Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, September 12, 2020

September 13th : GospelTo be forgiven, you must forgive.A Reading from the Holy Gospel according to St.Matthew 18:21-35

September 13th :  Gospel

To be forgiven, you must forgive.

A Reading from the Holy Gospel according to St.Matthew 18:21-35 
Peter went up to Jesus and said, ‘Lord, how often must I forgive my brother if he wrongs me? As often as seven times?’ Jesus answered, ‘Not seven, I tell you, but seventy-seven times.
  ‘And so the kingdom of heaven may be compared to a king who decided to settle his accounts with his servants. When the reckoning began, they brought him a man who owed ten thousand talents; but he had no means of paying, so his master gave orders that he should be sold, together with his wife and children and all his possessions, to meet the debt. At this, the servant threw himself down at his master’s feet. “Give me time” he said “and I will pay the whole sum.” And the servant’s master felt so sorry for him that he let him go and cancelled the debt. Now as this servant went out, he happened to meet a fellow servant who owed him one hundred denarii; and he seized him by the throat and began to throttle him. “Pay what you owe me” he said. His fellow servant fell at his feet and implored him, saying, “Give me time and I will pay you.” But the other would not agree; on the contrary, he had him thrown into prison till he should pay the debt. His fellow servants were deeply distressed when they saw what had happened, and they went to their master and reported the whole affair to him. Then the master sent for him. “You wicked servant,” he said “I cancelled all that debt of yours when you appealed to me. Were you not bound, then, to have pity on your fellow servant just as I had pity on you?” And in his anger the master handed him over to the torturers till he should pay all his debt. And that is how my heavenly Father will deal with you unless you each forgive your brother from your heart.’

The Gospel of the Lord.

September 13th : Second Reading Alive or dead, we belong to the LordA Reading from the Letter of St.Paul to the Romans 14:7-9

September 13th : Second Reading 

Alive or dead, we belong to the Lord

A Reading from the Letter of St.Paul to the Romans 14:7-9 
The life and death of each of us has its influence on others; if we live, we live for the Lord; and if we die, we die for the Lord, so that alive or dead we belong to the Lord. This explains why Christ both died and came to life: it was so that he might be Lord both of the dead and of the living.

The Word of the Lord.

Gospel Acclamation 1S3:9,Jn6:68

Alleluia, alleluia!
Speak, Lord, your servant is listening:
you have the message of eternal life.
Alleluia!

September 13th : Responsorial PsalmPsalm 102(103):1-4,9-12

September 13th : Responsorial Psalm

Psalm 102(103):1-4,9-12 
The Lord is compassion and love, slow to anger and rich in mercy.

My soul, give thanks to the Lord
  all my being, bless his holy name.
My soul, give thanks to the Lord
  and never forget all his blessings.

The Lord is compassion and love, slow to anger and rich in mercy.

It is he who forgives all your guilt,
  who heals every one of your ills,
who redeems your life from the grave,
  who crowns you with love and compassion.

The Lord is compassion and love, slow to anger and rich in mercy.

His wrath will come to an end;
  he will not be angry for ever.
He does not treat us according to our sins
  nor repay us according to our faults.

The Lord is compassion and love, slow to anger and rich in mercy.

For as the heavens are high above the earth
  so strong is his love for those who fear him.
As far as the east is from the west
  so far does he remove our sins.

The Lord is compassion and love, slow to anger and rich in mercy.

September 13th : First readingForgive your neighbour the hurt he does you; and when you pray, your sins will be forgivenEcclesiasticus 27:33-28:9

September 13th : First reading

Forgive your neighbour the hurt he does you; and when you pray, your sins will be forgiven

Ecclesiasticus 27:33-28:9 
Resentment and anger, these are foul things, and both are found with the sinner. He who exacts vengeance will experience the vengeance of the Lord,  who keeps strict account of sin.Forgive your neighbour the hurt he does you,  and when you pray, your sins will be forgiven. If a man nurses anger against another,  can he then demand compassion from the Lord? Showing no pity for a man like himself, can he then plead for his own sins? Mere creature of flesh, he cherishes resentment; who will forgive him his sins? Remember the last things, and stop hating,  remember dissolution and death, and live by the commandments. Remember the commandments, and do not bear your neighbour ill-will;  remember the covenant of the Most High, and overlook the offence.

The Word of the Lord.

செப்டம்பர் 13 : நற்செய்தி வாசகம்ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35

செப்டம்பர் 13 :  நற்செய்தி வாசகம்

ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35
அக்காலத்தில்

பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா"? எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கிய பொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான்.

அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 13 : இரண்டாம் வாசகம்வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14: 7-9

செப்டம்பர் 13 :  இரண்டாம் வாசகம்

வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 14: 7-9
சகோதரர் சகோதரிகளே,

நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சி செலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

செப்டம்பர் 13 : பதிலுரைப் பாடல்திபா 103: 1-2. 3-4. 9-10. 11-12 . (பல்லவி: 8)பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

செப்டம்பர் 13 : பதிலுரைப் பாடல்

திபா 103: 1-2. 3-4. 9-10. 11-12 . (பல்லவி: 8)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
1.என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2.என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3.அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4.அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

9.அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்ளுபவரல்லர்.
10.அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - பல்லவி

11.அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது.
12.மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். - பல்லவி

செப்டம்பர் 13 : முதல் வாசகம்உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்.சீராக்கின் ஞான நூலிருந்து வாசகம் 27: 30- 28: 7

செப்டம்பர் 13 : முதல் வாசகம்

உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்.

சீராக்கின் ஞான நூலிருந்து வாசகம் 27: 30- 28: 7
வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை; பாவிகள் இவற்றைப் பற்றிக்கொள்கின்றார்கள்.

பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப் பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார்.

உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்; அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மனிதர் தம் போன்ற மனிதருக்கு இரக்கம் காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவ மன்னிப்புக்காக எப்படி மன்றாட முடியும்? அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்?

உன் முடிவை நினைத்துப் பார்; பகைமையை அகற்று; அழிவையும் சாவையும் நினைத்துப் பார்; கட்டளைகளில் நிலைத்திரு. கட்டளைகளை நினைவில் கொள்; அடுத்தவர் மீது சினங்கொள்ளாதே; உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை; குற்றங்களைப் பொருட்படுத்தாதே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பொதுக்காலம் இருபத்து நான்காம் ஞாயிறு(செப்டம்பர் 13)