Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, February 5, 2021

GOSPEL "They were like sheep without a shepherd" A Reading from the Holy Gospel according to Mark (6, 30-34)

FEBRUARY 6, 2021 General Week 4 - Saturday, 

📖GOSPEL 

"They were like sheep without a shepherd" 

A Reading from the Holy Gospel according to  Mark (6, 30-34) 
At that time, the Apostles gathered together with Jesus, and told him all that they had done and taught. He said to them, “Come aside into a deserted place, and rest a little. In fact, there were many who arrived and those who left, and there was not even time to eat. So they set off in a boat for a deserted place, out of the way. People saw them walking away, and many understood their intention. So, on foot, from all the towns, they ran there and got there before them. As he disembarked, Jesus saw a large crowd. He had compassion on them, because they were like sheep without a shepherd. So he began to teach them at length. 

The Gospel of the Lord 

I believe in God, /....

RESPONSORIAL Respons : The Lord is my Shepherd: I cannot miss anything. Psalm 22 (23)

FEBRUARY 6, 2021 General Week 4 - Saturday, 

RESPONSORIAL 

Respons : The Lord is my Shepherd: I cannot miss anything. 

Psalm 22 (23) 
The Lord is my Shepherd:
I lack nothing.
On meadows of fresh grass,
he makes me rest. R 

He leads me to still waters
and brings me back to life;
he leads me by the right path
for the honor of his name. R 

If I cross the ravines of death,
I fear no harm,
for you are with me:
your staff guides me and reassures me. R 

You prepare the table for me
before my enemies;
you spread the perfume on my head,
my cup is overflowing. R 

Grace and happiness are with me
every day of my life;
I will dwell in the house of the Lord
for the duration of my days. R 

____ 

🌿Gospel Acclamation 

```Alleluia, Alleluia! My sheep listen to my voice. I know them too. They also follow me, says the Lord. Alleluia!``` 

_____________

FIRST READING "May the God of peace, he who brought up the Pastor par excellence from the dead, train you in all that is good" the letter to the Hebrews (13, 15-17.20-21)

FEBRUARY 6, 2021 General Week 4 - Saturday, 

FIRST READING 

"May the God of peace, he who brought up the Pastor par excellence from the dead, train you in all that is good" 

the letter to the Hebrews (13, 15-17.20-21) 
Brothers, in all circumstances, offer to God, through Jesus, a sacrifice of praise, that is, the words of our lips which proclaim his name. Remember to be generous and to share. It is through such sacrifices that one pleases God. Trust those who lead you and be submissive to them; indeed, they are there to watch over your souls, which they will have to account for. Thus, they will accomplish their task with joy, without having to complain, which will not be of any benefit to you.
May the God of peace, he who raised up from the dead, thanks to the blood of the Eternal Covenant, the Shepherd of the sheep, the Shepherd par excellence, our Lord Jesus, may this God train you in all that is good to accomplish his will, that he fulfills in us what is pleasing in his eyes, through Jesus Christ, to whom the glory belongs forever and ever. Amen. 

The Word of the Lord

நற்செய்தி வாசகம் மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள். மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

06 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் - சனிக்கிழமை 

நற்செய்தி வாசகம் 

மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள். 

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34 
அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

06 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் - சனிக்கிழமை பதிலுரைப் பாடல் திபா 23: 1-3. 3-4. 5. 6 பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

06 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் - சனிக்கிழமை 

பதிலுரைப் பாடல் 

திபா 23: 1-3. 3-4. 5. 6 

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 
1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; -பல்லவி 

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி 

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி 

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. 

___

06 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் - சனிக்கிழமை முதல் வாசகம் கடவுள் இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 15-17, 20-21

06 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் - சனிக்கிழமை 

முதல் வாசகம் 

கடவுள் இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 13: 15-17, 20-21 
சகோதரர் சகோதரிகளே, இயேசு வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக. அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும். நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை. உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பாய் இருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது. என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே. அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி, இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென். 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

____