சனவரி 18 : பதிலுரைப் பாடல்
திபா 89: 19,20-21. 26-27 (பல்லவி: 20a)
பல்லவி: என் ஊழியன் தாவீதை நான் கண்டுபிடித்தேன்.
19
முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். - பல்லவி
20
என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
21
என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். - பல்லவி
26
‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
27
நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தில் மாபெரும் மன்னன் ஆக்குவேன். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபே 1: 17-18
அல்லேலூயா, அல்லேலூயா!
கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! அல்லேலூயா.