Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, December 11, 2020

GOSPEL*_Elijah had already arrived; People did not recognize him._*🕯From the Gospel of Matthew 17: 10-13*

_🍃Daily Reading for Saturday December 12, 2020_

*📖GOSPEL*

_Elijah had already arrived; People did not recognize him._

*🕯From the Gospel of Matthew 17: 10-13*
When Jesus and his disciples came down from the mountain, the disciples said to him, "How is it that the scribes say that Elijah must come first?" Asked. He responded, “It is true to say that Elijah will come and fix everything. But I tell you: Elijah has already come. People did not recognize him. Instead, they did to him whatever they wanted. They will persecute mankind in the same way. ” Then the disciples understood that he spake unto them of John the Baptist. 

*The Gospel of the Lord.* 

I believe in God, /...

𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*_Response: O God, show us the light of your face and lead us._*Psalm, 80: 1,2b. 14-15. 17-18.*

_🌿Daily Reading for Saturday December 12, 2020_

*𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: O God, show us the light of your face and lead us._

*Psalm, 80: 1,2b. 14-15. 17-18.*
 
1, Hear, O Lord of Israel! The one who leads Joseph like a flock! O thou who art on the clouds, shine!
2b, Stir up your energy and come save us! - R 

14, God of forces! Will be back! From the sky Look in the eye Show compassion on this vine!
15, Guard the branch that planted your right hand, the son who raised water for you! - R 

17, May your hand protect the man to your right! Save the human miner you made sure for yourself!
18, We will no longer widen away from you; Give us life; We will worship your name. - R 

____ 

🌿Before the gospel
  
```Alleluia, alleluia! Prepare the way for the Lord; Pave the way for him; All mankind will see the grace of God. Alleluia!```

FIRST READING*

_🍃Daily Reading for Saturday December 12, 2020_

*FIRST READING*

_Elijah will be back._
*🕯Read from the book of Wisdom of Syracuse 48: 1-4, 9-11*

Elijah rose up like fire; His word burned like fire. Brought famine on the people; He made them few in number by his passion. By the word of the Lord the heavens ceased to rain; Made fire three times. Elijah, how majestic are you in your dramatic deeds! Who can be proud of you? 
You took water in a chariot locked by fire horses in a hurricane. It is written that in times of wrath the wrath of the Lord shall be turned away, and the wrath of the Father shall be turned back to the Son, and the tribes of Jacob shall be rebuked. Those who have seen you and those who have fallen in love with you are blessed. We are sure to survive too. 

*The Word of the Lord.*

நற்செய்தி வாசகம்*```எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.```

🌿12/12/2020 திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் சனி 

*📖நற்செய்தி வாசகம்*

```எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.```
*✝️மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13*

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?'' என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்'' என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள். 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

பதிலுரைப் பாடல்*திபா 80: 1,2b. 14-15. 17-18 *பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்

_🍃12/12/2020 திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் சனி_

*பதிலுரைப் பாடல்*

திபா 80: 1,2b. 14-15. 17-18 

*பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.*
1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே!
கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2 உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி 

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்;
இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! -பல்லவி 

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக!
உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்;
நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். -பல்லவி 

*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

_அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா._

🍁12/12/2020 திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் சனி_*முதல் வாசகம்*_எலியா மீண்டும் வருவார்._*சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11*

_🍁12/12/2020 திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் சனி_

*முதல் வாசகம்*

_எலியா மீண்டும் வருவார்._

*சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11*
இறைவாக்கினர் எலியா நெருப்புப்போல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்துகொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி. 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*