Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, February 4, 2023

பிப்ரவரி 5 : இரண்டாம் வாசகம்கடவுளைப் பற்றிய மறைபொருளை உங்களுக்கு அறிவித்தேன்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

பிப்ரவரி 5 :  இரண்டாம் வாசகம்

கடவுளைப் பற்றிய மறைபொருளை உங்களுக்கு அறிவித்தேன்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5
சகோதரர் சகோதரிகளே,

கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை.

நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12
அல்லேலூயா, அல்லேலூயா! 

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

பிப்ரவரி 5 : பதிலுரைப் பாடல்திபா 112: 4-5. 6-7. 8a,9 (பல்லவி: 4a)பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்.

பிப்ரவரி 5 :  பதிலுரைப் பாடல்

திபா 112: 4-5. 6-7. 8a,9 (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்.
4
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.
5
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். - பல்லவி

6
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.
7
தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். - பல்லவி

8a
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;
9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி

பிப்ரவரி 5 : முதல் வாசகம்உன் ஒளி விடியல் போல் எழும்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 7-10

பிப்ரவரி 5 :  முதல் வாசகம்

உன் ஒளி விடியல் போல் எழும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 7-10
ஆண்டவர் கூறுவது:

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் ‘இதோ! நான்’ என மறுமொழி தருவார்.

உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக் காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 5th : Responsorial PsalmPsalm 111(112):4-9 The good man is a light in the darkness for the upright.orAlleluia

February 5th :  Responsorial Psalm

Psalm 111(112):4-9 

The good man is a light in the darkness for the upright.
or
Alleluia!
He is a light in the darkness for the upright:
  he is generous, merciful and just.
The good man takes pity and lends,
  he conducts his affairs with honour.

The good man is a light in the darkness for the upright.
or
Alleluia!

The just man will never waver:
  he will be remembered for ever.
He has no fear of evil news;
  with a firm heart he trusts in the Lord.

The good man is a light in the darkness for the upright.
or
Alleluia!

With a steadfast heart he will not fear;
open-handed, he gives to the poor;
  his justice stands firm for ever.
  His head will be raised in glory.

The good man is a light in the darkness for the upright.
or
Alleluia!

February 5th : Gospel Your light must shine in the sight of menA Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16

February 5th :  Gospel 

Your light must shine in the sight of men

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:13-16 
Jesus said to his disciples: ‘You are the salt of the earth. But if salt becomes tasteless, what can make it salty again? It is good for nothing, and can only be thrown out to be trampled underfoot by men.
  ‘You are the light of the world. A city built on a hill-top cannot be hidden. No one lights a lamp to put it under a tub; they put it on the lamp-stand where it shines for everyone in the house. In the same way your light must shine in the sight of men, so that, seeing your good works, they may give the praise to your Father in heaven.’

The Word of the Lord.

February 5th : Second ReadingThe only knowledge I claimed was of the crucified ChristA Reading from the First Letter of St.Paul to the Corinthians 2:1-5

February 5th :  Second Reading

The only knowledge I claimed was of the crucified Christ

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 2:1-5 
When I came to you, brothers, it was not with any show of oratory or philosophy, but simply to tell you what God had guaranteed. During my stay with you, the only knowledge I claimed to have was about Jesus, and only about him as the crucified Christ. Far from relying on any power of my own, I came among you in great ‘fear and trembling’ and in my speeches and the sermons that I gave, there were none of the arguments that belong to philosophy; only a demonstration of the power of the Spirit. And I did this so that your faith should not depend on human philosophy but on the power of God.

The Word of the Lord.

Gospel Acclamation Jn8:12

Alleluia, alleluia!

I am the light of the world, says the Lord;
anyone who follows me will have the light of life.
Alleluia!

February 5th : First Reading Then will your light shine like the dawnA Reading from the Book of Isaiah 58: 7-10

February 5th :  First Reading 

Then will your light shine like the dawn

A Reading from the Book of Isaiah 58: 7-10 
Thus says the Lord:
Share your bread with the hungry,
and shelter the homeless poor,
clothe the man you see to be naked
and do not turn from your own kin.
Then will your light shine like the dawn
and your wound be quickly healed over.
Your integrity will go before you
and the glory of the Lord behind you.
Cry, and the Lord will answer;
call, and he will say, ‘I am here.’
If you do away with the yoke,
the clenched fist, the wicked word,
if you give your bread to the hungry,
and relief to the oppressed,
your light will rise in the darkness,
and your shadows become like noon.

The Word of the Lord.