Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, November 25, 2020

GOSPEL*```stand erect, hold your heads high, because your liberation is near at hand.'```*A reading from the Holy Gospel according to St Luke 21:20-28*

*📖GOSPEL*

```stand erect, hold your heads high, because your liberation is near at hand.'```

*A reading from the Holy Gospel according to St Luke 21:20-28*
'When you see Jerusalem surrounded by armies, then you must realise that it will soon be laid desolate. Then those in Judaea must escape to the mountains, those inside the city must leave it, and those in country districts must not take refuge in it. 
For this is the time of retribution when all that scripture says must be fulfilled. Alas for those with child, or with babies at the breast, when those days come! 'For great misery will descend on the land and retribution on this people. They will fall by the edge of the sword and be led captive to every gentile country; and Jerusalem will be trampled down by the gentiles until their time is complete. 'There will be signs in the sun and moon and stars; on earth nations in agony, bewildered by the turmoil of the ocean and its waves; men fainting away with terror and fear at what menaces the world, for the powers of heaven will be shaken. And then they will see the Son of man coming in a cloud with power and great glory. When these things begin to take place, stand erect, hold your heads high, because your liberation is near at hand.'

*The Gospel of the Lord*

I believe in God, /...

🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*```Response: Blessed are those who have been called to the wedding feast of the Lamb.”```*Psalms 100:2, 3, 4, 5*2 serve Yahweh with gladness, come into his presence with songs of joy!

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

```Response: Blessed are those who have been called to the wedding feast of the Lamb.”```

*Psalms 100:2, 3, 4, 5*

2 serve Yahweh with gladness, come into his presence with songs of joy! 
3 Be sure that Yahweh is God, he made us, we belong to him, his people, the flock of his sheepfold. 

4 Come within his gates giving thanks, to his courts singing praise, give thanks to him and bless his name! 

5 For Yahweh is good, his faithful love is everlasting, his constancy from age to age.
____ 

*🌿Before the gospel*
  
```𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔, 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔!  lift up your heads and look around you, because your redemption draws near.” 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔.```
*Luke 21:28*
__________

FIRST READING*_I saw another angel come down from heaven,_*A reading from the Book of Revelation 18:1-2, 21-23; 19:1-3, 9*

_🍁Daily Reading for Thursday November 26, 2020_

*FIRST READING*

_I saw another angel come down from heaven,_

*A reading from the Book of Revelation 18:1-2, 21-23; 19:1-3, 9*
After this, I saw another angel come down from heaven, with great authority given to him; the earth shone with his glory. At the top of his voice he shouted, 'Babylon has fallen, Babylon the Great has fallen, and has become the haunt of devils and a lodging for every foul spirit and dirty, loathsome bird. Then a powerful angel picked up a boulder like a great millstone, and as he hurled it into the sea, he said, 'That is how the great city of Babylon is going to be hurled down, never to be seen again. Never again in you will be heard the song of harpists and minstrels, the music of flute and trumpet; never again will craftsmen of every skill be found in you or the sound of the handmill be heard; 
never again will shine the light of the lamp in you, never again will be heard in you the voices of bridegroom and bride. Your traders were the princes of the earth, all the nations were led astray by your sorcery. After this I heard what seemed to be the great sound of a huge crowd in heaven, singing, "Alleluia! Salvation and glory and power to our God He judges fairly, he punishes justly, and he has condemned the great prostitute who corrupted the earth with her prostitution; he has avenged the blood of his servants which she shed.' And again they sang, 'Alleluia! The smoke of her will rise for ever and ever.' The angel said, 'Write this, "Blessed are those who are invited to the wedding feast of the Lamb," ' and he added, 'These words of God are true.'



*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்*_நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.''_*லூக்கா எழுதிய நற்செய்தி

*📖நற்செய்தி வாசகம்*

_நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.''_

*லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28*
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும். அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும். மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.'' 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

பதிலுரைப் பாடல்**திபா 100: 1-2. 3. 4. 5*_பல்லவி: செம்மறியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்._

*🌿பதிலுரைப் பாடல்*

*திபா 100: 1-2. 3. 4. 5*

_பல்லவி: செம்மறியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்._
1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி 

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்!
நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி 

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்!
புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்!
அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! -பல்லவி 

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி 

______ 

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.
*லூக்கா  21:28*

_வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன்._*திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3,9*

_🍃ஆண்டின் 34ஆம் வாரம் வியாழன் 26/11/2020_

*முதல் வாசகம்*

_வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன்._

*திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3,9*
சகோதரர் சகோதரிகளே, வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது. அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின் வருமாறு கத்தினார்: ``வீழ்ந்தது! வீழ்ந்தது! பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள்.'' பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்: ``பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்; நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடுவாய். யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது; தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்; எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது. விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது; மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது; ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்; உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றி விட்டது.'' இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: ``அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன. ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.'' மீண்டும் அந்த மக்கள், ``அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது'' என்றார்கள். அந்த வானதூதர் என்னிடம், `` `ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்' என எழுது'' என்று கூறினார். 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*