Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, June 20, 2023

ஜூன் 21 : நற்செய்தி வாசகம்மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6, 16-18

ஜூன் 21 :  நற்செய்தி வாசகம்

மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6, 16-18
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக் கை செய்வது இடக் கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள், அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 21 : பதிலுரைப் பாடல்திபா 112: 1-2. 3-4. 9 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

ஜூன் 21 :  பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 3-4. 9 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
1
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

3
சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். - பல்லவி

9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! 

என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஜூன் 21 : முதல் வாசகம்முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-11

ஜூன் 21 :  முதல் வாசகம்

முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-11
சகோதரர் சகோதரிகளே,

குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.

கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார். “ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச் செய்து அறச் செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார். நீங்கள் எல்லா வகையிலும் செல்வர்களாகி வள்ளன்மை மிகுந்தவர்களாய் விளங்குவீர்கள். இவ்வாறு எங்கள் பணி வழியாய்ப் பலர் கடவுளுக்கு நன்றி செலுத்துவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 21st : GospelYour Father who sees all that is done in secret will reward youA Reading from the Holy Gospel according to St.Matthew 6:1-6,16-18

June 21st :  Gospel

Your Father who sees all that is done in secret will reward you

A Reading from the Holy Gospel according to St.Matthew 6:1-6,16-18 
Jesus said to his disciples: ‘Be careful not to parade your good deeds before men to attract their notice; by doing this you will lose all reward from your Father in heaven. So when you give alms, do not have it trumpeted before you; this is what the hypocrites do in the synagogues and in the streets to win men’s admiration. I tell you solemnly, they have had their reward. But when you give alms, your left hand must not know what your right is doing; your almsgiving must be secret, and your Father who sees all that is done in secret will reward you.
  ‘And when you pray, do not imitate the hypocrites: they love to say their prayers standing up in the synagogues and at the street corners for people to see them; I tell you solemnly, they have had their reward. But when you pray, go to your private room and, when you have shut your door, pray to your Father who is in that secret place, and your Father who sees all that is done in secret will reward you.
  ‘When you fast do not put on a gloomy look as the hypocrites do: they pull long faces to let men know they are fasting. I tell you solemnly, they have had their reward. But when you fast, put oil on your head and wash your face, so that no one will know you are fasting except your Father who sees all that is done in secret; and your Father who sees all that is done in secret will reward you.’

The Word of the Lord.

June 21st : Responsorial PsalmPsalm 111(112):1-4,9 Happy the man who fears the Lord.orAlleluia!

June 21st :  Responsorial Psalm

Psalm 111(112):1-4,9 

Happy the man who fears the Lord.
or
Alleluia!
Happy the man who fears the Lord,
  who takes delight in all his commands.
His sons will be powerful on earth;
  the children of the upright are blessed.

Happy the man who fears the Lord.
or
Alleluia!

Riches and wealth are in his house;
  his justice stands firm for ever.
He is a light in the darkness for the upright:
  he is generous, merciful and just.

Happy the man who fears the Lord.
or
Alleluia!

Open-handed, he gives to the poor;
  his justice stands firm for ever.
  His head will be raised in glory.

Happy the man who fears the Lord.
or
Alleluia!

Gospel Acclamation cf.Col3:16a,17

Alleluia, alleluia!

Let the message of Christ, in all its richness,
find a home with you;
through him give thanks to God the Father.
Alleluia!

June 21st : First ReadingThere is no limit to the blessings which God can send youA Reading from the Second letter of St.Paul to the Corinthians 9: 6-11

June 21st :  First Reading

There is no limit to the blessings which God can send you

A Reading from the Second letter of St.Paul to the Corinthians 9: 6-11
Do not forget: thin sowing means thin reaping; the more you sow, the more you reap. Each one should give what he has decided in his own mind, not grudgingly or because he is made to, for God loves a cheerful giver. And there is no limit to the blessings which God can send you – he will make sure that you will always have all you need for yourselves in every possible circumstance, and still have something to spare for all sorts of good works. As scripture says: He was free in almsgiving, and gave to the poor: his good deeds will never be forgotten.
  The one who provides seed for the sower and bread for food will provide you with all the seed you want and make the harvest of your good deeds a larger one, and, made richer in every way, you will be able to do all the generous things which, through us, are the cause of thanksgiving to God.

The Word of the Lord.