ஆகஸ்ட் 16 : பதிலுரைப் பாடல்
திபா 66: 1-3a. 5,8. 16-17 (பல்லவி: 9a,20a காண்க)
பல்லவி: நம்மை உயிர்வாழச் செய்த இறைவன் போற்றி!
1
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்;
2
அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3a
கடவுளை நோக்கி உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை என்று போற்றுங்கள். - பல்லவி
5
வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை.
8
மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்து பாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். - பல்லவி
16
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
17
அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரி 5: 19
அல்லேலூயா, அல்லேலூயா!
கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.