Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, December 7, 2020

GOSPEL*_Hail, Mary, full of grace, the Lord is with you; blessed are you among women._*🕯A Reading from the Holy Gospel accoding to Luke 1:29-38*

*📖GOSPEL*

_Hail, Mary, full of grace, the Lord is with you; blessed are you among women._

*🕯A Reading from the Holy Gospel accoding to Luke 1:29-38*
The angel Gabriel was sent from God to a town of Galilee called Nazareth, to 
a virgin betrothed to a man named Joseph, of the house of David, and the 
virgin's name was Mary. And coming to her, he said, "Hail, full of grace! The 
Lord is with you." But she was greatly troubled at what was said and 
pondered what sort of greeting this might be. Then the angel said to her, "Do 
not be afraid, Mary, for you have found favor with God. Behold, you will 
conceive in your womb and bear a son, and you shall name him Jesus. He will 
be great and will be called Son of the Most High, and the Lord God will give 
him the throne of David his father, and he will rule over the house of Jacob 
forever, and of his Kingdom there will be no end." But Mary said to the angel, 
"How can this be, since I have no relations with a man?" And the angel said 
to her in reply, "The Holy Spirit will come upon you, and the power of the 
Most High will overshadow you. Therefore the child to be born will be called 
holy, the Son of God. And behold, Elizabeth, your relative, has also conceived 
a son in her old age, and this is the sixth month for her who was called 
barren; for nothing will be impossible for God." Mary said, "Behold, I am the 
handmaid of the Lord. May it be done to me according to your word." Then 
the angel departed from her. 

*The Gospel of the Lord.* 

I believe in God, /...

SECOND READING*_God chose us through Christ before the world began._*Ephesians 1:3-6, 11-12*

*🍁SECOND READING*

_God chose us through Christ before the world began._

*Ephesians 1:3-6, 11-12*
Brothers and sisters: Blessed be the God and Father of our Lord Jesus Christ, 
who has blessed us in Christ with every spiritual blessing in the heavens, as 
he chose us in him, before the foundation of the world, to be holy and without 
blemish before him. In love he destined us for adoption to himself through 
Jesus Christ, in accord with the favor of his will, for the praise of the glory of 
his grace that he granted us in the beloved. In him we were also chosen, 
destined in accord with the purpose of the One who accomplishes all things 
according to the intention of his will, so that we might exist for the praise of 
his glory, we who first hoped in Christ.
____ 

*🌿Before the gospel*
  
```Alleluia, alleluia! 
Hail, Mary, full of grace, the Lord is with you; blessed are you among women. Alleluia!
Luke 1:28```

🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*_Response: Sing to the Lord a new song, for he has done marvelous deeds._*🎶PSALM: Ps 98:1, 2-3ab, 3cd-4 🎵*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: Sing to the Lord a new song, for he has done marvelous deeds._

*🎶PSALM: Ps 98:1, 2-3ab, 3cd-4 🎵*
Sing to the LORD a new song,
for he has done wondrous deeds;
His right hand has won victory for him,
his holy arm.
The LORD has made his salvation known:
in the sight of the nations he has revealed his justice.
He has remembered his kindness and his faithfulness
toward the house of Israel.
All the ends of the earth have seen
the salvation by our God.
Sing joyfully to the LORD, all you lands;
break into song; sing praise

FIRST READING*_because she was the mother of all those who live._*A Reading from the Book of Genesis 3:9-15, 20*

_🍃Daily Reading for Tuesday December 8, 2020_

*FIRST READING*

_because she was the mother of all those who live._

*A Reading from the Book of Genesis 3:9-15, 20*
But Yahweh God called to the man. 'Where are you?' he asked. 'I heard the sound of you in the garden,' he replied. 'I was afraid because I was naked, so I hid.' 'Who told you that you were naked?' he asked. 'Have you been eating from the tree I forbade you to eat?' The man replied, 'It was the woman you put with me; she gave me some fruit from the tree, and I ate it.'  Then Yahweh God said to the woman, 'Why did you do that?' The woman replied, 'The snake tempted me and I ate.' Then Yahweh God said to the snake, 'Because you have done this, Accursed be you of all animals wild and tame! On your belly you will go and on dust you will feed as long as you live. I shall put enmity between you and the woman, and between your offspring and hers; it will bruise your head and you will strike its heel.'  The man named his wife 'Eve' because she was the mother of all those who live. 

*The Word of the Lord.*

நற்செய்தி வாசகம்*_💫அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்_*🕯️லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38*

*📖நற்செய்தி வாசகம்*

_💫அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்_

*🕯️லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38*
ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள்நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார். 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

இரண்டாம் வாசகம்*_உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்._*திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12*

*🍁இரண்டாம் வாசகம்*

_உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்._

*திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12*
சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார். 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*
_____

*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

_அல்லேலூயா, அல்லேலூயா! அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்; பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். அல்லேலூயா._

பதிலுரைப் பாடல்**🎶திபா 98: 1. 2-3. 3-4🎵*_பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்._

*🌿பதிலுரைப் பாடல்*

*🎶திபா 98: 1. 2-3. 3-4🎵*

_பல்லவி: ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்._
1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி 

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;
பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும்
உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். -பல்லவி 

3உ உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி

டிசம்பர் 8*_🍃தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா_*முதல் வாசகம்*_ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்._*தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20*

*டிசம்பர் 8*

_🍃தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா_

*முதல் வாசகம்*

_ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்._

*தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20*
ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, ``நீ எங்கே இருக்கின்றாய்?'' என்று கேட்டார். ``உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்'' என்றான் மனிதன். ``நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?'' என்று கேட்டார். அப்பொழுது அவன், ``என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்'' என்றான். ஆண்டவராகிய கடவுள், ``நீ ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், ``பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்'' என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், ``நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்'' என்றார். மனிதன் தன் மனைவிக்கு `ஏவாள்' என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய். 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*