Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, February 3, 2024

பிப்ரவரி 4 : நற்செய்தி வாசகம்பல்வேறு பிணிகளால் வருந்தியவரை இயேசு குணப்படுத்தினார்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39

பிப்ரவரி 4 :  நற்செய்தி வாசகம்

பல்வேறு பிணிகளால் வருந்தியவரை இயேசு குணப்படுத்தினார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-39
அக்காலத்தில்

இயேசுவும் சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப்பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரைவிட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.

மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டு வந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.

இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றிப் பேய்களை ஓட்டி வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 4 : இரண்டாம் வாசகம்நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23

பிப்ரவரி 4 :  இரண்டாம் வாசகம்

நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23
சகோதரர் சகோதரிகளே,

நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 8: 17
அல்லேலூயா, அல்லேலூயா! 

இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

பிப்ரவரி 4 : பதிலுரைப் பாடல்திபா 147: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 3a)பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்.அல்லது: அல்லேலூயா.

பிப்ரவரி 4 :  பதிலுரைப் பாடல்

திபா 147: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 3a)

பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்.

அல்லது: அல்லேலூயா.
1
நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது.
2
ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். - பல்லவி

3
உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.
4
விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். - பல்லவி

5
நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.
6
ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். - பல்லவி

பிப்ரவரி 4 : முதல் வாசகம்விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன்.யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4, 6-7

பிப்ரவரி 4 :  முதல் வாசகம்

விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன்.

யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4, 6-7
யோபு கூறியது:

மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின.

படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன்.

என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 4th : Gospel He cast out devils and cured many who were suffering from diseaseA reading from the Holy Gospel according to St.Mark 1:29-39

February 4th :  Gospel  

He cast out devils and cured many who were suffering from disease

A reading from the Holy Gospel according to St.Mark 1:29-39
On leaving the synagogue, Jesus went with James and John straight to the house of Simon and Andrew. Now Simon’s mother-in-law had gone to bed with fever, and they told him about her straightaway. He went to her, took her by the hand and helped her up. And the fever left her and she began to wait on them.
  That evening, after sunset, they brought to him all who were sick and those who were possessed by devils. The whole town came crowding round the door, and he cured many who were suffering from diseases of one kind or another; he also cast out many devils, but he would not allow them to speak, because they knew who he was.
  In the morning, long before dawn, he got up and left the house, and went off to a lonely place and prayed there. Simon and his companions set out in search of him, and when they found him they said, ‘Everybody is looking for you.’ He answered, ‘Let us go elsewhere, to the neighbouring country towns, so that I can preach there too, because that is why I came.’ And he went all through Galilee, preaching in their synagogues and casting out devils.

The Word of the Lord.

February 4th : Second readingI should be punished if I did not preach the GospelA reading from the first letter of St.Paul to the Corinthians 9:16-19,22-23

February 4th :  Second reading

I should be punished if I did not preach the Gospel

A reading from the first letter of St.Paul to the Corinthians 9:16-19,22-23 
I do not boast of preaching the gospel, since it is a duty which has been laid on me; I should be punished if I did not preach it! If I had chosen this work myself, I might have been paid for it, but as I have not, it is a responsibility which has been put into my hands. Do you know what my reward is? It is this: in my preaching, to be able to offer the Good News free, and not insist on the rights which the gospel gives me.
  So though I am not a slave of any man I have made myself the slave of everyone so as to win as many as I could. For the weak I made myself weak: I made myself all things to all men in order to save some at any cost; and I still do this, for the sake of the gospel, to have a share in its blessings.

The Word of the Lord.

Gospel Acclamation Jn8:12

Alleluia, alleluia!

I am the light of the world, says the Lord;
anyone who follows me will have the light of life.
Alleluia!

February 4th : Responsorial PsalmPsalm 146(147):1-6 Praise the Lord who heals the broken-hearted.orAlleluia!

February 4th :  Responsorial Psalm

Psalm 146(147):1-6 

Praise the Lord who heals the broken-hearted.
or
Alleluia!
Praise the Lord for he is good;
  sing to our God for he is loving:
  to him our praise is due.

Praise the Lord who heals the broken-hearted.
or
Alleluia!

The Lord builds up Jerusalem
  and brings back Israel’s exiles,
he heals the broken-hearted,
  he binds up all their wounds.
He fixes the number of the stars;
  he calls each one by its name.

Praise the Lord who heals the broken-hearted.
or
Alleluia!
Our Lord is great and almighty;

  his wisdom can never be measured.
The Lord raises the lowly;
  he humbles the wicked to the dust.

Praise the Lord who heals the broken-hearted.
or
Alleluia!

February 4th : First reading My life is but a breathA reading from the book of Job 7:1-4, 6-7

February 4th :  First reading 

My life is but a breath

A reading from the book of Job 7:1-4, 6-7 
Job began to speak:
Is not man’s life on earth nothing more than pressed service,
  his time no better than hired drudgery?
Like the slave, sighing for the shade,
  or the workman with no thought but his wages,
months of delusion I have assigned to me,
  nothing for my own but nights of grief.
Lying in bed I wonder, ‘When will it be day?’
  Risen I think, ‘How slowly evening comes!’
  Restlessly I fret till twilight falls.
Swifter than a weaver’s shuttle my days have passed,
  and vanished, leaving no hope behind.
Remember that my life is but a breath,
  and that my eyes will never again see joy.

The Word of the Lord.