Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, September 9, 2020

September 10th : Gospel Love your enemiesA Reading from the Holy Gospel according to St.Luke 6:27-38

September 10th : Gospel 

Love your enemies

A Reading from the Holy Gospel according to St.Luke 6:27-38 
Jesus said to his disciples: ‘I say this to you who are listening: Love your enemies, do good to those who hate you, bless those who curse you, pray for those who treat you badly. To the man who slaps you on one cheek, present the other cheek too; to the man who takes your cloak from you, do not refuse your tunic. Give to everyone who asks you, and do not ask for your property back from the man who robs you. Treat others as you would like them to treat you. If you love those who love you, what thanks can you expect? Even sinners love those who love them. And if you do good to those who do good to you, what thanks can you expect? For even sinners do that much. And if you lend to those from whom you hope to receive, what thanks can you expect? Even sinners lend to sinners to get back the same amount. Instead, love your enemies and do good, and lend without any hope of return. You will have a great reward, and you will be sons of the Most High, for he himself is kind to the ungrateful and the wicked.
  ‘Be compassionate as your Father is compassionate. Do not judge, and you will not be judged yourselves; do not condemn, and you will not be condemned yourselves; grant pardon, and you will be pardoned. Give, and there will be gifts for you: a full measure, pressed down, shaken together, and running over, will be poured into your lap; because the amount you measure out is the amount you will be given back.’

The Gospel of the Lord.

September 10th : Responsorial PsalmPsalm 138(139):1-3,13-14,23-24

September 10th : Responsorial Psalm

Psalm 138(139):1-3,13-14,23-24 
Lead me, O Lord, in the path of life eternal.

O Lord, you search me and you know me,
  you know my resting and my rising,
  you discern my purpose from afar.
You mark when I walk or lie down,
  all my ways lie open to you.

Lead me, O Lord, in the path of life eternal.

For it was you who created my being,
  knit me together in my mother’s womb.
I thank you for the wonder of my being,
  for the wonders of all your creation.

Lead me, O Lord, in the path of life eternal.

Already you knew my soul,
O search me, God, and know my heart.
  O test me and know my thoughts.
See that I follow not the wrong path
  and lead me in the path of life eternal.

Lead me, O Lord, in the path of life eternal.

Gospel Acclamation Jm1:21

Alleluia, alleluia!
Accept and submit to the word
which has been planted in you
and can save your souls.
Alleluia!

September 10th : First readingYour brethren may be weaker than you: do not lead them astray.A Reading from the First Letter of St.Paul to the Corinthians 8:1-7,11-13

September 10th : First reading

Your brethren may be weaker than you: do not lead them astray.

A Reading from the First Letter of St.Paul to the Corinthians 8:1-7,11-13 
Now about food sacrificed to idols. ‘We all have knowledge’; yes, that is so, but knowledge gives self-importance – it is love that makes the building grow. A man may imagine he understands something, but still not understand anything in the way that he ought to. But any man who loves God is known by him. Well then, about eating food sacrificed to idols: we know that idols do not really exist in the world and that there is no god but the One. And even if there were things called gods, either in the sky or on earth – where there certainly seem to be ‘gods’ and ‘lords’ in plenty – still for us there is one God, the Father, from whom all things come and for whom we exist; and there is one Lord, Jesus Christ, through whom all things come and through whom we exist.
  Some people, however, do not have this knowledge. There are some who have been so long used to idols that they eat this food as though it really had been sacrificed to the idol, and their conscience, being weak, is defiled by it. In this way your knowledge could become the ruin of someone weak, of a brother for whom Christ died. By sinning in this way against your brothers, and injuring their weak consciences, it would be Christ against whom you sinned. That is why, since food can be the occasion of my brother’s downfall, I shall never eat meat again in case I am the cause of a brother’s downfall.

The Word of the Lord.

செப்டம்பர் 10 : நற்செய்தி வாசகம்உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38

செப்டம்பர் 10 : நற்செய்தி வாசகம்

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்.

உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 10 : பதிலுரைப் பாடல்திபா 139: 1-3. 13-14. 23-24 . (பல்லவி: 24b)பல்லவி: ஆண்டவரே, என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும்.

செப்டம்பர் 10 :  பதிலுரைப் பாடல்

திபா 139: 1-3. 13-14. 23-24 . (பல்லவி: 24b)

பல்லவி: ஆண்டவரே, என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும்.
1.ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
2.நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
3.நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. - பல்லவி

13.என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!
14.அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். - பல்லவி

23.இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்; என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும்.
24.உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்; என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 யோவா 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அல்லேலூயா.

செப்டம்பர் 10 : முதல் வாசகம்நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தி

செப்டம்பர் 10 : முதல் வாசகம்

நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1b-7, 11-13
சகோதரர் சகோதரிகளே,

நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்; ஆனால் அன்பு உறவை வளர்க்கும். தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர் அறியவேண்டிய முறையில் எதையும் அறிந்துகொள்ளவில்லை. கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார். இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைக் குறித்துப் பார்ப்போம்:

‘இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை', ‘கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை’ என்று நமக்குத் தெரியும். விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருக்கலாம்; தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும் உளர். ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே; அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன; அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன; அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம். ஆனால் இவ்வறிவு எல்லாரிடமும் இல்லை. இதுவரை சிலைகளை வழிபட்டுப் பழக்கப்பட்ட சிலர் அவற்றிற்குப் படைக்கப்பட்டவற்றைப் படையல் பொருள் என எண்ணி உண்கிறார்கள்.

அவர்களின் மனச்சான்று வலுவற்றதாய் இருப்பதால் அது கறைபடுகிறது. இவ்வாறு இந்த ‘அறிவு’ வலுவற்றவரின் அழிவுக்குக் காரணமாகிறது. அவர் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் அல்லவா? அவருக்காகவும் கிறிஸ்து இறந்தார் அல்லவா? இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும். ஆகையால் என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நான் உண்ணும் உணவு ஒரு தடைக் கல்லாக இருக்குமானால், இறைச்சியை ஒரு நாளும் உண்ண மாட்டேன். அவர் பாவத்தில் விழ நான் காரணமாய் இருக்க மாட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பொதுக்காலம் இருபத்து மூன்றாம் வாரம் வியாழக்கிழமை