Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, September 21, 2021

செப்டம்பர் 22 : நற்செய்தி வாசகம்இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல்நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6

செப்டம்பர் 22 : நற்செய்தி வாசகம்

இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல்நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6
அக்காலத்தில்

இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.

அப்போது அவர்களை நோக்கி, “பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 22 : பதிலுரைப் பாடல்தோபி 13: 2,3. 6,7. 8 (பல்லவி: 1a)பல்லவி: என்றும் வாழும் கடவுள் போற்றி!

செப்டம்பர் 22 : பதிலுரைப் பாடல்

தோபி 13: 2,3. 6,7. 8 (பல்லவி: 1a)
பல்லவி: என்றும் வாழும் கடவுள் போற்றி!
2
அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை.
3
இஸ்ரயேல் மக்களே, வேற்றினத்தார்முன் அவரது புகழை அறிக்கையிடுங்கள். ஏனெனில் அவர் அவர்களிடையே உங்களைச் சிதறடித்துள்ளார். - பல்லவி

6
நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக் கொள்ளார்.
7
உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப் பாருங்கள்; நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்; வாயார அவரை அறிக்கையிடுங்கள். என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள். - பல்லவி

8
நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்; அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன். பாவிகளே மனந்திரும்புங்கள்; அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள். ஒருவேளை அவர் உங்கள்மீது அருள்கூர்வார்; உங்களுக்கு இரக்கங்காட்டுவார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

செப்டம்பர் 22: முதல் வாசகம்நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்கு கையளிக்கவில்லை.எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 9: 5-9

செப்டம்பர் 22: முதல் வாசகம்

நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்கு கையளிக்கவில்லை.

எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 9: 5-9
மாலைப் பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் முழந்தாளிட்டு என் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து, எஸ்ராவாகிய நான் கூறியது:

“கடவுளே! உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்குமேல் பெருகிவிட்டன. எங்கள் குற்றங்கள் விண்ணைத் தொட்டுவிட்டன. எம் முன்னோர் காலமுதல் இதுவரை நாங்கள் பெரும் பாவம் செய்துள்ளோம். எங்கள் பாவங்களினால், நாங்களும் எங்கள் அரசர்களும், குருக்களும் வேற்று நாட்டு மன்னர்களின் கைக்கும், வாளுக்கும், அடிமைத்தனத்திற்கும், கொள்ளைக்கும், வெட்கக் கேட்டுக்கும் இதுவரை ஒப்புவிக்கப்பட்டோம்.

ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளும் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது; எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்; உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்; எம் கடவுளாகிய நீர் எம் கண்களுக்கு ஒளி தந்தீர்; எமது அடிமைத்தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர். நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை. மாறாக நாங்கள் உயிர் பிழைக்கவும், எங்கள் கடவுளின் கோவிலை எழுப்பவும், பாழடைந்ததைப் பழுது பார்க்கவும் யூதேயாவிலும் எருசலேமிலும் பாதுகாப்பு அளிக்கவும் பாரசீக மன்னர்களின் முன் எமக்கு உமது தயை கிடைக்கவும் செய்தருளினீர்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 22: Gospel Luke 9:1-6 'Take nothing for the journey'

September 22: Gospel 

Luke 9:1-6 

'Take nothing for the journey'
Jesus called the Twelve together and gave them power and authority over all devils and to cure diseases, and he sent them out to proclaim the kingdom of God and to heal. He said to them, ‘Take nothing for the journey: neither staff, nor haversack, nor bread, nor money; and let none of you take a spare tunic. Whatever house you enter, stay there; and when you leave, let it be from there. As for those who do not welcome you, when you leave their town shake the dust from your feet as a sign to them.’ So they set out and went from village to village proclaiming the Good News and healing everywhere.

The Word of the Lord

September 22 : Responsorial PsalmTobit 13:2,4,6-8 Blessed be God, who lives for ever.

September 22 : Responsorial Psalm

Tobit 13:2,4,6-8 

Blessed be God, who lives for ever.
God punishes, he also has mercy,
he leads men to the depths of the grave,
he restores men from the great destruction.
No man can escape his hand.

Blessed be God, who lives for ever.

It is he who scattered us among the nations.
Among them must we show forth our greatness
and exalt him in the presence of all living;
for he is our Lord and our God,
our Father and our God for ever.

Blessed be God, who lives for ever.

Now think what he has done for you,
give thanks to him with all your voice.
Give praise to the Lord for his justice
and exalt the king of all ages.

Blessed be God, who lives for ever.

In this land of exile I will thank him,
  and show forth his greatness and might
  to the race of sinful men.

Blessed be God, who lives for ever.

Sinners, come back to him,
  do what is right before him.
  Who knows but he will receive you with pity?

Blessed be God, who lives for ever.

Gospel Acclamation
 cf.Col3:16a,17
Alleluia, alleluia!
Let the message of Christ, in all its richness,
find a home with you;
through him give thanks to God the Father.
Alleluia!

September 22 : First reading Ezra 9:5-9

September 22 : First reading 

Ezra 9:5-9 
'God has not forgotten us in our slavery'
At the evening sacrifice I, Ezra, came out of my stupor and falling on my knees, with my garment and cloak torn, I stretched out my hands to the Lord my God, and said:
  ‘My God, I am ashamed, I blush to lift my face to you, my God. For our crimes have increased, until they are higher than our heads, and our sin has piled up to heaven. From the days of our ancestors until now our guilt has been great; on account of our crimes we, our kings and our priests, were given into the power of the kings of other countries, given to the sword, to captivity, to pillage and to shame, as is the case today. But now, suddenly, the Lord our God by his favour has left us a remnant and granted us a refuge in his holy place; this is how our God has cheered our eyes and given us a little respite in our slavery. For we are slaves; but God has not forgotten us in our slavery; he has shown us kindness in the eyes of the kings of Persia, obtaining permission for us to rebuild the Temple of our God and restore its ruins, and he has found us safety and shelter in Judah and in Jerusalem.’

The Word of the Lord