Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, August 30, 2020

August 31st : Gospel'This text is being fulfilled today, even as you listen'.

August 31st : Gospel

'This text is being fulfilled today, even as you listen'.
A Reading from the Holy Gospel according to St.Luke 4:16-30 

Jesus came to Nazara, where he had been brought up, and went into the synagogue on the sabbath day as he usually did. He stood up to read and they handed him the scroll of the prophet Isaiah. Unrolling the scroll he found the place where it is written:
The spirit of the Lord has been given to me,
for he has anointed me.
He has sent me to bring the good news to the poor,
to proclaim liberty to captives
and to the blind new sight,
to set the downtrodden free,
to proclaim the Lord’s year of favour.
He then rolled up the scroll, gave it back to the assistant and sat down. And all eyes in the synagogue were fixed on him. Then he began to speak to them, ‘This text is being fulfilled today even as you listen.’ And he won the approval of all, and they were astonished by the gracious words that came from his lips. They said, ‘This is Joseph’s son, surely?’
  But he replied, ‘No doubt you will quote me the saying, “Physician, heal yourself” and tell me, “We have heard all that happened in Capernaum, do the same here in your own countryside.”’
  And he went on, ‘I tell you solemnly, no prophet is ever accepted in his own country.
  ‘There were many widows in Israel, I can assure you, in Elijah’s day, when heaven remained shut for three years and six months and a great famine raged throughout the land, but Elijah was not sent to any one of these: he was sent to a widow at Zarephath, a Sidonian town. And in the prophet Elisha’s time there were many lepers in Israel, but none of these was cured, except the Syrian, Naaman.’
  When they heard this everyone in the synagogue was enraged. They sprang to their feet and hustled him out of the town; and they took him up to the brow of the hill their town was built on, intending to throw him down the cliff, but he slipped through the crowd and walked away.

The Gospel of the Lord.

August 31st : Responsorial PsalmPsalm 118(119):97-102

August 31st : Responsorial Psalm

Psalm 118(119):97-102 
Lord, how I love your law!

Lord, how I love your law!
  It is ever in my mind.
Your command makes me wiser than my foes;
  for it is mine for ever.

Lord, how I love your law!

I have more insight than all who teach me
  for I ponder your will.
I have more understanding than the old
  for I keep your precepts.

Lord, how I love your law!

I turn my feet from evil paths
  to obey your word.
I have not turned from your decrees;
  you yourself have taught me.

Lord, how I love your law!

Gospel Acclamation Jn8:12

Alleluia, alleluia!
I am the light of the world, says the Lord;
anyone who follows me will have the light of life.
Alleluia!

August 31st : First readingThe only knowledge I claimed was of the crucified Christ

August 31st :  First reading

The only knowledge I claimed was of the crucified Christ.
A Reading from the First Letter of St.Paul to the Corinthians 2:1-5.

When I came to you, brothers, it was not with any show of oratory or philosophy, but simply to tell you what God had guaranteed. During my stay with you, the only knowledge I claimed to have was about Jesus, and only about him as the crucified Christ. Far from relying on any power of my own, I came among you in great ‘fear and trembling’ and in my speeches and the sermons that I gave, there were none of the arguments that belong to philosophy; only a demonstration of the power of the Spirit. And I did this so that your faith should not depend on human philosophy but on the power of God.

The Word of the Lord.

ஆகஸ்ட் 31திங்கள் : நற்செய்தி வாசகம்இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை

ஆகஸ்ட் 31 :  நற்செய்தி வாசகம்

இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 16-30

அக்காலத்தில்
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வு நாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:

“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.

ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.

தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 31திங்கள் : பதிலுரைப் பாடல்திபா 119: 97-98. 99-100. 101-102 . (பல்லவி: 97a)

ஆகஸ்ட் 31 :  பதிலுரைப் பாடல்

திபா 119: 97-98. 99-100. 101-102 . (பல்லவி: 97a)
பல்லவி: ஆண்டவரே! திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
97.ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.
98.என் எதிரிகளை விட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை; ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது. - பல்லவி

99.எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளவனாய் இருக்கின்றேன்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்;
100.முதியோர்களை விட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன். ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன். - பல்லவி

101.உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீய வழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன்.
102.உம் நீதி நெறிகளை விட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா

ஆகஸ்ட் 31திங்கள் : முதல் வாசகம்இயேசுவைத் தவிர வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.

ஆகஸ்ட் 31 : முதல் வாசகம்

இயேசுவைத் தவிர வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

சகோதரர் சகோதரிகளே,

கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறிய வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

ஆண்டவரின் அருள்வாக்கு.