Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, October 13, 2020

அக்டோபர் 14 : நற்செய்தி வாசகம்பரிசேயரே உங்களுக்குக் கேடு! ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு!லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46

அக்டோபர் 14 :  நற்செய்தி வாசகம்

பரிசேயரே உங்களுக்குக் கேடு! ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46
அக்காலத்தில் இயேசு கூறியது:

“ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது.

ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்."

திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவு படுத்துகிறீர்” என்றார்.

அதற்கு அவர், “ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 14 : பதிலுரைப் பாடல்திபா 1: 1-2. 3. 4,6 . (பல்லவி: யோவா 8: 12a)பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.

அக்டோபர் 14  :  பதிலுரைப் பாடல்

திபா 1: 1-2. 3. 4,6 . (பல்லவி: யோவா 8: 12a)

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
1.நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2.ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி

3.அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி

4.ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.
6.நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

அக்டோபர் 14 : முதல் வாசகம்கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25

அக்டோபர் 14 :  முதல் வாசகம்

கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25
சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.

ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.

ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவை உள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவு உணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்து விட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 14th : Gospel You overlook justice and the love of God.A Reading from the Holy Gospel according to St.Luke 11:42-46

October 14th :  Gospel 

You overlook justice and the love of God.

A Reading from the Holy Gospel according to St.Luke 11:42-46 
The Lord said to the Pharisees: ‘Alas for you Pharisees! You who pay your tithe of mint and rue and all sorts of garden herbs and overlook justice and the love of God! These you should have practised, without leaving the others undone. Alas for you Pharisees who like taking the seats of honour in the synagogues and being greeted obsequiously in the market squares! Alas for you, because you are like the unmarked tombs that men walk on without knowing it!
  A lawyer then spoke up. ‘Master,’ he said ‘when you speak like this you insult us too.’
  ‘Alas for you lawyers also,’ he replied ‘because you load on men burdens that are unendurable, burdens that you yourselves do not move a finger to lift.’

The Gospel of the Lord.

October 14th : Responsorial PsalmPsalm 1:1-4,6 Anyone who follows you, O Lord, will have the light of life.

October 14th :   Responsorial Psalm

Psalm 1:1-4,6 

Anyone who follows you, O Lord, will have the light of life.
Happy indeed is the man
  who follows not the counsel of the wicked;
nor lingers in the way of sinners
  nor sits in the company of scorners,
but whose delight is the law of the Lord
  and who ponders his law day and night.

Anyone who follows you, O Lord, will have the light of life.

He is like a tree that is planted
  beside the flowing waters,
that yields its fruit in due season
  and whose leaves shall never fade;
  and all that he does shall prosper.

Anyone who follows you, O Lord, will have the light of life.

Not so are the wicked, not so!
For they like winnowed chaff
  shall be driven away by the wind:
for the Lord guards the way of the just
  but the way of the wicked leads to doom.

Anyone who follows you, O Lord, will have the light of life.

Gospel Acclamation cf.Ps26:11

Alleluia, alleluia!
Instruct me, Lord, in your way;
on an even path lead me.
Alleluia!

October 14th : First readingTo belong to Christ, crucify all self-indulgence.A Reading from the Letter of St.Paul to the Galatians 5:18-25.

October 14th :  First reading

To belong to Christ, crucify all self-indulgence.

A Reading from the Letter of St.Paul to the Galatians 5:18-25.
If you are led by the Spirit, no law can touch you. When self-indulgence is at work the results are obvious: fornication, gross indecency and sexual irresponsibility; idolatry and sorcery; feuds and wrangling, jealousy, bad temper and quarrels; disagreements, factions, envy; drunkenness, orgies and similar things. I warn you now, as I warned you before: those who behave like this will not inherit the kingdom of God. What the Spirit brings is very different: love, joy, peace, patience, kindness, goodness, trustfulness, gentleness and self-control. There can be no law against things like that, of course. You cannot belong to Christ Jesus unless you crucify all self-indulgent passions and desires.
  Since the Spirit is our life, let us be directed by the Spirit.

The Word of the Lord.

அக்டோபர் 14 பொதுக்காலம் இருபத்து எட்டாம் வாரம் புதன்கிழமை