Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, May 19, 2022

மே 20 : நற்செய்தி வாசகம்நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-17

மே 20 :  நற்செய்தி வாசகம்

நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-17
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.”

ஆண்டவரின் அருள்வாக்கு..

மே 20 : பதிலுரைப் பாடல்திபா 57: 7-8. 9-11 (பல்லவி: 9a)பல்லவி: என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்.

மே 20 : பதிலுரைப் பாடல்

திபா 57: 7-8. 9-11 (பல்லவி: 9a)

பல்லவி: என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்.
அல்லது: அல்லேலூயா.

7
என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
8
என் நெஞ்சே, விழித்தெழு! வீணையே, யாழே, விழித்தெழுங்கள்; வைகறையை நான் விழித்தெழச் செய்வேன். - பல்லவி

9
என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10
ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது!
11
கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக; பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 15b

அல்லேலூயா, அல்லேலூயா!

 உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில், என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மே 20 : முதல் வாசகம்இன்றியமையாதவற்றைத் தவிர வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 22-31

மே 20 :  முதல் வாசகம்

இன்றியமையாதவற்றைத் தவிர வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 22-31
அந்நாள்களில்

திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.

அக்கடிதத்தில், “திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள். ” என்று எழுதியிருந்தார்கள்.

யூதாவும் சீலாவும் விடை பெற்று அந்தியோக்கியா வந்தனர். அங்கு மக்களைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர். அதை வாசித்ததும் அவர்கள் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

May 20th : Gospel What I command you is to love one anotherA Reading from the Holy Gospel according to St.John 15: 12-17

May 20th :  Gospel 

What I command you is to love one another

A Reading from the Holy Gospel according to St.John 15: 12-17 
Jesus said to his disciples:
‘This is my commandment:
love one another,
as I have loved you.
A man can have no greater love
than to lay down his life for his friends.
You are my friends,
if you do what I command you.
I shall not call you servants any more,
because a servant does not know
his master’s business;
I call you friends,
because I have made known to you
everything I have learnt from my Father.
You did not choose me:
no, I chose you;
and I commissioned you
to go out and to bear fruit,
fruit that will last;
and then the Father will give you
anything you ask him in my name.
What I command you is to love one another.’

The Word of the Lord.

May 20th : Responsorial PsalmPsalm 56(57):8-12 ©I will thank you, Lord, among the peoples.orAlleluia!

May 20th :  Responsorial Psalm

Psalm 56(57):8-12 ©

I will thank you, Lord, among the peoples.
or
Alleluia!
My heart is ready, O God,
  my heart is ready.
  I will sing, I will sing your praise.
Awake, my soul,
  awake, lyre and harp,
  I will awake the dawn.

I will thank you, Lord, among the peoples.
or
Alleluia!

I will thank you, Lord, among the peoples,
  among the nations I will praise you
for your love reaches to the heavens
  and your truth to the skies.
O God, arise above the heavens;
  may your glory shine on earth!

I will thank you, Lord, among the peoples.
or
Alleluia!

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!

The sheep that belong to me listen to my voice,
says the Lord,
I know them and they follow me.
Alleluia!

May 20th : First Reading It has been decided by the Holy Spirit and by us not to burden you beyond these essentialsA Reding from the Acts of Apostles 15: 22-31

May 20th :  First Reading 

It has been decided by the Holy Spirit and by us not to burden you beyond these essentials

A Reding from the Acts of Apostles 15: 22-31 
The apostles and elders decided to choose delegates to send to Antioch with Paul and Barnabas; the whole church concurred with this. They chose Judas known as Barsabbas and Silas, both leading men in the brotherhood, and gave them this letter to take with them:
  ‘The apostles and elders, your brothers, send greetings to the brothers of pagan birth in Antioch, Syria and Cilicia. We hear that some of our members have disturbed you with their demands and have unsettled your minds. They acted without any authority from us; and so we have decided unanimously to elect delegates and to send them to you with Barnabas and Paul, men we highly respect who have dedicated their lives to the name of our Lord Jesus Christ. Accordingly we are sending you Judas and Silas, who will confirm by word of mouth what we have written in this letter. It has been decided by the Holy Spirit and by ourselves not to saddle you with any burden beyond these essentials: you are to abstain from food sacrificed to idols; from blood, from the meat of strangled animals and from fornication. Avoid these, and you will do what is right. Farewell.’
  The party left and went down to Antioch, where they summoned the whole community and delivered the letter. The community read it and were delighted with the encouragement it gave them.

The Word of the Lord.