Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, July 22, 2023

ஜூலை 23 : நற்செய்தி வாசகம்அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-43

ஜூலை 23 :  நற்செய்தி வாசகம்

அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-43
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான்.

பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள். அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ என்று கூறுவேன்” என்றார்.

இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.”

அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.”

இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேச வில்லை. “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது. அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவர் அருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்:

“நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.

எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 23 : இரண்டாம் வாசகம்தூய ஆவியார் தாமே நமக்காகப் பரிந்து பேசுகிறார்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-27

ஜூலை 23 :  இரண்டாம் வாசகம்

தூய ஆவியார் தாமே நமக்காகப் பரிந்து பேசுகிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-27
சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறை மக்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! 

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

ஜூலை 23 : பதிலுரைப் பாடல்திபா 86: 5-6. 9-10. 15-16 (பல்லவி: 5a)பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர்.

ஜூலை 23 :  பதிலுரைப் பாடல்

திபா 86: 5-6. 9-10. 15-16 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர்.
5
என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
6
ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். - பல்லவி

9
என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.
10
ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! - பல்லவி

15
என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்.
16
என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். - பல்லவி

ஜூலை 23 : முதல் வாசகம்எம் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 12: 13, 16-19

ஜூலை 23 :  முதல் வாசகம்

எம் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 12: 13, 16-19
ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின் மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்ட வேண்டும்?

உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின் மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது. மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்; அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர். நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும் போதெல்லாம் செயல் புரிய உமக்கு வலிமை உண்டு.

நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்; உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்; ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 23rd : GospelLet them both grow till the harvestA reading from the Holy Gospel according to St.Matthew 13: 24-43

July 23rd :  Gospel

Let them both grow till the harvest

A reading from the Holy Gospel according to St.Matthew 13: 24-43
Jesus put another parable before the crowds: ‘The kingdom of heaven may be compared to a man who sowed good seed in his field. While everybody was asleep his enemy came, sowed darnel all among the wheat, and made off. When the new wheat sprouted and ripened, the darnel appeared as well. The owner’s servants went to him and said, “Sir, was it not good seed that you sowed in your field? If so, where does the darnel come from?” “Some enemy has done this” he answered. And the servants said, “Do you want us to go and weed it out?” But he said, “No, because when you weed out the darnel you might pull up the wheat with it. Let them both grow till the harvest; and at harvest time I shall say to the reapers: First collect the darnel and tie it in bundles to be burnt, then gather the wheat into my barn.”’
  He put another parable before them: ‘The kingdom of heaven is like a mustard seed which a man took and sowed in his field. It is the smallest of all the seeds, but when it has grown it is the biggest shrub of all and becomes a tree so that the birds of the air come and shelter in its branches.’
  He told them another parable: ‘The kingdom of heaven is like the yeast a woman took and mixed in with three measures of flour till it was leavened all through.’
  In all this Jesus spoke to the crowds in parables; indeed, he would never speak to them except in parables. This was to fulfil the prophecy:
I will speak to you in parables
and expound things hidden since the foundation of the world.
Then, leaving the crowds, he went to the house; and his disciples came to him and said, ‘Explain the parable about the darnel in the field to us.’ He said in reply, ‘The sower of the good seed is the Son of Man. The field is the world; the good seed is the subjects of the kingdom; the darnel, the subjects of the evil one; the enemy who sowed them, the devil; the harvest is the end of the world; the reapers are the angels. Well then, just as the darnel is gathered up and burnt in the fire, so it will be at the end of time. The Son of Man will send his angels and they will gather out of his kingdom all things that provoke offences and all who do evil, and throw them into the blazing furnace, where there will be weeping and grinding of teeth. Then the virtuous will shine like the sun in the kingdom of their Father. Listen, anyone who has ears!’

The Word of the Lord.

July 23rd : Second reading The Spirit himself expresses our plea in a way that could never be put into wordsA reading from the letter of St.Paul to the Romans 8:26-27

July 23rd :  Second reading 

The Spirit himself expresses our plea in a way that could never be put into words

A reading from the letter of St.Paul to the Romans 8:26-27 
The Spirit comes to help us in our weakness. For when we cannot choose words in order to pray properly, the Spirit himself expresses our plea in a way that could never be put into words, and God who knows everything in our hearts knows perfectly well what he means, and that the pleas of the saints expressed by the Spirit are according to the mind of God.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Ep1:17,18

Alleluia, alleluia!
May the Father of our Lord Jesus Christ
enlighten the eyes of our mind,
so that we can see what hope his call holds for us.
Alleluia!

July 23rd : Responsorial PsalmPsalm 85(86):5-6,9-10,15-16 O Lord, you are good and forgiving.

July 23rd :  Responsorial Psalm

Psalm 85(86):5-6,9-10,15-16 

O Lord, you are good and forgiving.
O Lord, you are good and forgiving,
  full of love to all who call.
Give heed, O Lord, to my prayer
  and attend to the sound of my voice.

O Lord, you are good and forgiving.

All the nations shall come to adore you
  and glorify your name, O Lord:
for you are great and do marvellous deeds,
  you who alone are God.

O Lord, you are good and forgiving.

But you, God of mercy and compassion,
  slow to anger, O Lord,
abounding in love and truth,
  turn and take pity on me.

O Lord, you are good and forgiving.

July 23rd : First readingYou will grant repentance after sinA reading from the book of Wisdom 12:13,16-19

July 23rd :  First reading

You will grant repentance after sin

A reading from the book of Wisdom 12:13,16-19 
There is no god, other than you, who cares for every thing,
to whom you might have to prove that you never judged unjustly.
Your justice has its source in strength,
your sovereignty over all makes you lenient to all.
You show your strength when your sovereign power is questioned
and you expose the insolence of those who know it;
but, disposing of such strength, you are mild in judgement,
you govern us with great lenience,
for you have only to will, and your power is there.
By acting thus you have taught a lesson to your people
how the virtuous man must be kindly to his fellow men,
and you have given your sons the good hope
that after sin you will grant repentance.

The Word of the Lord.