Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, December 2, 2020

GOSPEL*_📢preach the Gospel to every creature._*🕯️A reading from the Holy Gospel according to St Mark 16:15-20*

*📖GOSPEL*

_📢preach the Gospel to every creature._

*🕯️A reading from the Holy Gospel according to St Mark 16:15-20*
````And he said to them: “Go forth to the whole world and preach the Gospel to every creature. Whoever will have believed and been baptized will be saved. Yet truly, whoever will not have believed will be condemned. Now these signs will accompany those who believe. In my name, they shall cast out demons. They will speak in new languages. They will take up serpents, and, if they drink anything deadly, it will not harm them. They shall lay their hands upon the sick, and they will be well.” And indeed, the Lord Jesus, after he had spoken to them, was taken up into heaven, and he sits at the right hand of God. Then they, setting out, preached everywhere, with the Lord cooperating and confirming the word by the accompanying signs.```

*The grace of the Lord.*

I believe in God, /...

SECOND READING*_And woe to me, if I do not preach the Gospel._*🕯️1 Corinthians 9: 16-19, 22-23*

*🍁SECOND READING*

_And woe to me, if I do not preach the Gospel._

*🕯️1 Corinthians 9: 16-19, 22-23*
For if I preach the Gospel, it is not glory for me. For an obligation has been laid upon me. And woe to me, if I do not preach the Gospel. For if I do this willingly, I have a reward. But if I do this reluctantly, a dispensation is granted to me. And what, then, would be my reward? So, when preaching the Gospel, I should give the Gospel without taking, so that I may not misuse my authority in the Gospel. For when I was a free man to all, I made myself the servant of all, so that I might gain all the more.
To the weak, I became weak, so that I might gain the weak. To all, I became all, so that I might save all. And I do everything for the sake of the Gospel, so that I may become its partner.  

____ 

*🌿Before the gospel*
  
````Alleluia, alleluia! Therefore, go forth and teach all nations, I am with you always, even to the consummation of the age.” Alleluia!```

🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*_Response: “Go forth to the whole world and preach the Gospel to every creature._*Psalms 177:1.2*```Alleluia. All nations, praise the Lord. All peoples, praise him.

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response:  “Go forth to the whole world and preach the Gospel to every creature._

*Psalms 177:1.2*

```Alleluia. All nations, praise the Lord. All peoples, praise him.  
For his mercy has been confirmed over us. And the truth of the Lord remains for all eternity.```

Daily Reading for Thursday December 3, 2020 St. Francis Xavier (Defender of India)_*FIRST READING*for the Lord has anointed me. He has sent me to bring good news to the meek, Isaiah 61:1-3

_🌿Daily Reading for Thursday December 3, 2020 St. Francis Xavier (Defender of India)_

*FIRST READING*

for the Lord has anointed me. He has sent me to bring good news to the meek, 

Isaiah 61:1-3 
1The Spirit of the Lord is upon me, for the Lord has anointed me. He has sent me to bring good news to the meek, so as to heal the contrite of heart, to preach leniency to captives and release to the confined, 2and so to proclaim the acceptable year of the Lord and the day of vindication of our God: to console all who are mourning, 3to take up the mourners of Zion and to give them a crown in place of ashes, an oil of joy in place of mourning, a cloak of praise in place of a spirit of grief. And there, they shall be called the strong ones of justice, the planting of the Lord, unto glorification. 

*The grace of the Lord.*

நற்செய்தி வாசகம்* _படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்._ *🕯️ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20*

*📖நற்செய்தி வாசகம்* 

_படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்._ 

*🕯️ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20* 
அக்காலத்தில் 
இயேசு பதினொருவருக்கும் தோன்றி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார். 
இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும்அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார். 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*

இரண்டாம் வாசகம்* _நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!_ *🕯️திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23*

*🌿இரண்டாம் வாசகம்* 

_நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!_ 

*🕯️திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23* 
சகோதரர் சகோதரிகளே, 
நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன். 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*

பதிலுரைப் பாடல்* *திபா 117: 1. 2 . (பல்லவி: மாற் 16: 15) _பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். அல்லது: அல்லேலூயா._

*🍃பதிலுரைப் பாடல்* 

*திபா 117: 1. 2 . (பல்லவி: மாற் 16: 15) 

_பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். அல்லது: அல்லேலூயா._ 
1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி 

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி

✝️புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் (இந்தியாவில் பெருவிழா) 03/12/2020* *முதல் வாசகம்* _ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்._ *இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3*

*✝️புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் (இந்தியாவில் பெருவிழா) 03/12/2020* 

*முதல் வாசகம்* 

_ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்._ 

*இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3* 
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் ‘புகழ்’ என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ‘நேர்மையின் தேவதாருகள்’ என்றும் ‘தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை’ என்றும் அவர்கள் பெயர் பெறுவர். 

ஆண்டவரின் அருள்வாக்கு.