Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, September 5, 2020

September 6th : GospelIf your brother listens to you, you have won back your brother.A Reading from the Holy Gospel according to St.Matthew 18:15-20

September 6th : Gospel

If your brother listens to you, you have won back your brother.

A Reading from the Holy Gospel according to St.Matthew 18:15-20 
Jesus said to his disciples: ‘If your brother does something wrong, go and have it out with him alone, between your two selves. If he listens to you, you have won back your brother. If he does not listen, take one or two others along with you: the evidence of two or three witnesses is required to sustain any charge. But if he refuses to listen to these, report it to the community; and if he refuses to listen to the community, treat him like a pagan or a tax collector.
  ‘I tell you solemnly, whatever you bind on earth shall be considered bound in heaven; whatever you loose on earth shall be considered loosed in heaven.
  ‘I tell you solemnly once again, if two of you on earth agree to ask anything at all, it will be granted to you by my Father in heaven. For where two or three meet in my name, I shall be there with them.’

The Gospel of the Lord.

September 6th : Second ReadingYour only debt should be the debt of mutual love.A Reading from the Letter of St.Paul to the Romans 13:8-10

September 6th : Second Reading

Your only debt should be the debt of mutual love.

A Reading from the Letter of St.Paul to the Romans 13:8-10 
Avoid getting into debt, except the debt of mutual love. If you love your fellow men you have carried out your obligations. All the commandments: You shall not commit adultery, you shall not kill, you shall not steal, you shall not covet, and so on, are summed up in this single command: You must love your neighbour as yourself. Love is the one thing that cannot hurt your neighbour; that is why it is the answer to every one of the commandments.

The Word of the Lord.

Gospel Acclamation Jn17:17

Alleluia, alleluia!
Your word is truth, O Lord:
consecrate us in the truth.
Alleluia!

September 6th : Responsorial PsalmPsalm 94(95):1-2,6-9

September 6th : Responsorial Psalm

Psalm 94(95):1-2,6-9 
O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

Come, ring out our joy to the Lord;
  hail the rock who saves us.
Let us come before him, giving thanks,
  with songs let us hail the Lord.

O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

Come in; let us bow and bend low;
  let us kneel before the God who made us:
for he is our God and we
  the people who belong to his pasture,
  the flock that is led by his hand.

O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

O that today you would listen to his voice!
  ‘Harden not your hearts as at Meribah,
  as on that day at Massah in the desert
when your fathers put me to the test;
  when they tried me, though they saw my work.’

O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

September 6th : First Reading If you do not speak to the wicked man, I will hold you responsible for his death.A Reading from the Book of Ezekiel 33:7-9

September 6th : First Reading 

If you do not speak to the wicked man, I will hold you responsible for his death.

A Reading from the Book of Ezekiel 33:7-9 
The word of the Lord was addressed to me as follows: ‘Son of man, I have appointed you as sentry to the House of Israel. When you hear a word from my mouth, warn them in my name. If I say to a wicked man: Wicked wretch, you are to die, and you do not speak to warn the wicked man to renounce his ways, then he shall die for his sin, but I will hold you responsible for his death. If, however, you do warn a wicked man to renounce his ways and repent, and he does not repent, then he shall die for his sin, but you yourself will have saved your life.’

The Word of the Lord.

செப்டம்பர் 6 ஞாயிறு : நற்செய்தி வாசகம்குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20

செப்டம்பர் 6 :  நற்செய்தி வாசகம்

குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20
அக்காலத்தில்

இயேசு சீடர்களிடம் கூறியது: “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.

மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.

ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 6 ஞாயிறு : இரண்டாம் வாசகம்அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10

செப்டம்பர் 6 :  இரண்டாம் வாசகம்

அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10
சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், “விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே” என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், “உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக” என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

செப்டம்பர் 6 ஞாயிறு : பதிலுரைப் பாடல்திபா 95: 1-2. 6-7. 8-9 . (பல்லவி: 8b)பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்

செப்டம்பர் 6 :  பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 8-9 . (பல்லவி: 8b)

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
1.வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2.நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி

6.வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7.அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! - பல்லவி

8.அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9.அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி

செப்டம்பர் 6 ஞாயிறு : முதல் வாசகம்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அவர்களது இரத்தப்பழியை உன் மேல் சுமத்துவேன்.இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 33: 7-9

செப்டம்பர் 6 : முதல் வாசகம்

தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அவர்களது இரத்தப்பழியை உன் மேல் சுமத்துவேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 33: 7-9
ஆண்டவர் கூறியது:

மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும் போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். தீயோரிடம் நான், ‘ ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்’ என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.