Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, April 18, 2023

ஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21

ஏப்ரல் 19 :  நற்செய்தி வாசகம்

தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21
அக்காலத்தில்

இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல்திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 6a)பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

ஏப்ரல் 19 :  பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 6a)

பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3
என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 16
அல்லேலூயா, அல்லேலூயா! 

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.

ஏப்ரல் 19 : முதல் வாசகம்நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26

ஏப்ரல் 19 :  முதல் வாசகம்

நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26
அந்நாள்களில்

தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர். ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, “நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளை யெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள்.

தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டுவருமாறு ஆள் அனுப்பினார்கள். அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே அவர்கள் திரும்பி வந்து, “நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டு இருப்பதையும் கண்டோம். ஆனால் கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை” என்று அறிவித்தார்கள்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர். அப்பொழுது ஒருவர் வந்து, “நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்” என்று அவர்களிடம் அறிவித்தார். உடனே காவல் தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 19th : Gospel God sent his Son into the world so that through him the world might be savedA Reading from the Holy Gospel according to St.John 3: 16-21

April 19th :  Gospel 

God sent his Son into the world so that through him the world might be saved

A Reading from the Holy Gospel according to St.John 3: 16-21
Jesus said to Nicodemus:
‘God loved the world so much that he gave his only Son,
so that everyone who believes in him may not be lost
but may have eternal life.
For God sent his Son into the world
not to condemn the world,
but so that through him the world might be saved.
No one who believes in him will be condemned;
but whoever refuses to believe is condemned already,
because he has refused to believe in the name of God’s only Son.
On these grounds is sentence pronounced:
that though the light has come into the world
men have shown they prefer darkness to the light
because their deeds were evil.
And indeed, everybody who does wrong
hates the light and avoids it,
for fear his actions should be exposed;
but the man who lives by the truth comes out into the light,
so that it may be plainly seen that what he does is done in God.’

The Word of the Lord.

April 19th : Responsorial PsalmPsalm 33(34):2-9 This poor man called and the Lord heard him.orAlleluia!

April 19th :  Responsorial Psalm

Psalm 33(34):2-9 

This poor man called and the Lord heard him.
or
Alleluia!
I will bless the Lord at all times,
  his praise always on my lips;
in the Lord my soul shall make its boast.
  The humble shall hear and be glad.

This poor man called and the Lord heard him.
or
Alleluia!

Glorify the Lord with me.
  Together let us praise his name.
I sought the Lord and he answered me;
  from all my terrors he set me free.

This poor man called and the Lord heard him.
or
Alleluia!

Look towards him and be radiant;
  let your faces not be abashed.
This poor man called, the Lord heard him
  and rescued him from all his distress.

This poor man called and the Lord heard him.
or
Alleluia!

The angel of the Lord is encamped
  around those who revere him, to rescue them.
Taste and see that the Lord is good.
  He is happy who seeks refuge in him.

This poor man called and the Lord heard him.
or
Alleluia!

Gospel Acclamation 

Alleluia, alleluia!

Christ has risen and shone upon us
whom he redeemed with his blood.
Alleluia!

April 19th : First Reading The men you imprisoned are in the Temple, preaching to the peopleA Reading from the Acts of Apostles 5:17-26

April 19th :  First Reading 

The men you imprisoned are in the Temple, preaching to the people

A Reading from the Acts of Apostles 5:17-26
The high priest intervened with all his supporters from the party of the Sadducees. Prompted by jealousy, they arrested the apostles and had them put in the common gaol.
  But at night the angel of the Lord opened the prison gates and said as he led them out, ‘Go and stand in the Temple, and tell the people all about this new Life.’ They did as they were told; they went into the Temple at dawn and began to preach.
  When the high priest arrived, he and his supporters convened the Sanhedrin – this was the full Senate of Israel – and sent to the gaol for them to be brought. But when the officials arrived at the prison they found they were not inside, so they went back and reported, ‘We found the gaol securely locked and the warders on duty at the gates, but when we unlocked the door we found no one inside.’ When the captain of the Temple and the chief priests heard this news they wondered what this could mean. Then a man arrived with fresh news. ‘At this very moment’ he said, ‘the men you imprisoned are in the Temple. They are standing there preaching to the people.’ The captain went with his men and fetched them. They were afraid to use force in case the people stoned them.

The Word of the Lord.