Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, July 19, 2021

ஜூலை 20 : நற்செய்தி வாசகம்தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே'' என்றார் இயேசு.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

ஜூலை 20 :  நற்செய்தி வாசகம்

தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே'' என்றார் இயேசு.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50
அக்காலத்தில்

மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்” என்றார்.

அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூலை 20 : பதிலுரைப் பாடல்விப 15: 8-9. 10,12. 17 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவருக்கு புகழ் பாடுவேன்: ஏனெனில், மாட்சியுடன் வெற்றி பெற்றார்.

ஜூலை 20 :   பதிலுரைப் பாடல்

விப 15: 8-9. 10,12. 17 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு புகழ் பாடுவேன்: ஏனெனில், மாட்சியுடன் வெற்றி பெற்றார்.
8
உம் நாசியின் மூச்சால் நீர்த்திரள்கள் குவிந்தன; பேரலைகள் சுவரென நின்றன; கடல் நடுவில் ஆழங்கள் உறைந்து போயின.
9
எதிரி சொன்னான்: ‘துரத்திச் செல்வேன்; முன்சென்று மடக்குவேன்; கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்; என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்; என் வாளை உருவுவேன்; என் கை அவர்களை அழிக்கும்'. - பல்லவி

10
நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்; கடல் அவர்களை மூடிக் கொண்டது; ஆற்றல்மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம் போல் அமிழ்ந்தனர்.
12
நீர் உமது வலக்கையை நீட்டினீர். நிலம் அவர்களை விழுங்கிவிட்டது. - பல்லவி

17
ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் கூறுகிறார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.” அல்லேலூயா.

ஜூலை 20 : முதல் வாசகம்இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 21- 15: 1.

ஜூலை 20 :   முதல் வாசகம்

இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 14: 21- 15: 1.
அந்நாள்களில்

மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச் செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல் வரை சென்றனர்.

பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், “இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்றுவிடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்” என்றனர்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள், குதிரை வீரர் அனைவர் மேலும் திரும்பி வரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு” என்றார். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பி வந்தது. அதற்கு எதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரை வீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது.

இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.

அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL "Stretching out his hand towards his disciples, he said: 'Here are my mother and my brothers'" A Reading From The Holy Gospel According To Matthew (12, 46-50)

20 July 2021, General Week 16 - Tuesday 

📖GOSPEL 

"Stretching out his hand towards his disciples, he said: 'Here are my mother and my brothers'" 

A Reading From The Holy Gospel According To Matthew (12, 46-50) 
At that time, as Jesus was still speaking to the crowds, here his mother and his brothers were standing outside trying to speak to him. Someone said to her, “Your mother and your brothers are out there trying to talk to you. "Jesus answered her," Who is my mother, and who are my brothers? Then, stretching out his hand to his disciples, he said, "Here are my mother and my brothers. For he who does the will of my Father who is in heaven, he is to me a brother, a sister, a mother. " 

     - Let us acclaim the Word of God.

20 July 2021, General Week 16 - Tuesday 🌿CANTICLE Respons :Sing to the Lord! Dazzling is his glory! Song of Exodus: 15, 8, 9, 10. 12, 13a.17 (cf. Ex 15, 1b)

20 July 2021, General Week 16 - Tuesday 

🌿CANTICLE 

Respons :
Sing to the Lord! Dazzling is his glory! 

Song of Exodus: 15, 8, 9, 10. 12, 13a.17 (cf. Ex 15, 1b) 
At the breath of your nostrils, the waters accumulate:
like a dike, the waves rise;
the depths are frozen in the heart of the sea. R 

The enemy said: “I pursue, I dominate,
I share the booty, I feed on it;
I draw my sword: I take the remains! »  R 

You breathe your breath: the sea covers them;
like lead, they sink into dreadful waters.
You stretch out your right hand: the earth swallows them up. R 

By your faithfulness you lead this people whom you have redeemed.
You bring them, you plant them on the mountain, your inheritance,
the place which you have made, Lord, to inhabit it,
the sanctuary, Lord, founded by your hands. R 

________________________________ 

🌿Greetings before the gospel 

Alleluia. Alleluia.
If anyone loves me, he will keep my word, says the Lord;
my Father will love him, and we will come to him.
Alleluia. (Jn 14:23) 

________________

20 July 2021, General Week 16 - Tuesday FIRST READING "The children of Israel entered the midst of the sea on dry ground" A Reading from the book of Exodus (14, 21 - 15, 1a)

20 July 2021, General Week 16 - Tuesday 

FIRST READING 

"The children of Israel entered the midst of the sea on dry ground" 

A Reading from the book of Exodus (14, 21 - 15, 1a) 
In those days Moses stretched out his arm over the sea. The Lord drove out the sea all night with a strong east wind; he dried up the sea, and the waters were divided. The children of Israel entered the midst of the sea on dry ground, the waters forming a wall on their right and on their left. The Egyptians pursued them; and all Pharaoh's horses, his chariots, and his warriors went in behind them into the midst of the sea: at the last hours of the night the Lord watched from the pillar of fire and cloud the army of the Egyptians, and he hit her with panic. He bent the wheels of their chariots, and they had great difficulty driving them. The Egyptians cried out, "Let us flee from Israel, for it is the Lord who fights for them against us!" "The Lord said to Moses:" Stretch out your arm over the sea: let the waters return to the Egyptians, their chariots and their warriors! Moses stretched out his arm over the sea. At daybreak the sea resumed its place; in their flight the Egyptians encountered them, and the Lord threw them down into the midst of the sea. The waters flowed back and covered the chariots and the warriors, all Pharaoh's army that had entered the sea in pursuit of them. Israel. There was not a single one left. But the children of Israel had walked on dry ground in the midst of the sea, the waters forming a wall on their right and on their left: that day the Lord saved Israel out of the hand of Egypt, and Israel saw the Egyptians who died on the seashore. Israel saw with what a mighty hand the Lord had acted against Egypt. The people feared the Lord, they put their faith in the Lord and in his servant Moses. 

            - Word of the Lord.