Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, August 22, 2021

ஆகஸ்ட் 23 : நற்செய்தி வாசகம்குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு!✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 13-22

ஆகஸ்ட்  23  :  நற்செய்தி வாசகம்

குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு!

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 13-22
அக்காலத்தில்

இயேசு கூறியது: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை.

வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களை விட இரு மடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.

குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா? யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா?

எனவே பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன் மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார். திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மீதும் ஆணையிடுகிறார். வானத்தின்மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள்மீதும் ஆணையிடுகிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 23 : பதிலுரைப் பாடல்திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.

ஆகஸ்ட்  23  :  பதிலுரைப் பாடல்

திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.
அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.
2
இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! - பல்லவி

3
நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
4
ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். - பல்லவி

5
அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வாராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவாராக!
6a
அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்;
9b
இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

ஆகஸ்ட் 23 : முதல் வாசகம்கடவுளிடம் திரும்பி வந்த நீங்கள் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5, 8-10

ஆகஸ்ட்  23  :   முதல் வாசகம்

கடவுளிடம் திரும்பி வந்த நீங்கள் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5, 8-10
சகோதரர் சகோதரிகளே,

தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மன உறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம்.

கடவுளின் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டுவந்தோம். உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

எப்படியெனில் ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்துள்ளது. எனவே இதைப்பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம் புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப்போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 23rd : GospelAlas for you, blind guides!A Reading from the Holy Gospel according to St.Matthew 23:13-22

August 23rd :   Gospel

Alas for you, blind guides!

A Reading from the Holy Gospel according to St.Matthew 23:13-22
Jesus said: ‘Alas for you, scribes and Pharisees, you hypocrites! You who shut up the kingdom of heaven in men’s faces, neither going in yourselves nor allowing others to go in who want to.
  ‘Alas for you, scribes and Pharisees, you hypocrites! You who travel over sea and land to make a single proselyte, and when you have him you make him twice as fit for hell as you are.
  ‘Alas for you, blind guides! You who say, “If a man swears by the Temple, it has no force; but if a man swears by the gold of the Temple, he is bound.” Fools and blind! For which is of greater worth, the gold or the Temple that makes the gold sacred? Or else, “If a man swears by the altar it has no force; but if a man swears by the offering that is on the altar, he is bound.” You blind men! For which is of greater worth, the offering or the altar that makes the offering sacred? Therefore, when a man swears by the altar he is swearing by that and by everything on it. And when a man swears by the Temple he is swearing by that and by the One who dwells in it. And when a man swears by heaven he is swearing by the throne of God and by the One who is seated there.’

The Word of the Lord.

August 23rd : Responsorial Psalm Psalm 149:1-6,9The Lord takes delight in his people.or Alleluia!

August 23rd :  Responsorial Psalm 

Psalm 149:1-6,9

The Lord takes delight in his people.
or Alleluia!
Sing a new song to the Lord,
  his praise in the assembly of the faithful.
Let Israel rejoice in its Maker,
  let Zion’s sons exult in their king.

The Lord takes delight in his people.
or Alleluia!

Let them praise his name with dancing
  and make music with timbrel and harp.
For the Lord takes delight in his people.
  He crowns the poor with salvation.

The Lord takes delight in his people.
or Alleluia!

Let the faithful rejoice in their glory,
  shout for joy and take their rest.
Let the praise of God be on their lips:
  this honour is for all his faithful.

The Lord takes delight in his people.
or Alleluia!

Gospel Acclamation Jn17:17

Alleluia, alleluia!
Your word is truth, O Lord:
consecrate us in the truth.
Alleluia!

August 23rd : First ReadingYou broke with idolatry when you were converted to God.A Reading from the First Letter of St.Paul to the Thessalonians 1:1-5,8-10

August 23rd :  First Reading

You broke with idolatry when you were converted to God.

A Reading from the First Letter of St.Paul to the Thessalonians 1:1-5,8-10 
You broke with idolatry when you were converted to God.

From Paul, Silvanus and Timothy, to the Church in Thessalonika which is in God the Father and the Lord Jesus Christ; wishing you grace and peace from God the Father and the Lord Jesus Christ.
  We always mention you in our prayers and thank God for you all, and constantly remember before God our Father how you have shown your faith in action, worked for love and persevered through hope, in our Lord Jesus Christ.
  We know, brothers, that God loves you and that you have been chosen, because when we brought the Good News to you, it came to you not only as words, but as power and as the Holy Spirit and as utter conviction. And you observed the sort of life we lived when we were with you, which was for your instruction, since it was from you that the word of the Lord started to spread – and not only throughout Macedonia and Achaia, for the news of your faith in God has spread everywhere. We do not need to tell other people about it: other people tell us how we started the work among you, how you broke with idolatry when you were converted to God and became servants of the real, living God; and how you are now waiting for Jesus, his Son, whom he raised from the dead, to come from heaven to save us from the retribution which is coming.

The Word of the Lord.