Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, September 25, 2020

September 26th : GospelThey were afraid to ask him what he meant.A Reading from the Holy Gospel according to St.Luke 9:43-45

September 26th :  Gospel

They were afraid to ask him what he meant.

A Reading from the Holy Gospel according to St.Luke 9:43-45 
At a time when everyone was full of admiration for all he did, Jesus said to his disciples, ‘For your part, you must have these words constantly in your mind: “The Son of Man is going to be handed over into the power of men.”’ But they did not understand him when he said this; it was hidden from them so that they should not see the meaning of it, and they were afraid to ask him about what he had just said.

The Gospel of the Lord.

September 26th : Responsorial PsalmPsalm 89(90):3-6,12-14,17

September 26th :  Responsorial Psalm

Psalm 89(90):3-6,12-14,17 
O Lord, you have been our refuge from one generation to the next.

You turn men back to dust
  and say: ‘Go back, sons of men.’
To your eyes a thousand years
  are like yesterday, come and gone,
  no more than a watch in the night.

O Lord, you have been our refuge from one generation to the next.

You sweep men away like a dream,
  like the grass which springs up in the morning.
In the morning it springs up and flowers:
  by evening it withers and fades.

O Lord, you have been our refuge from one generation to the next.

Make us know the shortness of our life
  that we may gain wisdom of heart.
Lord, relent! Is your anger for ever?
  Show pity to your servants.

O Lord, you have been our refuge from one generation to the next.

In the morning, fill us with your love;
  we shall exult and rejoice all our days.
Let the favour of the Lord be upon us:
  give success to the work of our hands.

O Lord, you have been our refuge from one generation to the next.

Gospel Acclamation cf.Ac16:14

Alleluia, alleluia!
Open our heart, O Lord,
to accept the words of your Son.
Alleluia!

September 26th : First ReadingRemember your creator in the days of your youth.Ecclesiastes 11:9-12:8

September 26th :  First Reading

Remember your creator in the days of your youth.

Ecclesiastes 11:9-12:8 
Rejoice in your youth, you who are young;
let your heart give you joy in your young days.
Follow the promptings of your heart
and the desires of your eyes.
But this you must know: for all these things God will bring you to judgement.
Cast worry from your heart,
shield your flesh from pain.
Yet youth, the age of dark hair, is vanity. And remember your creator in the days of your youth, before evil days come and the years approach when you say, ‘These give me no pleasure’, before sun and light and moon and stars grow dark, and the clouds return after the rain;
the day when those who keep the house tremble
and strong men are bowed;
when the women grind no longer at the mill,
because day is darkening at the windows
and the street doors are shut;
when the sound of the mill is faint,
when the voice of the bird is silenced,
and song notes are stilled,
when to go uphill is an ordeal
and a walk is something to dread.
Yet the almond tree is in flower,
the grasshopper is heavy with food
and the caper bush bears its fruit,
while man goes to his everlasting home. And the mourners are already walking to and fro in the street
before the silver cord has snapped,
or the golden lamp been broken,
or the pitcher shattered at the spring,
or the pulley cracked at the well,
or before the dust returns to the earth as it once came from it, and the breath to God who gave it.
  Vanity of vanities, the Preacher says. All is vanity.

The Word of the Lord.

செப்டம்பர் 26 : நற்செய்தி வாசகம்மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45

செப்டம்பர் 26 :  நற்செய்தி வாசகம்

மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45
அக்காலத்தில்

இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், “நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்” என்றார்.

அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 26 : பதிலுரைப் பாடல்திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 . (பல்லவி: 1)பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

செப்டம்பர் 26 :  பதிலுரைப் பாடல்

திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 . (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3.மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; ‘மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.
4.ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

5.வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6.அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். - பல்லவி

12.எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13.ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14.காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17.எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா

செப்டம்பர் 26 : முதல் வாசகம்கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9- 12: 8.

செப்டம்பர் 26 :  முதல் வாசகம்

கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9- 12: 8.
இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே. ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே.

“வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே” என்று நீ சொல்லக் கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர் நடுக்கங்கொள்ள, வலியோர் தளர்வுறுமுன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புமுன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபைஉரையாளர்; எல்லாமே வீண்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 26. பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் சனிக்கிழமை