Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, May 2, 2021

மே 3 :நற்செய்தி வாசகம்இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா?✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 6-14

மே 3 :
நற்செய்தி வாசகம்

இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா?

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 6-14
அக்காலத்தில்

இயேசு, தோமாவை நோக்கி: “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்” என்றார்.

அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.

இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.

நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மே 3 : பதிலுரைப் பாடல்திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

மே 3 : 
பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)
பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
அல்லது: அல்லேலூயா.
1
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. - பல்லவி

3
அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில்படுவதுமில்லை.
4
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6b, 9c
அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. பிலிப்பே, என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 3: புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழாயாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8

மே 3:  புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு - திருத்தூதர்கள் விழா

யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 1-8

சகோதரர் சகோதரிகளே,
உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.

நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

MONDAY MAY 03, 2021 📖GOSPEL "I've been with you for so long, and you don't know me!" A Reading From The Holy Gospel According To John (14, 6-14)

MONDAY MAY 03, 2021 

📖GOSPEL 

"I've been with you for so long, and you don't know me!"  

A Reading From The Holy Gospel According To John (14, 6-14) 
At that time, Jesus said to Thomas: “I am the Way, the Truth and the Life; no one goes to the Father without going through me. Since you know me, you will also know my Father. From now on you know him, and you have seen him. »Philip said to him:« Lord, show us the Father; that is enough for us. "Jesus answered him:" I have been with you for so long, and you do not know me, Philip! He who has seen me has seen the Father. How can you say, “Show us the Father”? So you don't believe that I am in the Father and that the Father is in me! The words that I say to you, I do not say them of myself; the Father who abides in me does his own works. Believe me: I am in the Father, and the Father is in me; if you don't believe me, at least believe because of the works themselves. Amen, amen, I tell you: he who believes in me will do the works that I do. He will make even greater ones, because I am going to the Father, and whatever you ask in my name I will do, that the Father may be glorified in the Son. When you ask me for something on my behalf, I will. " 

The Gospel of the Lord

MONDAY MAY 03, 2021 RESPONSORIAL Respons : All over the earth their message goes. Or: Hallelujah. Psalm 18 (19)

MONDAY MAY 03, 2021 

RESPONSORIAL 

Respons : All over the earth their message goes. 
Or: Hallelujah. 

Psalm 18 (19) 
The heavens proclaim the glory of God,
the firmament tells about the work of his hands.
Day to day delivers the story
and night to night gives knowledge of it. R 

No words in this story,
no voice that can be heard;
but the message
and the news appear all over the world , at the limits of the world. R 

_______ 

🌿Gospel Acclamation. 

Hallelujah, Hallelujah! The way and the truth and the life is myself. Philip, to see me is to see the Father, says the Lord. Hallelujah.
____________________________.,

MONDAY MAY 03, 2021 FIRST READING "He appeared to James, then to all the Apostles" A Reading from the first letter of Saint Paul the apostle to the Corinthians (15, 1-8)

MONDAY MAY 03, 2021 

FIRST READING 

"He appeared to James, then to all the Apostles" 

A Reading from the first letter of Saint Paul the apostle to the Corinthians (15, 1-8) 
Brothers, I remind you of the Good News that I announced to you; this Gospel, you have received it; it is in him that you stand firm, it is through him that you will be saved if you keep him as I announced to you; otherwise, you have become believers for nothing. First of all, I transmitted this to you, which I myself received: Christ died for our sins according to the Scriptures, and was laid in the tomb; he rose again on the third day according to the Scriptures, he appeared to Peter, then to the Twelve; then he appeared to more than five hundred brothers at a time - most of them are still alive, and a few are asleep in death -, then he appeared to James, then to all the Apostles. And in the very last place, it even appeared to the runt that I am. 

The Word of the Lord.
_________________________________.