Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, July 19, 2022

ஜூலை 20 : நற்செய்தி வாசகம்நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

ஜூலை 20 :  நற்செய்தி வாசகம்

நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9
அக்காலத்தில்

இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந் திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற் கரையில் நின்று கொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்:

“விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப்போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 20 : பதிலுரைப் பாடல்திபா 71: 1-2. 3-4a. 5-6ab. 15ab,17 (பல்லவி: 15ab)பல்லவி: ஆண்டவரே, என் வாய் உமது நீதியையும் மீட்பையும் எடுத்துரைக்கும்.

ஜூலை 20 :  பதிலுரைப் பாடல்

திபா 71: 1-2. 3-4a. 5-6ab. 15ab,17 (பல்லவி: 15ab)

பல்லவி: ஆண்டவரே, என் வாய் உமது நீதியையும் மீட்பையும் எடுத்துரைக்கும்.
1
ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.
2
உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். - பல்லவி

3
என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.
4a
என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். - பல்லவி

5
என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை.
6ab
பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். - பல்லவி

15ab
என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்;
17
கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர். அல்லேலூயா.

ஜூலை 20 : முதல் வாசகம்மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 1, 4-10

ஜூலை 20 :  முதல் வாசகம்

மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 1, 4-10
பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்:

எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: ‘தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்'.

நான், ‘என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே’ என்றேன். ஆண்டவர் என்னிடம் கூறியது: “ ‘சிறுபிள்ளை நான்’ என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். அவர்கள் முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்,’ என்கிறார் ஆண்டவர்."

ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 20th : Gospel A sower went out to sowA Reading from the Holy Gospel according to St.Matthew 13:1-9

July 20th : Gospel 

A sower went out to sow

A Reading from the Holy Gospel according to St.Matthew 13:1-9 ©
Jesus left the house and sat by the lakeside, but such large crowds gathered round him that he got into a boat and sat there. The people all stood on the beach, and he told them many things in parables.
  He said, ‘Imagine a sower going out to sow. As he sowed, some seeds fell on the edge of the path, and the birds came and ate them up. Others fell on patches of rock where they found little soil and sprang up straight away, because there was no depth of earth; but as soon as the sun came up they were scorched and, not having any roots, they withered away. Others fell among thorns, and the thorns grew up and choked them. Others fell on rich soil and produced their crop, some a hundredfold, some sixty, some thirty. Listen, anyone who has ears!’

The Word of the Lord.

July 20th : Responsorial PsalmPsalm 70(71):1-6,15,17 ©My lips will tell of your help.

July 20th : Responsorial Psalm

Psalm 70(71):1-6,15,17 ©

My lips will tell of your help.
In you, O Lord, I take refuge;
  let me never be put to shame.
In your justice rescue me, free me:
  pay heed to me and save me.

My lips will tell of your help.

Be a rock where I can take refuge,
  a mighty stronghold to save me;
  for you are my rock, my stronghold.
Free me from the hand of the wicked.

My lips will tell of your help.

It is you, O Lord, who are my hope,
  my trust, O Lord, since my youth.
On you I have leaned from my birth,
  from my mother’s womb you have been my help.

My lips will tell of your help.

My lips will tell of your justice
  and day by day of your help.
O God, you have taught me from my youth
  and I proclaim your wonders still.

My lips will tell of your help.

Gospel Acclamation Ps118:36,29

Alleluia, alleluia!
Bend my heart to your will, O Lord,
and teach me your law.
Alleluia!

July 20th : First ReadingGo and say whatever I command you and do not fearA Reading from the Book of Jeremiah 1: 1,4-10

July 20th : First Reading

Go and say whatever I command you and do not fear

A Reading from the Book of Jeremiah 1: 1,4-10 
The words of Jeremiah son of Hilkiah, of a priestly family living at Anathoth in the territory of Benjamin.
  The word of the Lord was addressed to me, saying,
‘Before I formed you in the womb I knew you;
before you came to birth I consecrated you;
I have appointed you as prophet to the nations.’
I said, ‘Ah, Lord; look, I do not know how to speak: I am a child!’
But the Lord replied,
‘Do not say, “I am a child.”
Go now to those to whom I send you
and, say whatever I command you.
Do not be afraid of them,
for I am with you to protect you –
it is the Lord who speaks!’
Then the Lord put out his hand and touched my mouth and said to me:
‘There! I am putting my words into your mouth.
Look, today I am setting you
over nations and over kingdoms,
to tear up and to knock down,
to destroy and to overthrow,
to build and to plant.’

The Word of the Lord.