne through all ages.

I will sing for ever of your love, O Lord.

‘He will say to me: “You are my father,
  my God, the rock who saves me.”
I will keep my love for him always;
  with him my covenant shall last.’

I will sing for ever of your love, O Lord.

December 24th : First readingYour House and your sovereignty will always stand secure before me2 Samuel 7:1-5,8-12,14,16

December 24th :  First reading

Your House and your sovereignty will always stand secure before me

2 Samuel 7:1-5,8-12,14,16 
Once David had settled into his house and the Lord had given him rest from all the enemies surrounding him, the king said to the prophet Nathan, ‘Look, I am living in a house of cedar while the ark of God dwells in a tent.’ Nathan said to the king, ‘Go and do all that is in your mind, for the Lord is with you.’
  But that very night the word of the Lord came to Nathan:
  ‘Go and tell my servant David, “Thus the Lord speaks: Are you the man to build me a house to dwell in? I took you from the pasture, from following the sheep, to be leader of my people Israel; I have been with you on all your expeditions; I have cut off all your enemies before you. I will give you fame as great as the fame of the greatest on earth. I will provide a place for my people Israel; I will plant them there and they shall dwell in that place and never be disturbed again; nor shall the wicked continue to oppress them as they did, in the days when I appointed judges over my people Israel; I will give them rest from all their enemies. The Lord will make you great; the Lord will make you a House. And when your days are ended and you are laid to rest with your ancestors, I will preserve the offspring of your body after you and make his sovereignty secure. I will be a father to him and he a son to me; if he does evil, I will punish him with the rod such as men use, with strokes such as mankind gives. Your House and your sovereignty will always stand secure before me and your throne be established for ever.”’

The Word of the Lord.