Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, November 14, 2020

*📖GOSPEL**Gospel* _You have been faithful over a little, enter into the joy of your master._*A reading from the holy Gospel according to Matthew (Matthew 25:14-30)*

*📖GOSPEL*

*Gospel* 

_You have been faithful over a little, enter into the joy of your master._

*A reading from the holy Gospel according to Matthew (Matthew 25:14-30)*
At that time: Jesus told his disciples this parable: “A man going on a journey called his servants and entrusted to them his property; to one he gave five talents, to another two, to another one, to each according to his ability. Then he went away. He who had received the five talents went at once and traded with them; and .he made five talents more. So also, he who had the two talents made two talents more. But he who had received the one talent went and dug in the ground and hid his master’s money. “Now after a longtime the master of those servants came and settled accounts with them. And he who had received the five talents came forward, bringing five talents more, saying, ‘Master, you delivered to me five talents; here I have made five talents more.’ His master said to him, ‘Well done, good and faithful servant; you have been faithful over a little, I will set you over much; enter into the joy of your master. ’“And he also who had the two talents came forward, saying, ‘Master, you delivered to me two talents; here I have made two talents more. ’ His master said to him, ‘Well done, good and faithful servant; you have been faithful over a little, I will set you over much; enter into the joy of your master. ’ “He also who had received the one talent came forward, saying, ‘Master, I knew you to be a hard man, reaping where you did not sow, and gathering where you did not winnow; so I was afraid, and I went and hid your talent in the ground. Here you have what is yours. ’ “But his master answered him, ‘You wicked and slothful servant! You knew that I reap where I have not sowed, and gather where I have not winnowed? Then you ought to have invested my money with the bankers, and at my coming I should have received what was my own with interest. So take the talent from him, and give it to him who has the ten talents. For to every one who has will more be given, and he will have abundance; but from him who has not, even what he has will be taken away. And cast the worthless servant into the outer darkness, where there will be weeping and quashing of teeth.”’ 

*The Gospel of the Lord*

I believe in God, /...

*SECOND READING* _Let not the day of the Lord surprise you like a thief._*A reading from the first Letter of Saint Paul to the Thessalonians (1Thessalonians 5:1-6)*

*SECOND READING* 

_Let not the day of the Lord surprise you like a thief._

*A reading from the first Letter of Saint Paul to the Thessalonians (1Thessalonians 5:1-6)*
As to the times and the seasons, brethren, you have no need to have anything written to you. For you yourselves know well that the day of the Lord will come like a thief in the night. When people say, “There is peace and security,” then sudden destruction will come upon them as labour pains come upon a woman with child, and there will be no escape. But you are not in darkness, brethren, for that day to surprise you like a thief. For you are all sons of light and sons of the day; we are not of the night or of darkness. So then let us not sleep, as others do, but let us keep awake and be sober.

🌿ACCLAMATION
*ALLELUIA*
John15:4a.5b
Alleluia. Abide in me, and I in you, says the Lord; he who abides in me bears much fruit.Alleluia.

*RESPONSORIAL*_Response: Blessed are all who fear the Lord._*Psalm128:1-2.3.4-5(R. 1a)*

*RESPONSORIAL*

_Response: Blessed are all who fear the Lord._

*Psalm128:1-2.3.4-5(R. 1a)*

Blessed are all who fear the Lord,
and walk in his ways!
By the labour of your hands you shall eat.
You will be blessed and prosper. *R.* 

Your wife like a fruitful vine
in the heart of your house;
your children like shoots of the
olive around your table. *R.* 

Indeed thus shall be blessed
the man who fears the Lord.
May the Lord bless you from Sion.
May you see Jerusalem prosper
all the days of your life! *R.*

*🍂15/11/2020 November, Sunday 33rd Ordinary Sunday**FIRST READING* _but a woman who fears the Lord is to be praised._

*🍂15/11/2020 November, Sunday 33rd Ordinary Sunday*

*FIRST READING* 

_but a woman who fears the Lord is to be praised._
*A reading from the Book of Proverbs (Proverbs 31:10-13. 19-20.30-31)*

Who can find a good wife? She is far more precious than jewels. The heart of her husband trusts in her, and he will have no lack of gain. She does him good, and not harm, all the days of her life. She seeks wool and flax, and works with willing hands. She puts her hands to the distaff, and her hands hold the spindle. She opens her hand to the poor, and reaches out her hands to the needy. Charm is deceitful, and beauty is vain, but a woman who fears the Lord is to be praised. Give her of the fruit of her hands, and let her works praise her in the gates. 

The Word of the Lord

*நற்செய்தி வாசகம்* _சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்._ *✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* 

*யோவா 15: 4a, 5b* 

_அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா._ 

________


*நற்செய்தி வாசகம்* 

_சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்._ 

*✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30* 

அக்காலத்தில் 
இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். 

நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். 

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார். 

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார். அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார். 

ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார். 

அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார். ‘எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று அவர் கூறினார். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

*இரண்டாம் வாசகம்* _திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்._ *திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6*

*இரண்டாம் வாசகம்* 

_திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்._ 

*திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6* 
சகோதரர் சகோதரிகளே, 

காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். 

‘எங்கும் அமைதி, ஆபத்து இல்லை’ என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால் அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. 

ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்* *திபா 128: 1-2. 3. 4-5 . (பல்லவி: 1)* _பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!_

*பதிலுரைப் பாடல்* 

*திபா 128: 1-2. 3. 4-5 . (பல்லவி: 1)* 

_பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!_ 
1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! - பல்லவி 

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி 

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! - பல்லவி

*முதல் வாசகம்* _ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்._ *நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31*

*முதல் வாசகம்* 

_ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்._ 

*நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31* 
திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள். 

இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள். 

எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக. 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*