Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, September 22, 2021

செப்டம்பர் 23 : நற்செய்தி வாசகம்யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9

செப்டம்பர் 23  : நற்செய்தி வாசகம்

யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9
அக்காலத்தில்

நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், “இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர். வேறு சிலர், “எலியா தோன்றியிருக்கிறார்” என்றனர். மற்றும் சிலர், “முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்” என்றனர்.

ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 23 : பதிலுரைப் பாடல்திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.

செப்டம்பர் 23  : பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! - பல்லவி

3
நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
4
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். - பல்லவி

5
அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!
6a
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்;
9b
இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

செப்டம்பர் 23 : முதல் வாசகம்என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்.இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 1: 1-8.

செப்டம்பர் 23  :  முதல் வாசகம்

என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்.

இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 1: 1-8.
தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் அருளப்பட்ட செய்தி: “படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள்.

அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள் மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா? ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: ‘உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் விதைத்தது மிகுதி. அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடிக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் நிறைவு அடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள்; ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்.

உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்’ என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். ‘எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்; என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்’ என்று சொல்கிறார் ஆண்டவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 23rd : Gospel 'John? I beheaded him; so who is this?'A Reading from the Holy Gospel according to St. Luke 9: 7-9

September 23rd :  Gospel 

'John? I beheaded him; so who is this?'

A Reading from the Holy Gospel according to St. Luke 9: 7-9 
Herod the tetrarch had heard about all that was being done by Jesus; and he was puzzled, because some people were saying that John had risen from the dead, others that Elijah had reappeared, still others that one of the ancient prophets had come back to life. But Herod said, ‘John? I beheaded him. So who is this I hear such reports about?’ And he was anxious to see Jesus.

The Word of the Lord.

September 23rd : Responsorial Psalm Psalm 149:1-6,9 The Lord takes delight in his people.or Alleluia!

September 23rd : Responsorial Psalm 

Psalm 149:1-6,9 

The Lord takes delight in his people.
or Alleluia!
Sing a new song to the Lord,
  his praise in the assembly of the faithful.
Let Israel rejoice in its Maker,
  let Zion’s sons exult in their king.

The Lord takes delight in his people.
or Alleluia!

Let them praise his name with dancing
  and make music with timbrel and harp.
For the Lord takes delight in his people.
  He crowns the poor with salvation.

The Lord takes delight in his people.
or Alleluia!

Let the faithful rejoice in their glory,
  shout for joy and take their rest.
Let the praise of God be on their lips:
  this honour is for all his faithful.

The Lord takes delight in his people.
or Alleluia!

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!
Open my eyes, O Lord, that I may consider
the wonders of your law.
Alleluia!

September 23rd : First Reading 'Rebuild the House'Haggai 1:1-8

September 23rd :  First Reading 

'Rebuild the House'

Haggai 1:1-8 
In the second year of King Darius, on the first day of the sixth month, the word of the Lord was addressed through the prophet Haggai to Zerubbabel son of Shealtiel, high commissioner of Judah, and to Joshua son of Jehozadak, the high priest, as follows, ‘The Lord of Hosts says this, “This people says: The time has not yet come to rebuild the Temple of the Lord. (And the word of the Lord was addressed through the prophet Haggai, as follows:) Is this a time for you to live in your panelled houses, when this House lies in ruins? So now, the Lord of Hosts says this: Reflect carefully how things have gone for you. You have sown much and harvested little; you eat but never have enough, drink but never have your fill, put on clothes but do not feel warm. The wage earner gets his wages only to put them in a purse riddled with holes. So go to the hill country, fetch wood, and rebuild the House: I shall then take pleasure in it, and be glorified there, says the Lord.”’

The Word of the Lord.