Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, April 18, 2022

ஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்நான் ஆண்டவரைக் கண்டேன்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18

ஏப்ரல் 19  :  நற்செய்தி வாசகம்

நான் ஆண்டவரைக் கண்டேன்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18
அக்காலத்தில்

மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவரிடம், “ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார். இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள். இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்’ எனச் சொல்” என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல்திபா 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: 5b)பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.5அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! - பல்லவிநற்செய்திக்கு முன் வாழ்த்தொலிதிபா 118: 24அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

ஏப்ரல் 19  :  பதிலுரைப் பாடல்

திபா 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
4
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
5
அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. - பல்லவி

18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

ஏப்ரல் 19 : முதல் வாசகம்மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 36-41

ஏப்ரல் 19  :  முதல் வாசகம்

மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 36-41
பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு யூதர்களை நோக்கிக் கூறியது:

“நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.”

அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது” என்றார். மேலும் அவர் வேறு பல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 19th : Gospel 'I have seen the Lord and he has spoken to me'A Reading from the Holy Gospel according to St.John 20: 11-18

April 19th :  Gospel 

'I have seen the Lord and he has spoken to me'

A Reading from the Holy Gospel according to St.John 20: 11-18 
Mary stayed outside near the tomb, weeping. Then, still weeping, she stooped to look inside, and saw two angels in white sitting where the body of Jesus had been, one at the head, the other at the feet. They said, ‘Woman, why are you weeping?’ ‘They have taken my Lord away’ she replied ‘and I don’t know where they have put him.’ As she said this she turned round and saw Jesus standing there, though she did not recognise him. Jesus said, ‘Woman, why are you weeping? Who are you looking for?’ Supposing him to be the gardener, she said, ‘Sir, if you have taken him away, tell me where you have put him, and I will go and remove him.’ Jesus said, ‘Mary!’ She knew him then and said to him in Hebrew, ‘Rabbuni!’ – which means Master. Jesus said to her, ‘Do not cling to me, because I have not yet ascended to the Father. But go and find the brothers, and tell them: I am ascending to my Father and your Father, to my God and your God.’ So Mary of Magdala went and told the disciples that she had seen the Lord and that he had said these things to her.

The Word of the Lord.

April 19th : Responsorial PsalmPsalm 32(33):4-5,18-20,22 The Lord fills the earth with his love.orAlleluia, alleluia, alleluia!

April 19th :  Responsorial Psalm

Psalm 32(33):4-5,18-20,22 

The Lord fills the earth with his love.
or
Alleluia, alleluia, alleluia!
The word of the Lord is faithful
  and all his works to be trusted.
The Lord loves justice and right
  and fills the earth with his love.

The Lord fills the earth with his love.
or
Alleluia, alleluia, alleluia!

The Lord looks on those who revere him,
  on those who hope in his love,
to rescue their souls from death,
  to keep them alive in famine.

The Lord fills the earth with his love.
or
Alleluia, alleluia, alleluia!

Our soul is waiting for the Lord.
  The Lord is our help and our shield.
May your love be upon us, O Lord,
  as we place all our hope in you.

The Lord fills the earth with his love.
or
Alleluia, alleluia, alleluia!

Sequence 

Victimae Paschali Laudes
Christians, to the Paschal Victim
  offer sacrifice and praise.
The sheep are ransomed by the Lamb;
and Christ, the undefiled,
hath sinners to his Father reconciled.
Death with life contended:
  combat strangely ended!
Life’s own Champion, slain,
  yet lives to reign.
Tell us, Mary:
  say what thou didst see
  upon the way.
The tomb the Living did enclose;
I saw Christ’s glory as he rose!
The angels there attesting;
shroud with grave-clothes resting.
Christ, my hope, has risen:
he goes before you into Galilee.
That Christ is truly risen
  from the dead we know.
Victorious king, thy mercy show!

Gospel Acclamation Ps117:24

Alleluia, alleluia!

This day was made by the Lord:
we rejoice and are glad.
Alleluia!

April 19th : First Reading You must repent and be baptized in the name of JesusA Reading from the Acts of Apostles 2: 36-41

April 19th :  First Reading 

You must repent and be baptized in the name of Jesus

A Reading from the Acts of Apostles 2: 36-41 
On the day of Pentecost, Peter spoke to the Jews: ‘The whole House of Israel can be certain that God has made this Jesus whom you crucified both Lord and Christ.’
  Hearing this, they were cut to the heart and said to Peter and the apostles, ‘What must we do, brothers?’ ‘You must repent,’ Peter answered ‘and every one of you must be baptised in the name of Jesus Christ for the forgiveness of your sins, and you will receive the gift of the Holy Spirit. The promise that was made is for you and your children, and for all those who are far away, for all those whom the Lord our God will call to himself.’ He spoke to them for a long time using many arguments, and he urged them, ‘Save yourselves from this perverse generation.’ They were convinced by his arguments, and they accepted what he said and were baptised. That very day about three thousand were added to their number.

The Word of the Lord.