Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, June 18, 2023

ஜூன் 19 : நற்செய்தி வாசகம்நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42

ஜூன் 19 :  நற்செய்தி வாசகம்

நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ ‘கண்ணுக்குக் கண்', ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 19 : பதிலுரைப் பாடல்திபா 98: 1. 2-3a. 3b-4 (பல்லவி: 2a)பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார் .

ஜூன் 19 :  பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3a. 3b-4 (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.
1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3a
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3b
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 105
அல்லேலூயா, அல்லேலூயா! 

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.

ஜூன் 19 : முதல் வாசகம்நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-10

ஜூன் 19 :  முதல் வாசகம்

நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-10
சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். “தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்” எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை. மாறாக அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம்; வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மிகுந்த மன உறுதியோடு தாங்கி வருகிறோம். நாங்கள் அடிக்கப்பட்டோம்; சிறையில் அடைக்கப்பட்டோம்; குழப்பங்களில் சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம்; கண்விழித்திருந்தோம்; பட்டினி கிடந்தோம்; தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்; உண்மையையே பேசி வருகிறோம்; கடவுளின் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். நேர்மையே எங்கள் படைக்கலம். அதை வலக்கையிலும் இடக்கையிலும் நாங்கள் தாங்கியுள்ளோம். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை.

ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள். அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக் கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை. துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 19th : Gospel Offer the wicked man no resistanceA Reading from the Holy Gospel according to St.Matthew 5:38-42

June 19th :  Gospel 

Offer the wicked man no resistance

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:38-42 
Jesus said to his disciples: ‘You have learnt how it was said: Eye for eye and tooth for tooth. But I say this to you: offer the wicked man no resistance. On the contrary, if anyone hits you on the right cheek, offer him the other as well; if a man takes you to law and would have your tunic, let him have your cloak as well. And if anyone orders you to go one mile, go two miles with him. Give to anyone who asks, and if anyone wants to borrow, do not turn away.’

The Word of the Lord.

June 19th : Responsorial PsalmPsalm 97(98):1-4 The Lord has made known his salvation.

June 19th :  Responsorial Psalm

Psalm 97(98):1-4 

The Lord has made known his salvation.
Sing a new song to the Lord
  for he has worked wonders.
His right hand and his holy arm
  have brought salvation.

The Lord has made known his salvation.

The Lord has made known his salvation;
  has shown his justice to the nations.
He has remembered his truth and love
  for the house of Israel.

The Lord has made known his salvation.

All the ends of the earth have seen
  the salvation of our God.
Shout to the Lord, all the earth,
  ring out your joy.

The Lord has made known his salvation.

Gospel Acclamation Jn14:23

Alleluia, alleluia!

If anyone loves me he will keep my word,
and my Father will love him,
and we shall come to him.
Alleluia!

June 19th : First ReadingHow we prove that we are God's servantsA Reading from the Second letter of St.Paul to the Corinthians 6:1-10

June 19th :  First Reading

How we prove that we are God's servants

A Reading from the Second letter of St.Paul to the Corinthians 6:1-10 
As his fellow workers, we beg you once again not to neglect the grace of God that you have received. For he says: At the favourable time, I have listened to you; on the day of salvation I came to your help. Well, now is the favourable time; this is the day of salvation.
  We do nothing that people might object to, so as not to bring discredit on our function as God’s servants. Instead, we prove we are servants of God by great fortitude in times of suffering: in times of hardship and distress; when we are flogged, or sent to prison, or mobbed; labouring, sleepless, starving. We prove we are God’s servants by our purity, knowledge, patience and kindness; by a spirit of holiness, by a love free from affectation; by the word of truth and by the power of God; by being armed with the weapons of righteousness in the right hand and in the left, prepared for honour or disgrace, for blame or praise; taken for impostors while we are genuine; obscure yet famous; said to be dying and here are we alive; rumoured to be executed before we are sentenced; thought most miserable and yet we are always rejoicing; taken for paupers though we make others rich, for people having nothing though we have everything.

The Word of the Lord.