Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, December 27, 2020

GOSPEL _Herod killed all the boys in Bethlehem._*🕯️A reading from the Holy Gospel according to Matthew 2:13-18*

*📖GOSPEL 

_Herod killed all the boys in Bethlehem._

*🕯️A reading from the Holy Gospel according to Matthew 2:13-18*
After they had left, suddenly the angel of the Lord appeared to Joseph in a dream and said, 'Get up, take the child and his mother with you, and escape into Egypt, and stay there until I tell you, because Herod intends to search for the child and do away with him.'
So Joseph got up and, taking the child and his mother with him, left that night for Egypt,
where he stayed until Herod was dead. This was to fulfil what the Lord had spoken through the prophet: I called my son out of Egypt.
Herod was furious on realising that he had been fooled by the wise men, and in Bethlehem and its surrounding district he had all the male children killed who were two years old or less, reckoning by the date he had been careful to ask the wise men.
Then were fulfilled the words spoken through the prophet Jeremiah:
A voice is heard in Ramah, lamenting and weeping bitterly: it is Rachel weeping for her children, refusing to be comforted because they are no more. 

*The Gospel of the Lord* 

I believe in God, /....

RESPONSORIAL* _Response: We became like a bird that survived the Vader trap._ *Psalms 124:2-3, 4-5, 7-8*

*🍁RESPONSORIAL* 

_Response:  We became like a bird that survived the Vader trap._ 

*Psalms 124:2-3, 4-5, 7-8*
2 if Yahweh had not been on our side when people attacked us, 

3 they would have swallowed us alive in the heat of their anger. 

4 Then water was washing us away, a torrent running right over us; 

5 running right over us then were turbulent waters. 

7 We escaped like a bird from the fowlers' net. The net was broken and we escaped; 

8 our help is in the name of Yahweh, who made heaven and earth.


___ 

*🌿Gospel Acclamation* 

```Hallelujah, Hallelujah! Lord, we congratulate you. We praise the Lord as water; The white group of witnesses will praise you wholeheartedly. Hallelujah.```

FIRST READING* _The blood of Jesus cleanses us from all sin._*A Reading from the book of First John 1:5--2:2*

_🎅🏼 Daily Reading for Monday December 28, 2020🎄_

*FIRST READING* 

_The blood of Jesus cleanses us from all sin._

*A Reading from the book of First John 1:5--2:2*
This is what we have heard from him and are declaring to you: God is light, and there is no darkness in him at all.
If we say that we share in God's life while we are living in darkness, we are lying, because we are not living the truth.
But if we live in light, as he is in light, we have a share in another's life, and the blood of Jesus, his Son, cleanses us from all sin.
If we say, 'We have no sin,' we are deceiving ourselves, and truth has no place in us;
if we acknowledge our sins, he is trustworthy and upright, so that he will forgive our sins and will cleanse us from all evil.
If we say, 'We have never sinned,' we make him a liar, and his word has no place in us.
My children, I am writing this to prevent you from sinning; but if anyone does sin, we have an advocate with the Father, Jesus Christ, the upright.
He is the sacrifice to expiate our sins, and not only ours, but also those of the whole world. 

*The Word of the Lord *

நற்செய்தி வாசகம்*_ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்._*📖மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18*

*🕯️நற்செய்தி வாசகம்*

_ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்._

*📖மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18*
ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ``நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும். ஏனெனில் குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்'' என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ``எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றம் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கு ஏற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். அப்பொழுது ``ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை'' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது. 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

பதிலுரைப் பாடல்*திபா 124: 2-3. 4-5. 7-8 _பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்._

https://youtu.be/e6DQHcTnftY
*🌿பதிலுரைப் பாடல்*

திபா 124: 2-3. 4-5. 7-8 

_பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்._
2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். -பல்லவி 

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்;
பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். -பல்லவி 

7b கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! -பல்லவி



*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

_அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா._

28/12/2020-புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழா_*முதல் வாசகம்*_இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்._*திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5 - 2: 2*

_🎅🏼 28/12/2020-புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழா_

*முதல் வாசகம்*

_இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்._

*திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5 - 2: 2*
சகோதரர் சகோதரிகளே, நாங்கள் இயேசு கிறிஸ்துவிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவர் ஆவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோம் என்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யர் ஆக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும். என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே. 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*