Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, January 9, 2021

GOSPEL* _Thou art my beloved Son, in whom I am well pleased._*🕯️A Reading from the Holy Gospel according to Mark 1,7-11*

*📖GOSPEL* 

_Thou art my beloved Son, in whom I am well pleased._

*🕯️A Reading from the Holy Gospel according to Mark 1,7-11*
And he preached, saying: "A stronger one comes after me. I am not worthy to reach down and loosen the laces of his shoes. I have baptized you with water. Yet truly, he will baptize you with the Holy Spirit." And it happened that, in those days, Jesus arrived from Nazareth of Galilee. And he was baptized by John in the Jordan. And immediately, upon ascending from the water, he saw the heavens opened and the Spirit, like a dove, descending, and remaining with him. And there was a voice from heaven: "You are my beloved Son; in you I am well pleased." 

*The Gospel of the Lord* 

I believe in God,

SECOND READING*_The Holy Spirit and water testify that Jesus is Lord._*from the first letter of saint John 5,1-9*

*🌿SECOND READING*

_The Holy Spirit and water testify that Jesus is Lord._

*from the first letter of saint John 5,1-9*
Everyone who believes that Jesus is the Christ, is born of God. And everyone who loves God, who provides that birth, also loves him who has been born of God.
In this way, we know that we love those born of God: when we love God and do his commandments.
For this is the love of God: that we keep his commandments. And his commandments are not heavy.
For all that is born of God overcomes the world. And this is the victory that overcomes the world: our faith.
Who is it that overcomes the world? Only he who believes that Jesus is the Son of God!
This is the One who came by water and blood: Jesus Christ. Not by water only, but by water and blood. And the Spirit is the One who testifies that the Christ is the Truth.
For there are Three who give testimony in heaven: the Father, the Word, and the Holy Spirit. And these Three are One.
And there are three who give testimony on earth: the Spirit, and the water, and the blood. And these three are one.
f we accept the testimony of men, then the testimony of God is greater. For this is the testimony of God, which is greater: that he has testified about his Son. 

__ 

*🌿Gospel Acclamation* 

```Alleluia, alleluia! When John saw Jesus coming to him, he said, “Behold the Lamb of God! The Lamb is the one who takes away the sin of the world. Alleluia!```

RESPONSORIAL* _Respons : You will draw water with gladness from the fountains of the Savior._*Isaiah 12: 2-3. 4. 5-6*

*🍁RESPONSORIAL* 

_Respons : You will draw water with gladness from the fountains of the Savior._

*Isaiah 12: 2-3. 4. 5-6*
Behold, God is my savior, I will act faithfully, and I will not be afraid. For the Lord is my strength and my praise, and he has become my salvation."
You will draw water with gladness from the fountains of the Savior. - Respons 

And you will say in that day: "Confess the Lord, and invoke his name! Make his plans known among the peoples! Remember that his name is exalted! - Respons 

Sing to the Lord, for he has acted magnificently! Announce it to the whole world!
Exult and give praise, O habitation of Zion! For the Great One, the Holy One of Israel, is in your midst!" - Respons 

___

FIRST READING* _You all come to the waters; You will live._*A Reading from the Book of Isaiah 55: 1-11*

_🌿Daily Reading for Sunday January 10, 2021_

*FIRST READING* 

_You all come to the waters; You will live._

*A Reading from the Book of Isaiah 55: 1-11*
All you who thirst, come to the waters. And you who have no money: hurry, buy and eat. Approach, buy wine and milk, without money and without barter.
Why do you spend money for what is not bread, and expend your labor for what does not satisfy? Listen very closely to me, and eat what is good, and then your soul will be delighted by a full measure.
Incline your ear and draw near to me. Listen, and your soul will live. And I will make an everlasting covenant with you, by the faithful mercies of David.
Behold, I have presented him as a witness to the people, as a commander and instructor to the nations.
Behold, you will call to a nation that you did not know. And nations that did not know you will rush to you, because of the Lord your God, the Holy One of Israel. For he has glorified you.
Seek the Lord, while he is able to be found. Call upon him, while he is near.
Let the impious one abandon his way, and the iniquitous man his thoughts, and let him return to the Lord, and he will take pity on him, and to our God, for he is great in forgiveness.
For my thoughts are not your thoughts, and your ways are not my ways, says the Lord.
For just as the heavens are exalted above the earth, so also are my ways exalted above your ways, and my thoughts above your thoughts.
And in the same manner as rain and snow descend from heaven, and no longer return there, but soak the earth, and water it, and cause it to bloom and to provide seed to the sower and bread to the hungry,
so also will my word be, which will go forth from my mouth. It will not return to me empty, but it will accomplish whatever I will, and it will prosper in the tasks for which I sent it. 

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்*_என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்._*🕯️மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11

*📖நற்செய்தி வாசகம்*

_என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்._

*🕯️மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11*
அக்காலத்தில் யோவான், என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்'' எனப் பறை சாற்றினார். அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

இரண்டாம் வாசகம் இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் சான்று பகர்கின்றன. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-9 அன்பார்ந்தவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு._____நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியோவா 1: 29அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான்,``இதோ கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்'' என்றார். அல்லேலூயா.

இரண்டாம் வாசகம் 

இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் சான்று பகர்கின்றன. 

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-9 
அன்பார்ந்தவர்களே, இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் என தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதைவிட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
_____
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 29
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான்,``இதோ கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்'' என்றார். அல்லேலூயா.

பதிலுரைப் பாடல் எசா 12: 2-3. 4. 5-6 பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்.

பதிலுரைப் பாடல் 

எசா 12: 2-3. 4. 5-6 

பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர். 
2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். -பல்லவி 

4 அந்நாளில் நீங்கள் சொல்வதாவது; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்;
அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். -பல்லவி 

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.
6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். -பல்லவி

10/01/2021 ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா, ஞாயிறு*முதல் வாசகம் நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; நீங்கள் வாழ்வீர்கள். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11

*🌿10/01/2021 ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு விழா, ஞாயிறு*

முதல் வாசகம் 

நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; நீங்கள் வாழ்வீர்கள். 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-11 
ஆண்டவர் கூறுவது: தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவி கொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றும் உள்ள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிற இனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை. 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.