Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, January 7, 2021

GOSPEL* _The leprosy leaves him._*🕯️A Reading from the Holy Gospel according to Luke 5:12-16*

*📖GOSPEL* 

_The leprosy leaves him._

*🕯️A Reading from the Holy Gospel according to Luke 5:12-16*
Now it happened that Jesus was in one of the towns when suddenly a man appeared, covered with a skin-disease. Seeing Jesus he fell on his face and implored him saying, 'Sir, if you are willing you can cleanse me.'
He stretched out his hand, and touched him saying, 'I am willing. Be cleansed.' At once the skin-disease left him.
He ordered him to tell no one, 'But go and show yourself to the priest and make the offering for your cleansing just as Moses prescribed, as evidence to them.'
But the news of him kept spreading, and large crowds would gather to hear him and to have their illnesses cured,
but he would go off to some deserted place and pray. 

*The Gospel of the Lord* 

I believe in God, /....

RESPONSORIAL* Respons : Jerusalem! Praise the Lord!Or Alleluia !*Psalms 147:12-13, 14-15, 19-20*

*🍁RESPONSORIAL* 

Respons : Jerusalem! Praise the Lord!
Or Alleluia !

*Psalms 147:12-13, 14-15, 19-20*
Praise Yahweh, Jerusalem, Zion, praise your God.
For he gives strength to the bars of your gates, he blesses your children within you, (Respons) 

he maintains the peace of your frontiers, gives you your fill of finest wheat.
He sends his word to the earth, his command runs quickly, (Respons) 

He reveals his word to Jacob, his statutes and judgements to Israel.
For no other nation has he done this, no other has known his judgements. (Respons)
___ 

*🌿Gospel Acclamation* 

```Alleluia, alleluia! Jesus preached the gospel of the kingdom of heaven; He healed all the sick seconds that were among the people. Alleluia!```

FIRST READING* _The Holy Spirit, the water and the blood testify that Jesus is Lord._*A Reading from the Book of 1 John 5:5-13*

_🌿Daily Reading for Friday January 8, 2021_

*FIRST READING* 

_The Holy Spirit, the water and the blood testify that Jesus is Lord._

*A Reading from the Book of 1 John 5:5-13*
Who can overcome the world but the one who believes that Jesus is the Son of God?
He it is who came by water and blood, Jesus Christ, not with water alone but with water and blood, and it is the Spirit that bears witness, for the Spirit is Truth.
So there are three witnesses,
the Spirit, water and blood; and the three of them coincide.
If we accept the testimony of human witnesses, God's testimony is greater, for this is God's testimony which he gave about his Son.
Whoever believes in the Son of God has this testimony within him, and whoever does not believe is making God a liar, because he has not believed the testimony God has given about his Son.
This is the testimony: God has given us eternal life, and this life is in his Son.
Whoever has the Son has life, and whoever has not the Son of God has not life.
I have written this to you who believe in the name of the Son of God so that you may know that you have eternal life. 

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம் தொழுநோய் அவரை விட்டு நீங்கிற்று. + லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 12-16

நற்செய்தி வாசகம் 

தொழுநோய் அவரை விட்டு நீங்கிற்று. 

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 12-16 
அக்காலத்தில் இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என மன்றாடினார். இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!'' என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று. இயேசு அவரிடம், இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்'' என்று கட்டளையிட்டார். ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்துகொண்டிருந்தார்கள். அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பதிலுரைப் பாடல் பல்லவி: எருசலேமே உன் ஆண்டவரைப் போற்றுவாயாகஅல்லது: அல்லேலூயா. திருப்பாடல் 147:12-13, 14-15, 19-20

பதிலுரைப் பாடல் 

பல்லவி: எருசலேமே உன் ஆண்டவரைப் போற்றுவாயாக
அல்லது: அல்லேலூயா. 

திருப்பாடல் 147:12-13, 14-15, 19-20 

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!
சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்;
உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். -பல்லவி 
அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்;
உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்;
அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. -பல்லவி 

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை;
அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது; அல்லேலூயா! -பல்லவி
___ 

நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி : 

அல்லேலுயா அல்லேலுயா "இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்." அல்லேலுயா

🌿08 சனவரி 2021, திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி முதல் வாசகம்: இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன. தூய யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5:5-13

🌿08 சனவரி 2021, திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி 

முதல் வாசகம்: 

இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன. 

தூய யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5:5-13 
இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?
நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.
எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன.
தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை.
மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதை விட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார்.
இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை.
கடவுள் நமக்கு நிலை வாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று.
இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார்.
இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்து கொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன். 

இது ஆண்டவரின் அருள்வாக்கு