Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, March 23, 2024

March 24th : Gospel Mark 14:1-15:47 The Passion of our Lord Jesus Christ according to Mark

March 24th : Gospel 

Mark 14:1-15:47 

The Passion of our Lord Jesus Christ according to Mark
Key: N. Narrator. ✠ Jesus. O. Other single speaker. C. Crowd, or more than one speaker.
  N. It was two days before the Passover and the feast of Unleavened Bread, and the chief priests and the scribes were looking for a way to arrest Jesus by some trick and have him put to death. For they said,
  C. It must not be during the festivities, or there will be a disturbance among the people.
  N. Jesus was at Bethany in the house of Simon the leper; he was at dinner when a woman came in with an alabaster jar of very costly ointment, pure nard. She broke the jar and poured the ointment on his head. Some who were there said to one another indignantly,
  C. Why this waste of ointment? Ointment like this could have been sold for over three hundred denarii and the money given to the poor.
  N. and they were angry with her. But Jesus said,
  ✠ Leave her alone. Why are you upsetting her? What she has done for me is one of the good works. You have the poor with you always, and you can be kind to them whenever you wish, but you will not always have me. She has done what was in her power to do: she has anointed my body beforehand for its burial. I tell you solemnly, wherever throughout all the world the Good News is proclaimed, what she has done will be told also, in remembrance of her.
  N. Judas Iscariot, one of the Twelve, approached the chief priests with an offer to hand Jesus over to them. They were delighted to hear it, and promised to give him money; and he looked for a way of betraying him when the opportunity should occur.
  On the first day of Unleavened Bread, when the Passover lamb was sacrificed, his disciples said to him,
  C. Where do you want us to go and make the preparations for you to eat the passover?
  N. So he sent two of his disciples, saying to them,
  ✠ Go into the city and you will meet a man carrying a pitcher of water. Follow him, and say to the owner of the house which he enters, ‘The Master says: “Where is my dining room in which I can eat the passover with my disciples?”’ He will show you a large upper room furnished with couches, all prepared. Make the preparations for us there.
  N. The disciples set out and went to the city and found everything as he had told them, and prepared the Passover.
  When evening came he arrived with the Twelve. And while they were at table eating, Jesus said,
  ✠ I tell you solemnly, one of you is about to betray me, one of you eating with me.
  N. They were distressed and asked him, one after another,
  C. Not I, surely?
  N. He said to them,
  ✠ It is one of the Twelve, one who is dipping into the same dish with me. Yes, the Son of Man is going to his fate, as the scriptures say he will, but alas for that man by whom the Son of Man is betrayed! Better for that man if he had never been born!
  N. And as they were eating he took some bread, and when he had said the blessing he broke it and gave it to them, saying:
  ✠ Take it: this is my body.
  N. Then he took a cup, and when he had returned thanks he gave it to them, and all drank from it, and he said to them,
  ✠ This is my blood, the blood of the covenant, which is to be poured out for many. I tell you solemnly, I shall not drink any more wine until the day I drink the new wine in the kingdom of God.
  N. After psalms had been sung they left for the Mount of Olives. And Jesus said to them,
  ✠ You will all lose faith, for the scripture says: ‘I shall strike the shepherd and the sheep will be scattered.’ However, after my resurrection I shall go before you to Galilee.
  N. Peter said,
  O. Even if all lose faith, I will not.
  N. And Jesus said to him,
  ✠ I tell you solemnly, this day, this very night, before the cock crows twice, you will have disowned me three times.
  N. But he repeated still more earnestly,
  O. If I have to die with you, I will never disown you.
  N. And they all said the same.
  They came to a small estate called Gethsemane, and Jesus said to his disciples,
  ✠ Stay here while I pray.
  N. Then he took Peter and James and John with him. And a sudden fear came over him, and great distress. And he said to them,
  ✠ My soul is sorrowful to the point of death. Wait here, and keep awake.
  N. And going on a little further he threw himself on the ground and prayed that, if it were possible, this hour might pass him by. He said:
  ✠ Abba (Father)! Everything is possible for you. Take this cup away from me. But let it be as you, not I, would have it.
  N. He came back and found them sleeping, and he said to Peter,
  ✠ Simon, are you asleep? Had you not the strength to keep awake one hour? You should be awake, and praying not to be put to the test. The spirit is willing, but the flesh is weak.
  N. Again he went away and prayed, saying the same words. And once more he came back and found them sleeping, their eyes were so heavy; and they could find no answer for him. He came back a third time and said to them,
  ✠ You can sleep on now and take your rest. It is all over. The hour has come. Now the Son of Man is to be betrayed into the hands of sinners. Get up! Let us go! My betrayer is close at hand already.
  N. Even while he was still speaking, Judas, one of the Twelve, came up with a number of men armed with swords and clubs, sent by the chief priests and the scribes and the elders. Now the traitor had arranged a signal with them. He had said,
  O. The one I kiss he is the man. Take him in charge, and see he is well guarded when you lead him away.
  N. So when the traitor came, he went straight up to Jesus and said,
  O. Rabbi!
  N. and kissed him. The others seized him and took him in charge. Then one of the bystanders drew his sword and struck out at the high priest’s servant, and cut off his ear.
  Then Jesus spoke:
  ✠ Am I a brigand, that you had to set out to capture me with swords and clubs? I was among you teaching in the Temple day after day and you never laid hands on me. But this is to fulfil the scriptures.
  N. And they all deserted him and ran away. A young man who followed him had nothing on but a linen cloth. They caught hold of him, but he left the cloth in their hands and ran away naked.
  They led Jesus off to the high priest; and all the chief priests and the elders and the scribes assembled there. Peter had followed him at a distance, right into the high priest’s palace, and was sitting with the attendants warming himself at the fire.
  The chief priests and the whole Sanhedrin were looking for evidence against Jesus on which they might pass the death sentence. But they could not find any. Several, indeed, brought false evidence against him, but their evidence was conflicting. Some stood up and submitted this false evidence against him,
  C. We heard him say, ‘I am going to destroy this Temple made by human hands, and in three days build another, not made by human hands.’
  N. But even on this point their evidence was conflicting. The high priest then stood up before the whole assembly and put this question to Jesus,
  O. Have you no answer to that? What is this evidence these men are bringing against you?
  N. But he was silent and made no answer at all. The high priest put a second question to him,
  O. Are you the Christ, the Son of the Blessed One?
  N. Jesus said,
  ✠ I am, and you will see the Son of Man seated at the right hand of the Power and coming with the clouds of heaven.
  N. The high priest tore his robes, and said:
  O. What need of witnesses have we now? You heard the blasphemy. What is your finding?
  N. And they all gave their verdict: he deserved to die.
  Some of them started spitting at him and, blindfolding him, began hitting him with their fists and shouting,
  C. Play the prophet!
  N. And the attendants rained blows on him.
  While Peter was down below in the courtyard, one of the high priest’s servant-girls came up. She saw Peter warming himself there, stared at him and said,
  O. You too were with Jesus, the man from Nazareth.
  N. But he denied it, saying.
  O. I do not know, I do not understand, what you are talking about.
  N. And he went out into the forecourt. The servant-girl saw him and again started telling the bystanders,
  O. This fellow is one of them.
  N. But again he denied it. A little later the bystanders themselves said to Peter,
  C. You are one of them for sure! Why, you are a Galilean.
  N. But he started calling down curses on himself and swearing,
  O. I do not know the man you speak of.
  N. At that moment the cock crew for the second time, and Peter recalled how Jesus had said to him, ‘Before the cock crows twice, you will have disowned me three times.’ And he burst into tears.
  First thing in the morning, the chief priests together with the elders and scribes, in short the whole Sanhedrin, had their plan ready. They had Jesus bound and took him away and handed him over to Pilate.
  Pilate questioned him:
  O. Are you the king of the Jews?
  N. He answered,
  ✠ It is you who say it.
  N. And the chief priests brought many accusations against him. Pilate questioned him again:
  O. Have you no reply at all? See how many accusations they are bringing against you!
  N. But, to Pilate’s amazement, Jesus made no further reply.
  At festival time Pilate used to release a prisoner for them, anyone they asked for. Now a man called Barabbas was then in prison with the rioters who had committed murder during the uprising. When the crowd went up and began to ask Pilate the customary favour, Pilate answered them
  O. Do you want me to release for you the king of the Jews?
  N. For he realised it was out of jealousy that the chief priests had handed Jesus over. The chief priests, however, had incited the crowd to demand that he should release Barabbas for them instead. Then Pilate spoke again:
  O. But in that case, what am I to do with the man you call king of the Jews?
  N. They shouted back,
  C. Crucify him!
  N. Pilate asked them,
  O. Why? What harm has he done?
  N. But they shouted all the louder,
  C. Crucify him!
  N. So Pilate, anxious to placate the crowd, released Barabbas for them and, having ordered Jesus to be scourged, handed him over to be crucified.
  The soldiers led him away to the inner part of the palace, that is, the Praetorium, and called the whole cohort together. They dressed him up in purple, twisted some thorns into a crown and put it on him. And they began saluting him,
  C. Hail, king of the Jews!
  N. They struck his head with a reed and spat on him; and they went down on their knees to do him homage. And when they had finished making fun of him, they took off the purple and dressed him in his own clothes.
  They led him out to crucify him: they enlisted a passer-by, Simon of Cyrene, father of Alexander and Rufus, who was coming in from the country, to carry his cross. They brought Jesus to the place called Golgotha, which means the place of the skull.
  They offered him wine mixed with myrrh, but he refused it. Then they crucified him, and shared out his clothing, casting lots to decide what each should get. It was the third hour when they crucified him. The inscription giving the charge against him read: ‘The King of the Jews.’ And they crucified two robbers with him, one on his right and one on his left.
  The passers-by jeered at him; they shook their heads and said,
  C. Aha! So you would destroy the Temple and rebuild it in three days! Then save yourself: come down from the cross!
  N. The chief priests and the scribes mocked him among themselves in the same way. They said,
  C. He saved others; he cannot save himself. Let the Christ, the king of Israel, come down from the cross now, for us to see it and believe.
  N. Even those who were crucified with him taunted him.
  When the sixth hour came there was darkness over the whole land until the ninth hour. And at the ninth hour Jesus cried out in a loud voice,
  ✠ Eloi, Eloi, lama sabachthani?
  N. which means, ‘My God, my God, why have you deserted me?’ When some of those who stood by heard this, they said
  C. Listen, he is calling on Elijah.
  N. Someone ran and soaked a sponge in vinegar and, putting it on a reed, gave it him to drink, saying:
  O. Wait and see if Elijah will come to take him down.
  N. But Jesus gave a loud cry and breathed his last.
  All kneel and pause for a moment.
  And the veil of the Temple was torn in two from top to bottom. The centurion, who was standing in front of him, had seen how he had died, and he said,
  O. In truth this man was a son of God.
  N. There were some women watching from a distance. Among them were Mary of Magdala, Mary who was the mother of James the younger and Joset, and Salome. These used to follow him and look after him when he was in Galilee. And there were many other women there who had come up to Jerusalem with him.
  It was now evening, and since it was Preparation Day (that is, the vigil of the sabbath), there came Joseph of Arimathaea, a prominent member of the Council, who himself lived in the hope of seeing the kingdom of God, and he boldly went to Pilate and asked for the body of Jesus. Pilate, astonished that he should have died so soon, summoned the centurion and enquired if he was already dead. Having been assured of this by the centurion, he granted the corpse to Joseph who bought a shroud, took Jesus down from the cross, wrapped him in the shroud and laid him in a tomb which had been hewn out of the rock. He then rolled a stone against the entrance to the tomb. Mary of Magdala and Mary the mother of Joset were watching and took note of where he was laid.

March 24th : Second ReadingChrist humbled himself but God raised him highA Reading from the Letter of St.Paul to the Philippians 2: 6-11.

March 24th :  Second Reading

Christ humbled himself but God raised him high

A Reading from the Letter of St.Paul to the  Philippians 2: 6-11. 
His state was divine,
yet Christ Jesus did not cling
to his equality with God
but emptied himself
to assume the condition of a slave
and became as men are;
and being as all men are,
he was humbler yet,
even to accepting death,
death on a cross.
But God raised him high
and gave him the name
which is above all other names
so that all beings
in the heavens, on earth and in the underworld,
should bend the knee at the name of Jesus
and that every tongue should acclaim
Jesus Christ as Lord,
to the glory of God the Father.

The Word of the Lord.

Gospel Acclamation Phil2:8-9

Praise to you, O Christ, king of eternal glory!
Christ was humbler yet,
even to accepting death, death on a cross.
But God raised him high
and gave him the name which is above all names.
Praise to you, O Christ, king of eternal glory!

March 24th : Responsorial PsalmPsalm 21(22):8-9,17-20,23-24 My God, my God, why have you forsaken me?

March 24th :  Responsorial Psalm

Psalm 21(22):8-9,17-20,23-24 

My God, my God, why have you forsaken me?
All who see me deride me.
  They curl their lips, they toss their heads.
‘He trusted in the Lord, let him save him;
  let him release him if this is his friend.’

My God, my God, why have you forsaken me?

Many dogs have surrounded me,
  a band of the wicked beset me.
They tear holes in my hands and my feet
  I can count every one of my bones.

My God, my God, why have you forsaken me?

They divide my clothing among them.
  They cast lots for my robe.
O Lord, do not leave me alone,
  my strength, make haste to help me!

My God, my God, why have you forsaken me?

I will tell of your name to my brethren
  and praise you where they are assembled.
‘You who fear the Lord give him praise;
  all sons of Jacob, give him glory.
  Revere him, Israel’s sons.

My God, my God, why have you forsaken me?

March 24th : First Reading I did not cover my face against insult: I know I shall not be shamedA Reading from the Book of Isaiah 50:4-7

March 24th :  First Reading 

I did not cover my face against insult: I know I shall not be shamed

A Reading from the Book of  Isaiah 50:4-7 
The Lord has given me
a disciple’s tongue.
So that I may know how to reply to the wearied
he provides me with speech.
Each morning he wakes me to hear,
to listen like a disciple.
The Lord has opened my ear.
For my part, I made no resistance,
neither did I turn away.
I offered my back to those who struck me,
my cheeks to those who tore at my beard;
I did not cover my face
against insult and spittle.
The Lord comes to my help,
so that I am untouched by the insults.
So, too, I set my face like flint;
I know I shall not be shamed.

The Word of the Lord.

மார்ச் 24 : நற்செய்தி வாசகம்மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 14: 1- 15: 47

மார்ச் 24  : நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 14: 1- 15: 47
பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக்கொண்டிருந்தனர்; ஆயினும், ‘விழாவின்போது வேண்டாம்; ஒருவேளை மக்களிடையே கலகம் ஏற்படக் கூடும்’ என்று நினைத்தனர்.

இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, “இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே,” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண்மீதும் சீறி எழுந்தனர்.

இயேசு அவர்களிடம், “அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.

பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக் கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.

அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், “ ‘நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?’ என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.” சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு, “என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக “நானோ? நானோ?” என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.

அதற்கு அவர், “அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார்.

அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

இயேசு அவர்களிடம், “நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், ‘ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.

பேதுரு அவரிடம், “எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்” என்றார். இயேசு அவரிடம், “இன்றிரவில் சேவல் இரு முறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்” என்றார். அவரோ, “நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.

பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், “நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்” என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். “அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார். அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “சீமோனே, உறங்கிக்கொண்டா இருக்கிறாய்? ஒரு மணி நேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார்.

அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, “இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்” என்று கூறினார்.

இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், “நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு. அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டுபோங்கள்” என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, “ரபி” எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். அருகில் நின்றுகொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.

இயேசு அவர்களைப் பார்த்து, “கள்வனைப் பிடிக்க வருவதுபோல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக்கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும்” என்றார். அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக்கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள். ஆனால் அவர் துணியை விட்டுவிட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.

அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்றுகூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம்வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்துகொண்டிருந்தார்.

தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. பலர் அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து, “மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்” என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை. அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூறமாட்டாயா?” என்று இயேசுவைக் கேட்டார். ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு, “போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?” என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு, “நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள்” என்றார். தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, “இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்க, அவர்கள் அனைவரும், “இவன் சாகவேண்டியவன்” என்று தீர்மானித்தார்கள். பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, “இறைவாக்கினனே, யார் எனச் சொல்” என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.

அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப்பெண் ஒருவர் வந்து, பேதுரு குளிர்காய்ந்துகொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, “நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே” என்றார். அவரோ, “நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை” என்று மறுதலித்து, வெளிமுற்றத்திற்குச் சென்றார். அப்பொழுது சேவல் கூவிற்று.

அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழஇருந்தவர்களிடம், “இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், “உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன்” என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, “நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, “சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவுகூர்ந்து மனம் உடைந்து அழுதார்.

பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று, பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்க அவர், “அவ்வாறு நீர் சொல்கிறீர்” என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, “நீ பதில் ஒன்றும் சொல்லமாட்டாயா? உன்மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!” என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான்.

விழாவின்போது மக்கள் கேட்டுக்கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது. அதற்குப் பிலாத்து, “யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். ஏனெனில் தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, “அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான், அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும்” என்று மீண்டும் கத்தினார்கள். அதற்குப் பிலாத்து. “இவன் செய்த குற்றம் என்ன?” என்று கேட்க, அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.

பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டுபோய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்; அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள்முடி பின்னி அவருக்குச் சூட்டி, “யூதரின் அரசே வாழ்க!” என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர்; அவரை ஏளனம் செய்தபின் செந்நிற ஆடையைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர்.

அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படை வீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் ‘மண்டை ஓட்டு இடம்’ எனப் பொருள்படும் ‘கொல்கொதா'வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்.

அங்கே அவருக்கு வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க “யூதரின் அரசன்” என்று அவர்கள் எழுதி வைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். இவ்வாறு ‘கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்’ என்ற மறைநூல் வாக்கு நிறைவேறிற்று.

அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்” என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, “பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை” என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். அவர்கள், “இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்” என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.

நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, “எலோயி, எலோயி, லெமா சபக்தானி?” என்று உரக்கக் கத்தினார். “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பது அதற்குப் பொருள். சூழ நின்றுகொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, “இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர். அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, “பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்” என்றார். இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.

( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும். )

அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்” என்றார்.

பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்தபோது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள். அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறு பல பெண்களும் அங்கே இருந்தார்கள்.

இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வு நாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, “அவன் இதற்குள் இறந்துவிட்டானா?” என்று கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

மார்ச் 24 : இரண்டாம் வாசகம்கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்.திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

மார்ச் 24  : இரண்டாம் வாசகம்

கிறிஸ்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11
கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

பிலி 2: 8-9

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு, எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும்.

மார்ச் 24 : பதிலுரைப் பாடல்திபா 22: 7-8. 16-17a. 18-19. 22-23 (பல்லவி: 1a)பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?

மார்ச் 24  : பதிலுரைப் பாடல்

திபா 22: 7-8. 16-17a. 18-19. 22-23 (பல்லவி: 1a)

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
7
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,
8
‘ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர். - பல்லவி

16
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்.
17a
என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். - பல்லவி

18
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
19
நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். - பல்லவி

22
உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
23
ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். - பல்லவி

மார்ச் 24 : முதல் வாசகம்நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50 : 4-7

மார்ச் 24  : முதல் வாசகம்

நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50 : 4-7
நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்.

நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.