Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, January 29, 2022

சனவரி 30 : நற்செய்தி வாசகம்எலியா, எலிசா போல் இயேசு யூதர்களுக்காக மட்டும் அனுப்பப்படவில்லை.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-30

சனவரி  30 :  நற்செய்தி வாசகம்

எலியா, எலிசா போல் இயேசு யூதர்களுக்காக மட்டும் அனுப்பப்படவில்லை.

✠ லூக்கா எழுதிய  நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-30
இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.

அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.

ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப் படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.

தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 30 : இரண்டாம் வாசகம்நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையானவைதான். இருப்பினும் இவற்றுள் அன்பே தலைசிறந்தது.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31- 13: 13

சனவரி  30 :  இரண்டாம் வாசகம்

நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையானவைதான். இருப்பினும் இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31- 13: 13
சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும் விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்.

நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும், என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும், என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும். இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.

ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரை குறையானது ஒழிந்துபோம். நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனான போது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.

ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18b-19

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

சனவரி 30 : பதிலுரைப் பாடல்திபா 71: 1-2. 3-4a. 5-6ab. 15,17 (பல்லவி: 15)பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.

சனவரி  30 :  பதிலுரைப் பாடல்

திபா 71: 1-2. 3-4a. 5-6ab. 15,17 (பல்லவி: 15)

பல்லவி: என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.
1
ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.
2
உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். - பல்லவி

3
என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4a
என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். - பல்லவி

5
என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை.
6ab
பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். - பல்லவி

15
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது.
17
கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். - பல்லவி

சனவரி 30 : முதல் வாசகம்மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 4-5, 17-19

சனவரி  30 :   முதல் வாசகம்

மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 4-5, 17-19
எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்'.

நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.

அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 30th : Gospel No prophet is ever accepted in his own country.A Reading from the Holy Gospel according to St. Luke 4: 21-30

January 30th :   Gospel 

No prophet is ever accepted in his own country.

A Reading from the Holy Gospel according to St. Luke 4: 21-30 
Jesus began to speak in the synagogue: ‘This text is being fulfilled today even as you listen.’ And he won the approval of all, and they were astonished by the gracious words that came from his lips. They said, ‘This is Joseph’s son, surely?’
  But he replied, ‘No doubt you will quote me the saying, “Physician, heal yourself” and tell me, “We have heard all that happened in Capernaum, do the same here in your own countryside.”’
  And he went on, ‘I tell you solemnly, no prophet is ever accepted in his own country.
  ‘There were many widows in Israel, I can assure you, in Elijah’s day, when heaven remained shut for three years and six months and a great famine raged throughout the land, but Elijah was not sent to any one of these: he was sent to a widow at Zarephath, a Sidonian town. And in the prophet Elisha’s time there were many lepers in Israel, but none of these was cured, except the Syrian, Naaman.’
  When they heard this everyone in the synagogue was enraged. They sprang to their feet and hustled him out of the town; and they took him up to the brow of the hill their town was built on, intending to throw him down the cliff, but he slipped through the crowd and walked away.

The Word of the Lord.

January 30th : Second ReadingThe supremacy of charityA Reading from the First Letter of St.Paul to the Corinthians 12: 31-13:13.

January 30th : Second Reading

The supremacy of charity

A Reading from the First Letter of St.Paul to the  Corinthians 12: 31-13:13.
Be ambitious for the higher gifts. And I am going to show you a way that is better than any of them.
  If I have all the eloquence of men or of angels, but speak without love, I am simply a gong booming or a cymbal clashing. If I have the gift of prophecy, understanding all the mysteries there are, and knowing everything, and if I have faith in all its fullness, to move mountains, but without love, then I am nothing at all. If I give away all that I possess, piece by piece, and if I even let them take my body to burn it, but am without love, it will do me no good whatever.
  Love is always patient and kind; it is never jealous; love is never boastful or conceited; it is never rude or selfish; it does not take offence, and is not resentful. Love takes no pleasure in other people’s sins but delights in the truth; it is always ready to excuse, to trust, to hope, and to endure whatever comes.
  Love does not come to an end. But if there are gifts of prophecy, the time will come when they must fail; or the gift of languages, it will not continue for ever; and knowledge – for this, too, the time will come when it must fail. For our knowledge is imperfect and our prophesying is imperfect; but once perfection comes, all imperfect things will disappear. When I was a child, I used to talk like a child, and think like a child, and argue like a child, but now I am a man, all childish ways are put behind me. Now we are seeing a dim reflection in a mirror; but then we shall be seeing face to face. The knowledge that I have now is imperfect; but then I shall know as fully as I am known.
  In short, there are three things that last: faith, hope and love; and the greatest of these is love.

The Word of the Lord.

Gospel Acclamation Jn14:6

Alleluia, alleluia!
I am the Way, the Truth and the Life, says the Lord;
No one can come to the Father except through me.
Alleluia!

January 30th : Responsorial PsalmPsalm 70(71):1-6,15,17 My lips will tell of your help.

January 30th :  Responsorial Psalm

Psalm 70(71):1-6,15,17 

My lips will tell of your help.
In you, O Lord, I take refuge;
  let me never be put to shame.
In your justice rescue me, free me:
  pay heed to me and save me.

My lips will tell of your help.

Be a rock where I can take refuge,
  a mighty stronghold to save me;
  for you are my rock, my stronghold.
Free me from the hand of the wicked.

My lips will tell of your help.

It is you, O Lord, who are my hope,
  my trust, O Lord, since my youth.
On you I have leaned from my birth,
  from my mother’s womb you have been my help.

My lips will tell of your help.

My lips will tell of your justice
  and day by day of your help.
O God, you have taught me from my youth
  and I proclaim your wonders still.

My lips will tell of your help.

January 30th : First Reading'I have appointed you prophet to the nations'A Reading from the Book of Jeremiah 1: 4-5,17-19

January 30th : First Reading

'I have appointed you prophet to the nations'

A Reading from the Book of Jeremiah 1: 4-5,17-19 
In the days of Josiah, the word of the Lord was addressed to me, saying:
‘Before I formed you in the womb I knew you;
before you came to birth I consecrated you;
I have appointed you as prophet to the nations.
‘So now brace yourself for action.
Stand up and tell them
all I command you.
Do not be dismayed at their presence,
or in their presence I will make you dismayed.
‘I, for my part, today will make you
into a fortified city,
a pillar of iron,
and a wall of bronze
to confront all this land:
the kings of Judah, its princes,
its priests and the country people.
They will fight against you
but shall not overcome you,
for I am with you to deliver you –
it is the Lord who speaks.’

The Word of the Lord.