Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, October 26, 2023

அக்டோபர் 27 : நற்செய்தி வாசகம்நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் நீங்கள், இக்காலத்தை ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்டோபர் 27 :  நற்செய்தி வாசகம்

நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் நீங்கள், இக்காலத்தை ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?

நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார்.

கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 27 : பதிலுரைப் பாடல்திபா 119: 66,68. 76,77. 93,94 (பல்லவி: 68b)பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.

அக்டோபர் 27 : பதிலுரைப் பாடல்

திபா 119: 66,68. 76,77. 93,94 (பல்லவி: 68b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.
66
நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
68
நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். - பல்லவி

76
எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ!
77
நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். - பல்லவி

93
உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர்.
94
உமக்கே நான் உரிமை; என்னைக் காத்தருளும்; ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! 

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

அக்டோபர் 27 : முதல் வாசகம்சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7: 18-25a

அக்டோபர் 27 :   முதல் வாசகம்

சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7: 18-25a
சகோதரர் சகோதரிகளே,

என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.

நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கிறேன். நான் கடவுளின் சட்டத்தைக் குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது.

அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி!

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 27th : Gospel Do you not know how to interpret these times?A reading from the Holy Gospel according to St.Luke 12:54-59

October 27th :  Gospel 

Do you not know how to interpret these times?

A reading from the Holy Gospel according to St.Luke 12:54-59 
Jesus said to the crowds: ‘When you see a cloud looming up in the west you say at once that rain is coming, and so it does. And when the wind is from the south you say it will be hot, and it is. Hypocrites! You know how to interpret the face of the earth and the sky. How is it you do not know how to interpret these times?
  ‘Why not judge for yourselves what is right? For example: when you go to court with your opponent, try to settle with him on the way, or he may drag you before the judge and the judge hand you over to the bailiff and the bailiff have you thrown into prison. I tell you, you will not get out till you have paid the very last penny.’

The Word of the Lord.

October 27th : Responsorial PsalmPsalm 118(119):66,68,76-77,93-94 Lord, teach me your statutes.

October 27th :  Responsorial Psalm

Psalm 118(119):66,68,76-77,93-94 

Lord, teach me your statutes.
Teach me discernment and knowledge
  for I trust in your commands.
You are good and your deeds are good;
  teach me your statutes.

Lord, teach me your statutes.

Let your love be ready to console me
  by your promise to your servant.
Let your love come and I shall live
  for your law is my delight.

Lord, teach me your statutes.

I will never forget your precepts
  for with them you give me life.
Save me, for I am yours
  since I seek your precepts.

Lord, teach me your statutes.

Gospel Acclamation Ps94:8

Alleluia, alleluia!

Harden not your hearts today,
but listen to the voice of the Lord.
Alleluia!

October 27th : First reading Every time I want to do good it is something evil that comes to handA reading from the letter of St.Paul to the Romans 7:18-25

October 27th :  First reading 

Every time I want to do good it is something evil that comes to hand

A reading from the letter of St.Paul to the Romans 7:18-25 
I know of nothing good living in me – living, that is, in my unspiritual self – for though the will to do what is good is in me, the performance is not, with the result that instead of doing the good things I want to do, I carry out the sinful things I do not want. When I act against my will, then, it is not my true self doing it, but sin which lives in me.
  In fact, this seems to be the rule, that every single time I want to do good it is something evil that comes to hand. In my inmost self I dearly love God’s Law, but I can see that my body follows a different law that battles against the law which my reason dictates. This is what makes me a prisoner of that law of sin which lives inside my body.
  What a wretched man I am! Who will rescue me from this body doomed to death?
  Thanks be to God through Jesus Christ our Lord!

The Word of the Lord.