Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, January 27, 2023

சனவரி 28 : நற்செய்தி வாசகம்காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

சனவரி 28 :  நற்செய்தி வாசகம்

காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41
அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ‘‘அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.

அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர்கள், ‘‘போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, ‘‘இரையாதே, அமைதியாயிரு” என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.

பின் அவர் அவர்களை நோக்கி, ‘‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, ‘‘காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 28 : பதிலுரைப் பாடல்லூக் 1: 69-70. 71-73. 74-75 பல்லவி: தம் மக்களைத் தேடிவந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுவோம்.

சனவரி 28 :  பதிலுரைப் பாடல்

லூக் 1: 69-70. 71-73. 74-75 

பல்லவி: தம் மக்களைத் தேடிவந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுவோம்.
69
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
70
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். - பல்லவி

71
நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.
72
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
73
தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். - பல்லவி

74
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
75
விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 3: 16
அல்லேலூயா, அல்லேலூயா! 

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா

சனவரி 28 : முதல் வாசகம்கடவுளைத் தன் சிற்பியும், கட்டுபவருமாகக் கொண்ட நகரை ஆபிரகாம் எதிர்நோக்கியிருந்தார்.எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 8-19

சனவரி 28 :  முதல் வாசகம்

கடவுளைத் தன் சிற்பியும், கட்டுபவருமாகக் கொண்ட நகரை ஆபிரகாம் எதிர்நோக்கியிருந்தார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2, 8-19
சகோதரர் சகோதரிகளே,

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, “அவர்களுடைய கடவுள்” என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.

ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 28th : Gospel 'Even the wind and the sea obey him'A Reading from the Holy Gospel according to St.Mark 4: 35-41

January 28th :  Gospel 

'Even the wind and the sea obey him'

A Reading from the Holy Gospel according to St.Mark 4: 35-41 
With the coming of evening, Jesus said to his disciples, ‘Let us cross over to the other side.’ And leaving the crowd behind they took him, just as he was, in the boat; and there were other boats with him. Then it began to blow a gale and the waves were breaking into the boat so that it was almost swamped. But he was in the stern, his head on the cushion, asleep. They woke him and said to him, ‘Master, do you not care? We are going down!’ And he woke up and rebuked the wind and said to the sea, ‘Quiet now! Be calm!’ And the wind dropped, and all was calm again. Then he said to them, ‘Why are you so frightened? How is it that you have no faith?’ They were filled with awe and said to one another, ‘Who can this be? Even the wind and the sea obey him.’

The Word of the Lord.

January 28th : Responsorial Psalm Luke 1:69-75 Blessed be the Lord, the God of Israel! He has visited his people and redeemed them.

January 28th :  Responsorial Psalm 

Luke 1:69-75 

Blessed be the Lord, the God of Israel! He has visited his people and redeemed them.
He has raised up for us a mighty saviour
  in the house of David his servant,
as he promised by the lips of holy men,
  those who were his prophets from of old.

Blessed be the Lord, the God of Israel! He has visited his people and redeemed them.

A saviour who would free us from our foes,
  from the hands of all who hate us.
So his love for our fathers is fulfilled
  and his holy covenant remembered.

Blessed be the Lord, the God of Israel! He has visited his people and redeemed them.

He swore to Abraham our father
  to grant us that free from fear,
  and saved from the hands of our foes,
we might serve him in holiness and justice
  all the days of our life in his presence.

Blessed be the Lord, the God of Israel! He has visited his people and redeemed them.

Gospel Acclamation cf.Ps26:11

Alleluia, alleluia!

Instruct me, Lord, in your way;
on an even path lead me.
Alleluia!

January 28th : First ReadingAbraham looked forward to a city founded, designed and built by GodHebrews 11:1-2, 8-19

January 28th :  First Reading

Abraham looked forward to a city founded, designed and built by God

Hebrews 11:1-2, 8-19 
Only faith can guarantee the blessings that we hope for, or prove the existence of the realities that at present remain unseen. It was for faith that our ancestors were commended.
  It was by faith that Abraham obeyed the call to set out for a country that was the inheritance given to him and his descendants, and that he set out without knowing where he was going. By faith he arrived, as a foreigner, in the Promised Land, and lived there as if in a strange country, with Isaac and Jacob, who were heirs with him of the same promise. They lived there in tents while he looked forward to a city founded, designed and built by God.
  It was equally by faith that Sarah, in spite of being past the age, was made able to conceive, because she believed that he who had made the promise would be faithful to it. Because of this, there came from one man, and one who was already as good as dead himself, more descendants than could be counted, as many as the stars of heaven or the grains of sand on the seashore.
  All these died in faith, before receiving any of the things that had been promised, but they saw them in the far distance and welcomed them, recognising that they were only strangers and nomads on earth. People who use such terms about themselves make it quite plain that they are in search of their real homeland. They can hardly have meant the country they came from, since they had the opportunity to go back to it; but in fact they were longing for a better homeland, their heavenly homeland. That is why God is not ashamed to be called their God, since he has founded the city for them.
  It was by faith that Abraham, when put to the test, offered up Isaac. He offered to sacrifice his only son even though the promises had been made to him and he had been told: It is through Isaac that your name will be carried on. He was confident that God had the power even to raise the dead; and so, figuratively speaking, he was given back Isaac from the dead.

The Word of the Lord.